Search
Filter by Content Type
Generic Filters

Detailed Recommendations of 38th GST Council Meeting/38ஆவது GST மன்ற குழு சந்திப்பின் பரிந்துரைகளின் விவரம்

Dec 19, 2019
0
38th GST council meeting updates

நவம்பர் 2017-18இல் கிட்டத்தட்ட 85,000 கோடியாக இருந்த GST மொத்த வருவாய் நவம்பர் 2018-19இல் 95,000 கோடியை தாண்டிய நிலையில் 2019-20இல் 1,00,000 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்னும் புள்ளி விவரத்தை 18.12.2019 அன்று நடைபெற்ற 38ஆவது GST மன்ற குழு சந்திப்பு நமக்கு வழங்கியுள்ளது, இந்த சந்திப்பில் பரிந்துரைக்கபட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து கீழே தெளிவாக காண்போம்:

சட்ட செயல்முறைகள் தொடர்பான மாற்றங்கள்:

  • 2017-18ற்கான GSTR-9 மற்றும் GSTR 9C தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி 31.01.2020 வரை நீடிக்கபட்டுள்ளது
  • GST குறை தீர்க்கும் குழுக்கள் CGST மற்றும் SGST அதிகாரிகள் இருவரையும் பிரதிநிதிகளாக கொண்டு மண்டல / மாநில அளவில் அமைக்கப்படும், வர்த்தக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் இந்த குழுவில் இருப்பர்.இந்த குழு மண்டல/மாநில அளவில் வரி செலுத்துபவர்களுக்கு உள்ள பொதுவான மற்றும் குறிப்பிட்ட குறைகளை தீர்க்கும்
  • FORM GSTR-1 தாக்கல் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் கீழ்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
    – இதுவரை GSTR – 1 தாக்கல் செய்யாதவர்கள் அதனை தாக்கல் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக, 10.01.2020ற்குள் GSTR – 1 தாக்கல் செய்துவிட்டால் ஜூலை 2017 முதல் நவம்பர் 2019 வரைக்கான காலத்திற்கு GSTR – 1 செலுத்தாததற்கான தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
    – தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் GSTR – 1 தாக்கல் செய்யாத வரக்குட்பட்ட நபர்களுக்கு E-way Bill வசதி block செய்யப்படும்
  • விதி எண் 36(4)ன் படி, FORM GSTR-2Aவில் இல்லாத invoices மற்றும் debit notesகளுக்கு எடுத்து கொள்ளக்கூடிய ITC, FORM GSTR-2Aவில் இடம்பெற்றுள்ள மொத்த ITCயின் 20 சதவீதமாக இருந்தது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
  • சில வட கிழக்கு மாநிலங்கள் நவம்பர் மாதத்திற்கான GST விவர அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நீடிக்கப்பட்டுள்ளது
  • 2020 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட கூடிய சில சட்ட மாற்றங்களுக்கும் இந்த கூட்டம் ஒப்புதல் தெரிவித்துள்ளது

வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள்:

  • 50%க்கும் மேற்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுரிமை கொண்ட நிறுவனங்களுக்கு தொழில்துறை / நிதி உள்கட்டமைப்பு திட்டங்களின் நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு தற்போது 20% அரசால் உரிமம் கொள்ளப்பட்ட நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று பரிந்துரைக்கபட்டுள்ளது.
  • 01.04.2020இல் இருந்து மாநில அரசால் நடத்தப்படும் மற்றும் மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட lottery இரண்டிற்குமே ஒரே விகிதமாக 28% வசூலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
  • 01.01.2020 முதல் நெய்த மற்றும் நெய்யப்படாத பாலிதீன் மற்றும் polypropylene பைகளுக்கு (HS code 3923/6305) ஒரே விகிதமாக 18% வசூலிக்கபடும் என்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து மாற்றங்களையும் நடைமுறைப்படுத்தும் அறிவிப்புகளின் விவரங்கள் அறிய இணைந்திருங்கள்!!

********************

The 38th GST council Meeting held on 18.12.2019 gives us the figure of GST total revenues increased from over Rs 85,000 crore in November 2017-18 to Rs 1,00,000 crore in 2019-20, surpassing the 95,000 crore mark in November 2018-19. All the recommendations of this meeting is detailed below:

LAW AND PROCEDURE RELATED CHANGES:

  1. The deadline for filing GSTR-9 and GSTR – 9C for Financial year 2017-18 has been extended till 31.01.2020
  2. The GST grievance redressal committees will be constituted at Zonal/State level with both CGST and SGST officers and including representatives of trade and industry.These committees will address grievances of specific/ general nature of taxpayers at the Zonal/ State level.
  3. Following measures would be taken to improve filing of FORM GSTR-1:
    i. For those who have not yet filed GSTR – 1, as an opportunity to file, Late fees for filing GSTR – 1 has been waived for the period from July 2017 to November 2019 if GSTR – 1 is filed by 10.01.2020
    ii. E-way Bill for taxpayers who have not filed their FORM GSTR-1 for two tax periods will be blocked.
  4. Input tax credit to the recipient in respect of invoices or debit notes that are not reflected in his FORM GSTR-2A shall be restricted to 10 per cent instead of the earlier allowed limit of 20% of the eligible credit available in respect of invoices or debit notes reflected in his FORM GSTR-2A.
  5. Due date of filing GST returns for the month of November, 2019 to be extended in respect of a few North Eastern States.
  6. The Council also approved various law amendments which will be introduced in Budget 2020.

RATE RELATED CHANGES:

  1.  It has been suggested that the tax exemption allowed to more than 50% of central and state owned entities on upfront amount collected for leasing of industrial / financial infrastructure projects to be extended to entities having 20% or more ownership of Central or State Government
  2.  It has been decided that, from 01.04.2020, the State Government and the State Government-sanctioned lottery will be charged the same rate of 28%
  3.  It has been provided that from 01.01.2020  the woven and non-woven polythene and polypropylene bags (HS code 3923/6305) will be charged at the same increased rate of 18%

Stay Connected for updates on Notifications which will give effect to the proposed changes!!

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”