Search
Filter by Content Type
Generic Filters

Gist of CBIC Notifications issued on 30.09.2019/30.09.2019 அன்று வெளிவந்த முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு

This post of our TNGSTP is a short gist of Notifications issued on 30.09.2019 by CBIC for giving effect to the change in legal provisions, Goods and services tax rates proposed by the 37th GST council meeting is explained in short in Tamil for the easy understanding of our members along with the link to the original Notification for their ready reference:

நமது TNGSTPயின் இந்த பதிவு CBIC 30.09.2019 அன்று, 37 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தால் மாற்றியமைக்கப்பட்ட சட்ட விதிகள் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களுக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக வெளியிட்ட அறிவிப்புகளின் சிறு விளக்கங்கள் ஆகும். மேலும் அறிவிப்பிற்கான Link நமது உறுப்பினர்களின் உடனடி விவரத்திற்காக வழங்கப்பட்டுள்ளது:

Type அறிவிப்பு எண் சட்டம் பொருள்
Notification 43/2019 Central Tax காற்றூட்டப்பட்ட நீர்(aerated drinks) விநியோகத்திற்கு இணக்க வரி தேர்வு செய்ய முடியாதென வழங்கப்பட்டுள்ளது
Notification 14/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 01/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சரக்குகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Notification 15/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 02/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டப்படி காய்ந்த புளி மற்றும் செடிகளின் இலை, பட்டை மற்றும் பூவால் செய்யப்பட்ட தட்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
Notification 16/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 03/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு HELP/OALP ப்ரொஜெக்ட்டின் கீழ் செய்யப்படும் விநியோகத்திற்கும் குறைக்கப்பட்ட வரி விகிதம் 2.5% விதிக்கப்படும் என்று வழங்கப்பட்டுள்ளது
Notification 17/2019 Central Tax (Rate) 31.12.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 26/2018 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நபர்கள் விநியோகிக்கும் தங்கம் மட்டும் அல்லாது வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றிற்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது
Notification 18/2019 Central Tax (Rate) சேவைகளும் விநியோகம் செய்யும் வரி செலுத்துபவர்களுக்கு இணக்க வரி திட்டத்தை நீட்டித்த, 07.03.19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 02/2019 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு காற்றூட்டப்பட்ட நீர்(aerated drinks) விநியோகத்திற்கு இணக்க வரி தேர்வு செய்ய முடியாதென வழங்கப்பட்டுள்ளது
Notification 19/2019 Central Tax (Rate) ஒருங்கிணைந்த நாடுகளின்(UN) உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு வழங்கப்படும் விநியோகம் அனைத்திற்கும் CGST வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
Notification 20/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 11/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Notification 21/2019 Central Tax (Rate) 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Notification 22/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 13/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகள் சிலவற்றிற்கு 9(3) பிரிவு RCM முறையில் வரி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Notification 23/2019 Central Tax (Rate) 25.1.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 4/2018 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 01.04.2019ற்கு பிறகு விநியோகம் செய்யப்பட்ட கட்டுமான உரிமம் அந்த அறிவிப்பின் கீழ்(4/2018) வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Notification 24/2019 Central Tax (Rate) 29.3.19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 7/2019 Central Tax (Rate)இல் சிமெண்ட் சம்மந்தப்பட்ட விவரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Notification 25/2019 Central Tax (Rate) CGST சட்டத்தின் பிரிவு எண் 7(2)ன் படி மதுபான விநியோகத்திற்கான உரிமம் வழங்குதல் சரக்குகள் விநியோகமோ அல்லது சேவை விநியோகமோ அல்ல என்று வழங்கப்பட்டுள்ளது
