Search
Filter by Content Type
Generic Filters

Detailed Recommendations of 39th GST Council Meeting/39ஆவது GST மன்ற குழு சந்திப்பின் பரிந்துரைகளின் விவரம்

Mar 16, 2020
0
39th GST council meeting updates

39ஆவது GST மன்ற குழுவின் சந்திப்பு மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் 14.03.2020 அன்று நடைபெற்றது, இந்த சந்திப்பில் பரிந்துரைக்கபட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து கீழே தெளிவாக காண்போம்:

சட்ட செயல்முறைகள் தொடர்பான மாற்றங்கள்:

கடைசி தேதி (due date) நீட்டிக்கப்பட்டவை:

  • 2018-19ற்கான GSTR-9 மற்றும் GSTR 9C தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி 30.06.2020 வரை நீடிக்கபட்டுள்ளது
  • 14.03.2020 வரை ரத்து(cancel) செய்யப்பட்ட அனைத்து GST பதிவுகளை திரும்ப பெறுவதற்கு 30.06.2020ற்குள் விண்ணப்பிக்கலாம்
  • E -invoicing மற்றும் QR code முறை அமலுக்கு வரும் தேதி நீட்டிக்கப்பட்டு 01.10.2020 முதல் அமலுக்கு வரும்.
  • தற்போதுள்ள FORM GSTR-1 & FORM GSTR-3B செப்டம்பர் 2020 வரை தொடரும் என்றும் New returns அதற்கு பின் அமல்படுத்தப்படும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டறிக்கை தொடர்பான மாற்றங்கள்:

  • ஒட்டுமொத்த வருமானம்/விற்றுமுதல் 5 கோடிக்கு குறைவாக உள்ள வரி செலுத்துபவர்கள் 2018-19ற்கான GSTR 9C விருப்பத்தேர்வு முறையில் தாக்கல் செய்யலாம், கட்டாயம் இல்லை.
  • ஒட்டுமொத்த வருமானம்/விற்றுமுதல் 2 கோடிக்கு குறைவாக உள்ள வரி செலுத்துபவர்கள் 2017-18 மற்றும் 2018-19 ஆண்டிற்கான GSTR-9 மற்றும் GSTR 9C தாமதமாக தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கான தாமதக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று வழங்கப்பட்டுள்ளது

CGST விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள்:

  • வரிக்குட்படுத்தப்பட்ட சப்ளை மற்றும் வரி விலக்களிக்கப்பட்ட சப்ளை இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்ட Capital goods மீதான ITC reversal முறை விதி 43 (1) (c)இல் வழங்கப்படவுள்ளது.
  • அதிகமாக செலுத்திய வரிக்கான refund cash மற்றும் credit (ITC)  இரண்டாகவும் வழங்க வழி வகை செய்யப்படவுள்ளது.
  • FEMA பரிந்துரைத்துள்ள தேதிக்குள் ஏற்றுமதி செய்த பொருள்கள் அல்லது சேவைக்கான தொகையை பெறாவிடின் ஏற்றுமதி செய்தவற்றிற்காக வழங்கப்பட்ட refund தொகை திரும்ப பெற வழி வகை செய்யப்படும்.
  • புதிதாக வரி செலுத்துபவர்களுக்கு ஆதார் எண் படி அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றவை:

  • தாமதமாக GST செலுத்தியதற்கான வட்டி ITC  தொகை பயன்படுத்தியபின் உள்ள நிகர GST மதிப்பில் வசூலிக்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சட்டத்தில் போதிய மாற்றம் செய்து 01.07.2017 முதல் இதே நடைமுறை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு GST பதிவு பெற்ற நபர்களும் தங்களிடம் வணிகம் செய்யும் வணிகரை பற்றி அறிய “Know your Supplier” என்ற வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
  • காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், GTA, பயணிகள் போக்குவரத்து சேவைகள் போன்ற சேவைகள் புரிபவர்களுக்கு E -invoicing முறையில் இருந்து விலக்களிக்கப்படும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
  • போலியாக ITC உரிமை கோருதலை தடுக்க, புதிதாக GST பதிவு பெற்றவர்களது அலுவலகம் நேரில் ஆய்வு செய்யப்பட்டு மேலும் அவர்களது வணிக/நிதி விவரங்களை பெற்ற பிறகே ITC உரிமை கோருதல் அனுமதிக்கப்படும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள்: (01.04.2020 முதல்)

