Search
Filter by Content Type
Generic Filters

Recent Blogs

Blog Category

ITC on Motor Vehicle- Denied or allowed?

ITC on Motor VehicleITC on Motor Vehicle

இந்த கட்டுரை  மோட்டார் வாகனத்திற்காக செய்த செலவில் உள்ளீடு வரி வரவை எடுக்கலாமா என்பதை அலசுகிறது. முதலில் மோட்டார் வாகனம் GSTயில் பிரிவு 2(76) யில் விளக்கப்படவில்லை  மாறாக பிரிவு 2(28) of  Motor Vehicle Act 1988 சுற்றிக்காட்டுகிறது. அதன்படி  மோட்டார் வாகனம் என்பது Read more

2019யின் அறிக்கைகள் 30-01-19 வரை

Jan 30, 2019
9
Latest NotificationsLatest Notifications

30-1-2019 வரை 2019யின் அறிக்கைகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்படுள்ளது

  • CGST ACT மற்றும் Rule Amendment 2018யை ஒரு சில அறிக்கைகளின் மூலம் 1st Feb 2019 இருந்து  அமுலுக்கு வருகிறது
  • எதிரிடை கட்டணம் பிரிவு 9(4) இந்நாள் வரை தள்ளிவைத்ததை, 1st Feb 2019யில் இருந்து அரசு ரத்து செய்துள்ளது
  • நமது வலை தளத்தின் notifications link யும் பயன்படுத்தி மற்ற அறிக்கைகள் , சுட்டறிக்கைகளை  அறியலாம்
  • IGST சட்டத்தின் கீழ் repeat ஆனதை இங்கு கொடுக்கப்படவில்லை

Read more

Applicability of Reverse Charge Mechanism effective 1st Feb 2019/எதிரிடை கட்டணம் பிரிவு 9(4) படி 1-2-2019 முதல் உள்ளதா?

Applicability of sec9(4) from 1st feb 2019Applicability of sec9(4) from 1st feb 2019

இந்த கட்டுரையில் சமீபத்திய அறிவிப்புகளின் விளைவாக பிரிவு 9(4) கீழ் RCM ( எதிரிடை கட்டணம்)  வருகிற 1-2-2019 முதல் உள்ளதா என்பதை பார்ப்போம்

CGST Amendment Act 2018 படி  இந்த பிரிவு 9(4) ஆனது GST கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஒரு குறிப்பிட்ட வரி செலுத்துவோர் பிரிவுக்கு மட்டும் வரிக்கு உட்படுத்தப்படும் , நோட்டிபிகேஷன் 02/2019, central tax dated 29-1-19 மூலம் இந்த amendment ACT 2018 வருகிற 1-2-19 முதல் அமுலுக்கு வருகிறது . ஆனால் GST கவுன்சில் இது வரை இந்த பிரிவுக்காக பரிந்துரையோ அல்லது நோட்டிபிகேஷனோ கொடுக்கவில்லை

Read more

GST on Free samples/supplies (இலவச மாதிரிகள் /விநியோகங்கள் ) – Part 1

Free Samples and SuppliesFree Samples and Supplies

 

ஒரு புது தயாரிப்பு விற்பனைக்கு வருவதற்கு முன் மாதிரிகளானது (Samples) நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்படும். இது  அந்த தயாரிப்பை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகும்.

மாறாக இலவச விநியோகமானது(Free supplies) நுகர்வோருக்கு கூடுதல் தயாரிப்புகளை வழங்குதல் ஆகும்.

எ கா : 1 சோப்பு வாங்கினால் 2 சோப்பு இலவசம்.

இந்த எடுத்து காட்டில் 1 சோப்பை பணம் கொடுத்து வாங்கினால் 2 சோப்புகள் இலவசமாக கொடுக்கப்படும்.

இந்த கட்டுரையின் வாயிலாக நாம் மேற்குறிய விநியோகங்கள்   GST வரி விதிப்பிற்குள் வருகிறதா என்பதை தெரிந்து கொள்வோம்.