Notification 04/2019 Integrated Tax 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டது போல் IGST சட்டத்தின் பிரிவு எண் 13(13)ன் படி R&D சேவைகளின் விநியோகத்திற்கான இடம் தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது
Notification 14/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 01/2017 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சரக்குகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Notification 15/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 02/2017 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டப்படி காய்ந்த புளி மற்றும் செடிகளின் இலை, பட்டை மற்றும் பூவால் செய்யப்பட்ட தட்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
Notification 16/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 03/2017 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு HELP/OALP ப்ரொஜெக்ட்டின் கீழ் செய்யப்படும் விநியோகத்திற்கும் குறைக்கப்பட்ட வரி விகிதம் 2.5% விதிக்கப்படும் என்று வழங்கப்பட்டுள்ளது
Notification 17/2019 Integrated Tax(Rate) 31.12.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 26/2018 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நபர்கள் விநியோகிக்கும் தங்கம் மட்டும் அல்லாது வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றிற்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது
Notification 18/2019 Integrated Tax(Rate) ஒருங்கிணைந்த நாடுகளின்(UN) உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு வழங்கப்படும் விநியோகம் அனைத்திற்கும் IGST வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
Notification 19/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 08/2017 Integrated Tax (Rate) இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Notification 20/2019 Integrated Tax(Rate) 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Notification 21/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/2017 Integrated Tax (Rate) இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகள் சிலவற்றிற்கு 9(3) பிரிவு RCM முறையில் வரி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Notification 22/2019 Integrated Tax(Rate) 25.1.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 4/2018 Integrated Tax (Rate) இல் மாற்றம் செய்யப்பட்டு 01.04.2019ற்கு பிறகு விநியோகம் செய்யப்பட்ட கட்டுமான உரிமம் அந்த அறிவிப்பின் கீழ்(4/2018) வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Notification 23/2019 Integrated Tax(Rate) 29.3.19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 7/2019 Integrated Tax (Rate) இல் சிமெண்ட் சம்மந்தப்பட்ட விவரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Notification 24/2019 Integrated Tax(Rate) CGST சட்டத்தின் பிரிவு எண் 7(2)ன் படி மதுபான விநியோகத்திற்கான உரிமம் வழங்குதல் சரக்குகள் விநியோகமோ அல்லது சேவை விநியோகமோ அல்ல என்று வழங்கப்பட்டுள்ளது
Notification 02/2019 Compensation Cess (Rate) 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டது படி 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 01/2017 Compensation Cess (Rate) இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Notification 03/2019 Compensation Cess (Rate) Inverted duty structure முறையின் கீழ் புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த compensation cess refund ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