S.No.
Details of goods/services
Old GST rates
New GST rates
1. கைபேசிகள் 12% 18%
2. தீக்குச்சிகள்(கையால் செய்யப்பட்டவை & மற்றவை) 5%/18% 12%
3. விமானங்கள்     மீதான Maintenance, Repair and Overhaul (MRO) services 18% 5% (with full ITC)

 

GSTN குறித்த முன்னேற்றங்கள்:

  • தற்போது 1.5 லட்சம் வரி செலுத்துபவர்களை ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறன் கொண்ட GST வலைத்தளத்தின் திறன் 3 லட்சமாக உயர்த்தும் பணி நடைபெற்றுக்கொண்டுள்ளது.
  • GSTR – 1இல் வழங்கப்படும் விநியோகத்தின் விவரத்துடன் GSTR – 3Bயில் வரும் வரி விவரம் இணைக்கப்படவும் மேலும் FORM GSTR-2A வில் உள்ள விவரம் GSTR – 3Bயில் ITC ஆக வருமாறும் இணைக்க பட உள்ளது.

இந்த அனைத்து மாற்றங்களையும் நடைமுறைப்படுத்தும் அறிவிப்புகளின் விவரங்கள் அறிய இணைந்திருங்கள்!!

********************

The 39th GST Council meeting was held under the Chairmanship of Union Finance &Corporate Affairs Minister Smt.Nirmala Sitharaman on 14.03.2020.All the important recommendations of this meeting is detailed below:

LAW AND PROCEDURE RELATED CHANGES:

Details of Due date extensions:

  • Due date for filing the Annual return GSTR-9 and the Reconciliation Statement GSTR 9C for financial year 2018-19 to be extended to 30.06.2020
  • Application for revocation of cancellation of registration can be filled up to 30.06.2020 for registrations cancelled upto 14.03.2020
  • The dates for implementation of e-invoicing and QR Code to be extended to 01.10.2020.
  • FORM GSTR-1 & FORM GSTR-3B filing will continue till September, 2020.New returns filing system will be implemented after the same.

Changes made in Annual return filing:

  • GSTR 9C is made optional for taxpayers having aggregate turnover below Rs. 5 crores
  • Late fees will not be levied for delayed filing of the Annual return and the Reconciliation Statement for financial year 2017-18 and 2018-19 for taxpayers with aggregate turnover less than Rs. 2 crores

Amendments to the CGST Rules:

  • Procedure for reversal of input tax credit in respect of capital goods partly used for affecting taxable supplies and partly for exempt supplies will be provided under Rule 43(1)(c)
  • Refund will be provided both in both cash and credit (ITC) in case of excess payment of tax.
  • Refund given on export of goods will be recovered if export proceeds are not realized within the time prescribed under FEMA
  • Aadhaar authentication for new taxpayers will be brought into practice

Other Changes:

  • Interest for delay in payment of GST to be charged on the net cash tax liability w.e.f. 01.07.2017 (Law to be amended retrospectively)
  • A new facility called ‘Know Your Supplier’ to be introduced to enable every registered person to have some basic information about the suppliers with whom they conduct or propose to conduct business
  • Insurance company, banking company, financial institution, GTA, passenger transportation service etc would be exempted from issuing E – invoices or capturing dynamic QR code
  • To restrict fake invoicing and fraudulent passing of ITC, restrictions to be imposed on passing of the ITC in case of new GST registrations, before physical verification of premises and Financial KYC of the registered person

RATE RELATED CHANGES: (From 01.04.2020)

S.No.
Details of goods/services
Old GST rates
New GST rates
1. Mobile phones 12% 18%
2. Matches (Both handmade and others) 5%/18% 12%
3. Maintenance, Repair and Overhaul (MRO) services for aircraft 18% 5% (with full ITC)

 

Developments in GSTN:

  • Hardware procurement is in process to augment the capacity of the IT system to concurrently handle 3 lakh taxpayers from the present level of 1.5 lakh taxpayers
  • Details of the statement of outward supplies in FORM GSTR-1 will be linked to the liability in FORM GSTR-3B
  • Input tax credit in FORM GSTR-3B will be linked to the details of the supplies reflected in the FORM GSTR-2A

Stay Connected with TNGSTP for updates on Notifications which will give effect to the proposed changes!!

CA Durai

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”