GST சட்டத்தின் முன் இருந்த வரி கட்டமைப்புகளின் தாக்கம்

இரு விதமான வரிகளின் தாக்கமானது இருந்தது.

  1. Excise /கலால் சட்டம் : தயாரித்த பொருளை விற்றாலும் விற்காவிட்டாலும் கலால் வரியானது உண்டு.
  2. VAT (மதிப்பு கூட்டு வரிகள்)/CST (மத்திய விற்பனை வரி):விற்பனை நடந்தால் இந்த வரியானது உண்டு.  இங்கு விற்பனை என்பது பண மதிப்பிற்காக பொருட்களின் உரிமையானது மற்றுமொருவருக்கு மாற்றப்படும் பொது நடப்பதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது விற்பனையாக கருதமுடியாது.  அதனால் அவ்வாறான திட்டங்களில் தரப்படும் பொருட்களுக்கு VAT /CST ஆனது கிடையாது.

GST கட்டமைப்பில் இந்த இலவசங்களால் எழுப்பப்படும் கேள்விகள் என்ன?

பொதுவாக GST ல்  பண மதிப்பிற்காக சரக்கு அல்லது சேவைகளைவிநியோகித்தால் அதற்கு வரி உண்டு.  இங்கு பண மதிப்பு(Consideration) என்பது விற்பனை செய்தவருக்கு பெறுநர் பணம் தரவேண்டும்.

ஆயினும் CGST Act 2017 Schedule I படி பணமதிப்பு இல்லாமல் நடக்கும் பரிவர்த்தனையும் விநியோகமாக கருதப்படுகிறது.வியாபார  சொத்துக்களை நிரந்தரமாக அல்லது தீர்வு முறையில் மாற்றப்படும் நிலையில், அந்த சொத்துக்களுக்கான உள்ளிட்டு வரியை வரவாக எடுத்திருந்தால் அது விநியோகமாக கருதப்படும்.  இந்த கருத்தானது நமக்கு இந்த விதமான இலவச விநியோகத்திற்கான வரியை பற்றிய கேள்விகளை நம் மனதில் எழுப்புகிறது.

இலவச மாதிரிகளுக்கும் / விநியோகங்களும் GST வரி செலுத்தவேண்டுமா ?
  • இலவச மாதிரிகள் இரண்டு வகைப்படும்.
  1. மாதிரிகளாக குறிக்கப்பட்டது . எ .கா .மருந்து நிறுவனங்கள் சில தயாரிப்புகளை மாதிரிகள் மற்றும் விற்பனைக்கு இல்லை என குறிக்கின்றன.
  2. விற்பனைக்கு இல்லை என்ற எந்த குறிப்பும் இல்லாத MRP தீர்மானிக்கப்பட்ட பொருள்கள்.  ஆனால் இவைகள் இலவச மாதிரியாக வழங்கப்படுகிறது.

மேற்குறிய இரு வகைகளிலும் உள்ளிட்டு வரியானது (ITC ) வரவாக எடுத்து கொள்ளக்கூடாது.  

ஆனால் இரண்டாவது வகை விநியோகமாக கருதப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.  ஏனென்றால் அவை மாதிரிகள் என்று குறிக்கப்படவில்லை. அதனால் இந்த பொருட்களின் உள்ளிட்டு வரியானது வரவாக எடுத்து கொள்ளப்படலாம்.  இதை விநியோகமாக கருதி GST வரி கட்டவேண்டியதாகும்.

  • இலவச விநியோகம் – இதுவும் இரு வகைப்படும்.
  1. ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்.
  2. சில கூடுதல் அளவு இலவசமாக வழங்கப்படும் என பேக்கிங்கில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிய இரு பரிவர்தனைகளும்  ஒரு வியாபார உத்தியே அன்றி இலவசமாக கொடுப்பதில்லை. மேலும் ஒரு  பொருளை வாங்கினால் தான் இன்னொரு பொருளானது இலவசமாக கிடைக்கும் .  அந்த இரு பொருள்களுக்குமான விலை ஒரே விலையாக (Single Price ) வசூலிக்கப்படுகிறது.  அந்த விலையில் தான் GSTஆனது விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. Read more

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”