CS Srividya Subramaniam

GST rates of goods and services recommended by 37th GST council meeting

Sep 24, 2019
0
37th GST meeting_rate changes_TNGSTP

20.09.2019 அன்று நிதி அமைச்சர் திருமதி .நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் நடைபெற்ற 37ஆவது GST மன்ற குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட சில முக்கிய சரக்குகள் மற்றும் சேவைகளின் வரி விகித மாற்றங்களை குறித்து இந்த கட்டுரையில் காணலாம்:

சரக்குகளுக்கான வரி விகித மாற்றங்கள் 

வரி விகிதம் குறைக்கப்பட்ட சரக்குகளின் விவரம்:

S.No
சரக்குகளின் பெயர்
நடப்பு GST விகிதம்
குறைக்கப்பட்டள்ள புதிய GST விகிதம்
1. Parts of Slide Fasteners (ஸ்லைடு ஃபாஸ்டென்சர்   களின்பாகங்கள்) 18% 12%
2. கடற்சார் எரிபொருட்கள் 0.5% (FO) 18% 5%
3. கிரைண்டர்கள் (Wet Grinder )கல்லை அரைப்பானாக கொண்டது 12% 5%
4. i. காயவைக்கப்பட்ட புளி

ii. இலைகள் / பூக்கள் / பட்டைகளால் ஆன தட்டுகள் மற்றும் கோப்பைகள்

5% NIL RATED
5. அறுத்து மெருகூட்டப்பட்டஅரை விலைமதிப்பற்ற கற்கள் 3% 0.25%
6. ஹைட்ரோகார்பன் ஆய்வு உரிமக் கொள்கையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெட்ரோலியம் தொடர்பான குறிப்பிட்ட பொருட்கள் Present Applicable rates 5%
7. 10 பேருக்கு மேல் 13 பேர் வரை சுமந்து செல்ல கூடிய 4000MMக்கு மிகாத பயணிகளை சுமந்து செல்லும் 1500CC இயந்திர திறன் கொண்ட டீசல் வண்டிகள் மற்றும் 1200CC இயந்திர திறன் கொண்ட பெட்ரோல் வண்டிகள்  15% COMPENSATION CESS 1% COMPENSATION CESS FOR PETROL VEHICLES AND 3% COMPENSATION CESS FOR DIESEL VEHICLES

 

GST வரி விலக்களிக்கப்பட்டுள்ள சரக்குகள்:

  1. i) உள்நாட்டில் தயாரிக்கப்படாத குறிப்பிட்ட பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் (2024 வரை)
  2. ii) குறிப்பிட்ட திட்டங்களுக்காக Food and Agriculture Organisation (FAO) விற்கு விநியோகம் செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள்

GST வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள சரக்குகள்:

S.No
சரக்குகளின் பெயர்
நடப்பு GST விகிதம்
குறைக்கப்பட்டள்ள புதிய GST விகிதம்
1. ரயில்வே வண்டிகள், பெட்டிகள், புழக்கத்தில் இருக்கும் சரக்குகள் (சேர்த்துவைத்துள்ள ITCக்கு refund வழங்காமல்) 5%  12% (இந்த பொருட்களை விநியோகம் செய்பவர்களின் ITC ACCUMULATION பிரச்னையை தீர்க்கவே வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது)
2. காபி தேயிலை நச்சூட்டப்பட்ட (caffeinated beverages) பானங்கள் 18% 28% + 12% COMPENSATION CESS

இதர மாற்றங்கள் மற்றும் விளக்கங்கள்:

  • காற்றூட்டப்பட்ட பானங்கள் (aerated drinks) தயாரிப்பவர்கள் இணக்க வரியின் கீழ் வரி செலுத்த முடியாது
  • புகையிலை பொருட்களுக்கு compensation cess refund வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.(inverted duty structure ஆக இருந்தால்)
  • HSN CODE 8424ன் கீழ் வரும் இயந்திர தெளிப்பான்களுக்கு 12% GST விதிக்கப்படும்
  • சோலார் வாட்டர் ஹீட்டர் போன்ற சூரிய சக்தி சார்ந்த சாதனங்களுக்கான சூரிய சக்தி வெளியேற்றக் குழாய்கள் போன்ற பாகங்களுக்கு 5% GST விதிக்கப்படும்
  • பாதாம் பால் HSN CODE 22029990இல் வகைப்படுத்தப்பட்டு 18% GST விதிக்கப்படும்.
  • கடற்படைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கு IGSTயில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும்

சேவைகளுக்கான வரி விகித மாற்றங்கள்

துறை வாரியான வரி விலக்கு/வரி விகித மாற்றங்கள்/ITC ELIGIBILITY CRITERIA

HOSPITALITY மற்றும் சுற்றுலா துறை:
  • ஹோட்டல் விடுதிகளின் சேவைகளுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டு கீழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது:
ஒரு யூனிட்டுக்கான பரிவர்த்தனை மதிப்பு (Rs.)
GST விகிதம்
Rs.1000 அல்லது அதற்கும் குறைவு Nil 
Rs.1001 முதல் Rs.7500 12%
Rs.7501 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பு 18%

 

  • Rs.7501க்கு மேல் தினசரி யூனிட் கட்டணத்தைக் கொண்ட வளாகங்களைத் தவிர ,மற்ற வெளிப்புற கேட்டரிங் சேவைகளுக்கான GST தற்போதைய 18%(with ITC)இல் இருந்து 5%(without ITC) ஆக குறைக்கப்படுகிறது.

