Search
Filter by Content Type
Generic Filters

ALL ABOUT CMP – 08 AND NEW FILING SYSTEM FOR COMPOSITION DEALERS/CMP – 08 – நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை

CMP - 08 IMAGE

 2019-20ன் முதல் காலாண்டின் விவர அறிக்கை தாக்கல் செய்ய GSTR – 4 ஏன் அமல் செய்யப்படவில்லை ?CMP – 08 என்றால் என்ன?CMP – 08 – ஏன் மற்றும் எப்படி?இது தான் இணக்க வரி முறையின் புது விவர அறிக்கையா, ஆம் என்றால் எவ்வாறு அதை தாக்கல் செய்வது? GST போர்ட்டலில் CMP – 08 எங்கே கொடுக்கப்பட்டிருக்கும்?

இத்தகைய கேள்விகளே இந்நாளில் இணக்க வரி முறையில் வரி செலுத்தும் நபர்கள் மற்றும் பல GST பயிற்சியாளர்களின் மனதில் எழும் கேள்விகளாகும், இவை அனைத்திற்கும் பதிலாக நமது TNGSTPயின் இந்த கட்டுரை உங்களுக்கு வழங்கப்படுகிறது:

அறிவிப்பு எண் 20/2019 CGST Rules, 2019ற்கு செய்யப்படும் 3ஆவது மாற்றங்கள்:

இந்த அறிவிப்பின் 3ஆவது பத்தியில் விதி எண் 62ற்கு கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது:

  • விதி எண் 62ன் கீழ் இணக்க வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறை அறிவிப்பு எண் 02/2019 மத்திய வரி(விகிதம்) dt.07.03.2019ன் கீழ் விவர அறிக்கை தாக்கல் செய்பவர்களுக்கும் பொருந்தும்.
  • CMP – 02 அல்லது அறிவிப்பு எண் 02/2019 மத்திய வரி(விகிதம்) dt.07.03.2019ன் கீழ் விவர அறிக்கை தாக்கல் செய்பவர்கள் இருவருமே CMP – 08 படிவத்தில் வரி செலுத்திய விவரத்தோடு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்(CMP – 08 ஒரு அறிக்கை மட்டுமே, நமது சமீபத்திய கட்டுரையில் GSTR-  -3B ரிட்டர்ன் அல்ல என்று ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பற்றி கூறியது போல் இதுவும் வெறும் அறிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது) FORM GST CMP – 08 காலாண்டிற்கு ஒரு முறை அந்த காலாண்டு முடிந்ததும் வரும் அடுத்த மாத 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • ஆண்டிற்கு ஒரு முறை அந்த நிதியாண்டு முடிந்ததும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆண்டறிக்கையாக GSTR – 4 தாக்கல் செய்ய வேண்டும்.

எனவே, 2019-20 நிதியாண்டில் இருந்து CMP – 08 காலாண்டிற்கு ஒரு முறையும் GSTR – 4 ஆண்டறிக்கையாக ஆண்டிற்கு ஒரு முறையும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

FORM GST CMP – 08 தாக்கல் செய்வது எப்படி?

அறிவிப்பு எண் 20/2019இல் வழங்கப்பட்ட மாதிரி CMP – 08ஐ(இன்னும் LOGINஇல் CMP – 08 அறிமுகம் செய்யப்படவில்லை) கீழே கொடுக்கப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும்:

Step – 1: தங்கள் GSTIN எண்ணை கீழ் குறிப்பிட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள BOXஇல் நிரப்ப வேண்டும்:

GST CMP-08_Image 1

Step – 2: GSTIN நிரப்பிய பிறகு நிறுவனத்தின் சட்டப் பெயர் மற்றும் வர்த்தக பெயர் தானாகவே பிரதிபலிக்கும், கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல், 2(c) மற்றும்  2(d) பகுதி, அதாவது, ARN எண் மற்றும் தாக்கல் செய்த தேதி இரண்டும் அறிக்கை தாக்கல் செய்தபின் தானாகவே நிரம்பும்.

CMP - 08 Image 2

Step – 3: Table 3இல் சுய மதிப்பீடு செய்த கீழ்க்கண்ட வரி விவரங்கள் நிரப்பப்பட வேண்டும்:
  • வரி செலுத்த வேண்டிய விநியோக விவரங்கள்
  • RCM முறையில் வரி செலுத்த வேண்டிய உள்ளீட்டு விநியோகங்கள் மேலும் இறக்குமதி செய்யப்பட்ட சேவைகள்
  • செலுத்த வேண்டிய வரி
  • செலுத்த வேண்டிய வரி மீதான வட்டி( அறிக்கை காலம் தாழ்த்தி செலுத்த படும் பட்சத்தில்)
  • கடைசி வரிசை, செலுத்திய வரி மற்றும் வட்டித்தொகை, மேலும் தெளிவுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்

CMP - 08 Image 3

Step – 4: இறுதி பகுதி, எப்பொழுதும் போல சரி பார்த்தல் பகுதி, கையொப்பம் இடப்பட வேண்டும், கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள வழிமுறைகளை(Instructions) அவசியம் படிக்கவும்(ஏதேனும் சந்தேகம் இருந்தால் நமது TNGSTP Forum பகுதியில் தங்களது கேள்விகளை கேளுங்கள்)
CMP - 08 Image 4

நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்:

சிக்கல்களின் விவரம்
GST HELPDESK (AS ON 17.07.2019)வழி அறியப்பட்ட தீர்வு
2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டிற்காக CMP – 08 தாக்கல் செய்ய வேண்டிய இறுதி நாள் 18.07.2019, ஆனால் படிவம் இன்னும் வலைத்தளத்தில் வழங்கப்படவில்லை தொழில்நுட்ப சிக்கல்களால் இன்னும் CMP – 08 வழங்கப்படவில்லை, 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான CMP – 08 தாக்கல் செய்வதற்கான காலம் நீட்டிக்கப்படும்.
காலாண்டு அறிக்கையை GSTR – 4இல் தாக்கல் செய்யலாமா? கூடாது, 2019-20இல் இருந்து காலண்டறிக்கைக்கு CMP – 08 தான் பயன்படுத்த வேண்டும்.
2018-19ற்கான பழைய காலாண்டறிக்கையை தாக்கல் செய்ய GSTR – 4 பயன்படுத்தலாமா? இப்போதைக்கு Format மாற்றப்படுவதால் GSTR – 4 loginஇல் கொடுக்கப்படவில்லை, GSTR – 4 வந்ததும் அதில் 2018-19ற்கான பழைய விவர அறிக்கைகளை தாக்கல் செய்து கொள்ளலாம்.

 

CMP – 08 தாக்கல் செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டதை பற்றிய அறிவுப்புகளின் உடனடி விவரம் அறிய TNGSTP உடன் இணைந்திருங்கள்.

********************

Why GSTR – 4 is not enabled in composition scheme dealer’s returns page for filing the return for the period April 2019 – June 2019?What is CMP – 08? Why come and how CMP – 08?Is this a new return, if so, How to file CMP – 08? Where can we find GST CMP – 08 in our GST login/portal?

These are the questions running through in the minds of every composition dealer and GST professionals as on date, Here’s the article of our TNGSTP on this context which will answer all your questions:

Notification No.20/2019 – 3rd Amendment to CGST Rules, 2019:

Said Notification in its point no.3 amended Rule 62 and provided as follows:

  • The return filing procedure under Rule 62 prescribed for composition dealers is also applicable for dealers availing the benefit of Notification No.02/2019 Central Tax (Rate) dt.07.03.2019
  • Dealers availing Composition scheme u/s.10 and vide Notification No.02/2019 Central Tax (Rate) dt.07.03.2019 should file a statement (again as said in our latest article discussing a case law – GSTR – 3B is not  a return, This CMP – 08 is also a statement and not a return) containing the details of payment of self-assessed tax in FORM GST CMP – 08 on a quarterly basis within the 18th of the month succeeding such quarter
  • GSTR – 4 is to be filed on an annual basis within 30th April following the end of the particular Financial year

Hence, From Financial year 2019-20, CMP – 08 is to be filed on a quarterly basis(not GSTR – 4) and GSTR – 4 is to be filed yearly once as an annual return

How to file FORM GST CMP – 08?

Based on  the model CMP – 08 released by CBIC in Notification No.20/2019(as the original form is yet to be made available in login), the following steps are explained to clarify the process of filing GST CMP – 08:

Step – 1: Enter the GSTIN number, in the box given(as shown in the image given below)

 

GST CMP-08_Image 1

Step – 2: Once the GSTIN is entered, details w.r.t Legal name and trade name will be auto filled. As given in the image below, 2(c) and 2(d) part of CMP – 08 i.e., ARN number and date of filing will be updated once the filing is done.

CMP - 08 Image 2

Step – 3: Table 3 contains the main details of the form which has a summary of the self-assessed tax liability. Taxpayer should provide the following details:
  • outward supplies on which tax is payable
  • inward supplies on which tax is payable on a reverse charge and cases of import of services
  • tax payable
  • interest payable, if any (in case return is filed after the due date) 
  • Final row, tax and interest paid should be reported. Refer image below,for more clarity
CMP - 08 Image 3Step – 4: Final part is the verification part, as usual and signature to be affixed.Instructions given in the below image to be compulsorily read, for more clarity on this form( In case of doubts w.r.t this part, Raise the questions in TNGSTP’s forum for getting it clarified)
CMP - 08 Image 4

Practical problems and solutions:

NATURE OF PROBLEM
SOLUTION PROVIDED BY GST HELPDESK (AS ON 17.07.2019)
CMP – 08’s due date for the quarter April 2019 – June 2019 is 18.07.2019, but the form is yet to be made available for filing in login CMP – 08 form is yet to be released due to technical issues, due date will be extended for filing CMP – 08 for the first quarter of 2019-20
Can GSTR – 4 be opted for filing quarterly returns? No, from 2019-20 only GST CMP – 08 can be used
Can GSTR – 4 be used for filing pending quarterly returns of 2018-19? The form is not made available now as the format is being changed right now, once it is made available, old returns of 2018-19 can be filed using GSTR – 4.

 

Stay connected with TNGSTP to get updates reg the Notifications extending the due date of CMP – 08.

CA Durai


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”