Search
Filter by Content Type
Generic Filters

Detailed Recommendations of 37th GST Council Meeting/37ஆவது GST மன்ற குழு சந்திப்பின் பரிந்துரைகளின் விவரம்

Sep 21, 2019
0
37th GST council meeting recommendations_TNGSTP

27.07.2019 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இன்று 20.09.2019 அன்று கோவாவில் 37ஆவது GST மன்ற குழு கூட்டம் நிதி அமைச்சர் திருமதி .நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.இதில் கொண்டு வரப்பட்ட முக்கிய முடிவுகளின் எளிமையான விளக்கத்தை இந்த கட்டுரையில் காணலாம்:

சட்ட செயல்முறைகள் தொடர்பான மாற்றங்கள்:

  • 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டிற்கு இணக்க வரியில் வரி செலுத்துபவர்களுக்கு ஆண்டறிக்கை தாக்கல் செய்வதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது
  • ஒட்டுமொத்த விற்றுமுதல் (Aggregate turnover) ரூபாய் 2 கோடி வரை உள்ள வரி செலுத்துபவர்களுக்கு 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை விருப்பத்தேர்வு முறையில்  தாக்கல் செய்யப்படலாம், கட்டாயம் இல்லை என்று வழங்கப்பட்டுள்ளது
  • ஒரு அலுவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆண்டறிக்கை மற்றும் GSTR – 9C reconciliation statement எளிமையாக்கப்படுதல் குறித்து ஆராயப்படும்
  • மேலுமுறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படாத காரணத்தால் மேல்முறையீட்டு ஆணையத்தின் ஆணைக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வரி செலுத்துபவர்கள் தங்கள் விநியோக விவரங்களை சரியான நேரத்திற்குள் தாக்கல் செய்வதை ஊக்குவிப்பதற்கு பிரிவு எண் 37ன் படி தாக்கல் செய்யவேண்டிய GSTR -1 இல் விநியோக விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் அந்த விநியோகத்திற்கான உள்ளீட்டு வரி வரவு(Input tax credit) எடுத்துக்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
  • முன்பு அக்டோபர் 2019 முதல் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்த  புதிய விவர அறிக்கை தாக்கல் செய்யப்படும் முறை, வரி செலுத்துபவர்கள் நன்றாக பழக்கப்பட்டு தெளிவுறுவதற்காக ஏப்ரல் 2020இல் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.இதன் காரணமாக அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை GSTR – 1 மற்றும் 3B தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் தொடர்பான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது
  • சட்டத்தின் சரிசமமான பயன்பாட்டை உறுதி செய்ய GST RFD  – 01A தாக்கல் செய்தல் மேலும் 18.07.2019 அன்று வழங்கப்பட்ட ITES சேவைகள் தொடர்பான சுற்றறிக்கை தொடர்பாக தெளிவுகள் வழங்க சுற்றறிக்கைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 28.06.2019 அன்று வழங்கப்பட்ட விநியோகத்திற்கு பின் வழங்கப்படும் தள்ளுபடி தொடர்பான சுற்றறிக்கை எண் 105/2019 திரும்ப பெறப்பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது தொடர்பாக சம்மந்தப்பட்ட CGST சட்டம், IGST சட்டம் மற்றும் தொடர்புடைய SGST சட்டத்திலும் தகுந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று வழங்கப்பட்டுள்ளது
  • ஒரே அதிகாரியின் கீழ் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த REFUND முறை 24.09.2019 அன்றில் இருந்து அறிமுகம் செய்யப்படவுள்ளது.
  • GST பதிவோடு ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் REFUND பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குதல் தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது
  • போலியான INVOICE மூலமாக மோசடி செய்து REFUND பெறுவதை தவிர்க்க அத்தகைய வரி செலுத்துபவர்கள் ITC வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள் பற்றிய தெளிவான விவரம் அறிய இணைந்திருங்கள்!!

CS ஸ்ரீவித்யா


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”