Job work சேவைகள்:

S.No
சில்லறை வேலையின் வகை
நடப்பு GST விகிதம்
குறைக்கப்பட்டள்ள புதிய GST விகிதம்
1. வைரங்கள் தொடர்புடைய சில்லறை வேலை சேவைகள் 5%  1.5%
2. பொறியியல் துறையில் காணப்படும் இயந்திரம் தொடர்புடைய சில்லறை வேலை (பேருந்தின் பாகங்களை தொடர்புடைய வேலைகள் தவிர) 18% 12%

கிடங்குகள்:

தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள், மசாலாப் பொருட்கள், கரும்பு, வெல்லம், பச்சை காய்கறி, இழைகளாளான பருத்தி, ஆளி, சணல் போன்றவை, இண்டிகோ, உற்பத்தி செய்யப்படாத புகையிலை, வெற்றிலை, டெண்டு இலைகள், அரிசி, காபி மற்றும் தேநீர் போன்றவற்றை சேமிப்பதற்கும் கிடங்கில் பத்திரப்படுத்துவதற்கும் GST வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து  சேவைகள்:

 

வான்வழி அல்லது கடல்வழி ஏற்றுமதி FREIGHT மீது வழங்கப்பட்ட GST வரிவிலக்கு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு 30.09.2020 வரை வழங்கப்பட உள்ளது.

இதர சேவை தொடர்பான மாற்றங்கள்:

  • சரக்குகள் அல்லது சேவைகளை வழங்குபவர் மற்றும் பெறுபவர் இருவரும் வரிக்குட்பட்ட இடத்தில் இல்லையெனில், அந்த பரிவர்த்தனையை மேற்கொண்ட இடைத்தரகரின் சேவைகளுக்கும் வரி விலக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
  • செயல்பாட்டு தெளிவின்மையை அகற்ற உரிம கட்டணம் பெற்று கொண்டு மாநில அரசுகளால் மதுபான உரிமம் வழங்கப்படுதலை விநியோகம் இல்லை என்று குறிப்பிட்டு  அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
  • securities lending services எனப்படும் பத்திரங்களை கடனாக வழங்கும் சேவைகளுக்கு RCM முறையில் 18% GST விதிக்கப்படும்  எனவும் RCM அறிமுகம் செய்யப்படுவதற்கு முந்தைய காலத்துக்கு பொதுவாக பின்பற்றும் forward charge முறையில் வரி விதிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது 
  • மேற்கூறிய சேவைக்கு IGST செலுத்த வேண்டும், வரி செலுத்துபவர் தவறாக CGST,SGST ஆக செலுத்தி இருந்தால் மறுபடி IGST செலுத்த தேவை இல்லை 
  • Body corporate அல்லாத GSTயில் பதிவு செய்த நபர்கள் Body corporateகளுக்கு வாகனங்களை வாடகைக்கு விடும் சேவை செய்யும் போது 5% GST RCM முறையில் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விகிதம் அனைத்தும் அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் மூலம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தகவல்களுக்கு இணைந்திருங்கள்!!!

CS ஸ்ரீவித்யா

 

Detailed Recommendations of 37th GST Council Meeting/37ஆவது GST மன்ற குழு சந்திப்பின் பரிந்துரைகளின் விவரம்

Sep 21, 2019
0
37th GST council meeting recommendations_TNGSTP

27.07.2019 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இன்று 20.09.2019 அன்று கோவாவில் 37ஆவது GST மன்ற குழு கூட்டம் நிதி அமைச்சர் திருமதி .நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.இதில் கொண்டு வரப்பட்ட முக்கிய முடிவுகளின் எளிமையான விளக்கத்தை இந்த கட்டுரையில் காணலாம்:

சட்ட செயல்முறைகள் தொடர்பான மாற்றங்கள்:

