Search
Filter by Content Type
Generic Filters

Detailed Recommendations of 36th GST Council Meeting/36ஆவது GST மன்ற குழு சந்திப்பின் பரிந்துரைகளின் விவரம்

Jul 27, 2019
0

25.07.2019 அன்று நடைபெறுவதாக இருந்து, ஒத்திவைக்கப்பட்டு பின் இன்று (27.07.2019) அன்று GST மன்ற குழுவின் 36ஆவது சந்திப்பு நடைபெற்றுள்ளது, இந்த சந்திப்பில் செய்யப்பட்ட முக்கிய பரிந்துரைகளை கீழே காண்போம்:

சட்ட செயல்முறைகள் தொடர்பான மாற்றங்கள்:

  • அறிவிப்பு எண் 02/2019ன் படி இணக்க வரியை (சேவை புரிபவர்களுக்கான இணக்க வரி திட்டம்) தேர்வு செய்யும் கால அவகாசம்(சேவை விநியோகம் மட்டும் செய்யும் நபர்களுக்கு) 31.07.2019இல் இருந்து 30.09.2019 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 2019-20 நிதியாண்டிற்கான முதல் காலாண்டின் இணக்க வரியின் கீழ் சுய மதிப்பீட்டு முறையில்  வரி விவரம் தாக்கல் செய்வதற்கான CMP – 08 படிவம் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் 31.07.2019இல் இருந்து 31.08.2019 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது

வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள்:

  • மின்சார வாகனங்களுக்கான GST 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டி(சார்ஜர்) அல்லது மின்னூட்டும் நிலையங்களின் (சார்ஜிங் ஸ்டேஷன்) GST விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • உள்ளூர் அதிகாரிகளுக்கு வாடகைக்கு விடப்படும் 12 க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட மின்சார பேருந்துகளுக்கு GSTயில் இருந்து வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மேற்கூறிய வரி விகித மாற்றங்கள் 01.08.2019 முதல் நடைமுறைக்கு வரும் என்று வழங்கப்பட்டுள்ளது.

TNGSTP கருத்து:

– மிகக் குறைந்த முடிவுகள் இடம்பெற்ற சந்திப்புகளில் ஒன்றாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது

– அரசு பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைத்து மின்சார வாகனங்களின் உபயோகத்தை அதிகரிக்க எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த வரி விகித குறைப்பு தெரிகிறது, சில நாட்கள் முன்பு பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கான கடனின் வட்டிக்கு 1.5 லட்சம் வரை வரி குறைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– புது இணக்க வரி முறை சரக்கு மற்றும் சேவை இரண்டும் கலந்து விநியோகம் செய்பவர்களுக்கானது என்றாலும், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள கால அவகாசம் சேவை விநியோகம் செய்பவர்களுக்கு மட்டும் என்று வழங்கப்பட்டுள்ளது, அறிவிப்பு வெளிவந்தால் தான் சரியான தெளிவு கிடைக்கும்.

இந்த அனைத்து மாற்றங்களையும் நடைமுறைப்படுத்தும் அறிவிப்புகளின் விவரங்கள் அறிய இணைந்திருங்கள்!!

********************

36th GST council meeting is Initially scheduled to be held on 25.07.2019 but postponed and later held today(27.07.2019), Important outcomes and recommendations of the meeting is detailed below:

LAW AND PROCEDURE RELATED CHANGES:

  1. Last date for filing of intimation, in FORM GST CMP-02, for availing the option of payment of tax under Notification No.02/2019 – Composition scheme for service providers, (by exclusive supplier of services) to be extended from 31.07.2019 to 30.09.2019
  2. Due date to file Form CMP-08 for the first quarter of Financial year 2019-20(April 2019 – June 2019) is extended from 31.07.2019 to 31.08.2019

RATE RELATED CHANGES:

  1. GST rate on all electric vehicles be reduced from 12% to 5%
  2. GST rate on charger or charging stations for Electric vehicles be reduced from 18% to 5%.
  3. Hiring of electric buses with carrying capacity of more than 12 passengers by local authorities to be exempted from GST.

The above mentioned changes in GST rates to be brought to effect from 01.08.2019

TNGSTP’S COMMENTS:

– This Meeting marks one of the council meetings in which very less matters are discussed and decided so far.

– Government’s initiatives to reduce vehicles using fossil fuels and encouraging Electrical vehicles is reflected in this rate reduction proposals, It is pertinent to note that earlier in the budget session, Interest paid for loan obtained for buying Electrical vehicles were also proposed to be allowed a deduction upto Rs.1.5 lakhs.

– Though the New Composition scheme opted under Notification No.02/2019 is meant for both goods and services suppliers, in the further extension given today, it is mentioned as “by exclusive supplier of services”, Notification is to be issued soon to provide the much needed clarity.

Stay Connected for updates on Notifications which will give effect to the proposed changes!!

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”