  • 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டிற்கு இணக்க வரியில் வரி செலுத்துபவர்களுக்கு ஆண்டறிக்கை தாக்கல் செய்வதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது
  • ஒட்டுமொத்த விற்றுமுதல் (Aggregate turnover) ரூபாய் 2 கோடி வரை உள்ள வரி செலுத்துபவர்களுக்கு 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை விருப்பத்தேர்வு முறையில்  தாக்கல் செய்யப்படலாம், கட்டாயம் இல்லை என்று வழங்கப்பட்டுள்ளது
  • ஒரு அலுவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆண்டறிக்கை மற்றும் GSTR – 9C reconciliation statement எளிமையாக்கப்படுதல் குறித்து ஆராயப்படும்
  • மேலுமுறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படாத காரணத்தால் மேல்முறையீட்டு ஆணையத்தின் ஆணைக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வரி செலுத்துபவர்கள் தங்கள் விநியோக விவரங்களை சரியான நேரத்திற்குள் தாக்கல் செய்வதை ஊக்குவிப்பதற்கு பிரிவு எண் 37ன் படி தாக்கல் செய்யவேண்டிய GSTR -1 இல் விநியோக விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் அந்த விநியோகத்திற்கான உள்ளீட்டு வரி வரவு(Input tax credit) எடுத்துக்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
  • முன்பு அக்டோபர் 2019 முதல் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்த  புதிய விவர அறிக்கை தாக்கல் செய்யப்படும் முறை, வரி செலுத்துபவர்கள் நன்றாக பழக்கப்பட்டு தெளிவுறுவதற்காக ஏப்ரல் 2020இல் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.இதன் காரணமாக அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை GSTR – 1 மற்றும் 3B தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் தொடர்பான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது
  • சட்டத்தின் சரிசமமான பயன்பாட்டை உறுதி செய்ய GST RFD  – 01A தாக்கல் செய்தல் மேலும் 18.07.2019 அன்று வழங்கப்பட்ட ITES சேவைகள் தொடர்பான சுற்றறிக்கை தொடர்பாக தெளிவுகள் வழங்க சுற்றறிக்கைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 28.06.2019 அன்று வழங்கப்பட்ட விநியோகத்திற்கு பின் வழங்கப்படும் தள்ளுபடி தொடர்பான சுற்றறிக்கை எண் 105/2019 திரும்ப பெறப்பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது தொடர்பாக சம்மந்தப்பட்ட CGST சட்டம், IGST சட்டம் மற்றும் தொடர்புடைய SGST சட்டத்திலும் தகுந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று வழங்கப்பட்டுள்ளது
  • ஒரே அதிகாரியின் கீழ் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த REFUND முறை 24.09.2019 அன்றில் இருந்து அறிமுகம் செய்யப்படவுள்ளது.
  • GST பதிவோடு ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் REFUND பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குதல் தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது
  • போலியான INVOICE மூலமாக மோசடி செய்து REFUND பெறுவதை தவிர்க்க அத்தகைய வரி செலுத்துபவர்கள் ITC வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள் பற்றிய தெளிவான விவரம் அறிய இணைந்திருங்கள்!!

CS ஸ்ரீவித்யா

SIMPLIFIED EXPLANATION OF CGST INPUT CREDIT RULES WITH EXAMPLES – PART – 1: RULE – 40/உள்ளீட்டு வரி வரவு தொடர்பான CGST விதிகளுக்கான எடுத்துக்காட்டுடன் கூடிய எளிமையான விளக்கங்கள் – பகுதி – 1: விதி – 40

ITC rules explanation image

உள்ளீட்டு வரி வரவு (ITC) தொடர்பான CGST விதிகள் பல GST பயிற்சியாளர்களுக்கு சிக்கலான ஒன்றாகவே உள்ளது.TNGSTPயின் இந்த கட்டுரை தொகுப்பு உள்ளீட்டு வரி வரவு தொடர்பான ஒவ்வொரு விதியையும் விளக்கமாக எடுத்துக்காட்டுடன் எடுத்துரைப்பதாக அமையும்.அந்த வகையில் கட்டுரை தொகுப்பின் முதல் பகுதியாக இணக்க வரி முறையில் இருந்து வழக்கமான வரி செலுத்தும் முறைக்கு மாறிய வரி செலுத்துவோருக்கான ITC போன்ற பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் ITC உரிமை கோருதல் தொடர்பான Rule 40 (விதி 40)ன் குறிப்பிட்ட முக்கிய விதிகள் கீழே விளக்கப்பட்டுள்ளது:

Read more

Important note for Retail traders of own brand rice and pulses/சொந்த BRAND அரிசி, பருப்புகள் விற்பவரா?, நீங்கள் அறிய வேண்டியவை

Important note for Retail traders of own brand rice and pulses

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள்,மாவு, மக்காச்சோளம் போன்றவற்றிற்கு அறிவிப்பு எண்: 02/2017 Central Tax(Rate) dt.28.06.2017ன் படி GSTயில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான புரிதல்.பதிவு செய்யப்பட்ட பிராண்ட் பெயர் அல்லது வர்த்தக பெயர் அல்லாமல் நாம் விநியோகிக்கும் சரக்குகளுக்கும் இந்த விலக்கு உண்டா?பதிவிடாத பிராண்ட் பெயர் அல்லது வர்த்தக பெயரில்லாமல் நமது சொந்த பெயரில் இந்த பொருட்களை வரி விலக்கோடு விநியோகம் செய்யலாமா?

இதன் தெளிவான விளக்கம் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Read more

IS ALL ITeS SERVICES ARE INTERMEDIARY SERVICES?/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து சேவைகளும் இடைத்தரகர் சேவைகளா?

Is all ITeS services are Intermediary services

கால் சென்டர், BPO சேவைகள் போன்ற மிகவும் பிரபலமான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறையின் சில முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருவதாக இந்த கட்டுரை அமையும்:

Read more

Detailed Recommendations of 36th GST Council Meeting/36ஆவது GST மன்ற குழு சந்திப்பின் பரிந்துரைகளின் விவரம்

Jul 27, 2019
0

25.07.2019 அன்று நடைபெறுவதாக இருந்து, ஒத்திவைக்கப்பட்டு பின் இன்று (27.07.2019) அன்று GST மன்ற குழுவின் 36ஆவது சந்திப்பு நடைபெற்றுள்ளது, இந்த சந்திப்பில் செய்யப்பட்ட முக்கிய பரிந்துரைகளை கீழே காண்போம்:

Read more

GST ON SERVICES OF RESIDENT WELFARE ASSOCIATIONS/குடியிருப்போர் நலச்சங்கங்களின் சேவைகளுக்கான GST – நாம் அறிய வேண்டியவை

GST on resident welfare associations_TNGSTP

குடியிருப்போர் நலச் சங்கங்கள் பல வகையான சேவைகளை தங்களது இருப்பிட வாசிகளுக்கு வழங்குகிறது, அத்தகைய சேவைகளுக்காக உறுப்பினர் கட்டணம், சந்தா போன்றவற்றை வசூலிக்கிறது.இந்த சந்தா, உறுப்பினர் கட்டணம் போன்றவற்றிற்காக பெறப்படும் GST குறித்து CBIC தனது சுற்றறிக்கை எண் 109/2019 dt.22.07.2019இல் தெளிவுகளை வழங்கியுள்ளது.அதனை விளக்கமாக இந்த கட்டுரையில் காண்போம்:

Read more

MODEL TEST – I

ALL ABOUT CMP – 08 AND NEW FILING SYSTEM FOR COMPOSITION DEALERS/CMP – 08 – நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை

CMP - 08 IMAGE

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”