பதிவு செய்யாத விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யவதற்கு அதிகாரியின் அனுமதி தேவையா?
 • படிவம் GST REG 14 ஐ சமர்ப்பித்தபின் GST சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில திருத்தங்கள் தவிர மற்ற அனைத்தையும் GST போர்டல் மூலம் திருத்தம் செய்யலாம்.
ஒரு நபர் பல மாநிலங்களில் பதிவு செய்யும்போது ஒரு மாநிலத்தில் கலப்பு வரிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்தும்,மற்ற மாநிலங்களில் சாதாரன வரி செலுத்துவராக பதிவு செய்யலாமா?

முடியாது. ஒரு நபர் பல மாநிலங்களில் பதிவு செய்யும்போது ஒரு மாநிலத்தில் கலப்பு வரியாக மற்ற மாநிலங்களில்  சாதாரன வரி செலுத்துவராக பதிவு செய்யமுடியாது.

திருத்தத்தை அனுமதிக்க அதற்கான அதிகாரிக்கு கால வரம்பு உள்ளதா?

ஆம். 15 நாட்கள். FORM GST REG-14 விண்ணப்பத்தை பெற்ற தேதி முதல் பதினைந்து வேலை நாட்களுக்குள்  அதற்கான அதிகாரி FORM GST REG-15 ல் மின்னணு மூலம் திருத்தி அமைப்பதற்கான ஒப்புதல் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

பதிவு செய்யப்படும் போது, தெரிந்தே தவறான தகவல்களை தருதல், மோசடி, மற்றும் உண்மைகளை மறைத்தல் போன்றவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

அம்மாதிரி வழக்குகளில், கடந்த கால நிகழ்வுகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் பதிவை அதற்குரிய அதிகாரியால் ரத்து செய்ய முடியும்.(பிரிவு 29(2)(e) விதி).

ஐக்கிய நாடுகள் சபை GSTன் கீழ் பதிவு செய்வது அவசியமா?
 • ஆமாம். CGST / SGSTன் சட்டப்பிரிவு 25(9)ன் விதியின்படி, அறிவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபைகள், தூதரகம் அல்லது அயல்நாட்டு தூதரகங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட வேறு சில மற்ற நபர்கள் அனைவரும் GST வலைவாயில் மூலமாக பிரத்யேக அடையாள எண்ணை (UIN) பெற வேண்டியது அவசியம்.
 • இந்த குறிப்பிட்ட அடையாள அமைப்பு, GSTIN அமைப்புடன் இணக்கமாக இருப்பதால் இது நாடு முழுக்க ஒரே மாதிரி சீராக இருக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கும் இதுவே பொதுவானதாகும்.
 • அவர்களால் அறிவிக்கப்பட்ட சரக்கு வழங்கல் மற்றும் சேவைகள் பெறப்பட்டதின் மீது செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெற உரிமை கோரும்போது இந்த UIN தேவைப்படுகின்றது.
பதிவை மறுப்பதற்கான நடைமுறைகள் என்ன?
 • ஒரு வேலை பதிவு மறுக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு அந்த நிராகரிப்புக்கான காரணத்தை வாய்மொழி உத்தரவின் மூலம் தெரிவிக்கப்படும்.
 • விண்ணப்பதாரர் அதிகாரியின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
 • CGST ன் சட்டப்பிரிவு 26ன் உட்பிரிவு (2)ன் படி CGST சட்டம் / SGST சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரியால் பதிவு மனு நிராகரிக்கப்பட்டால் SGST சட்டம் / UTGST சட்டம் / CGST சட்டத்தின் கீழ் அந்த பதிவு மனு மற்ற வரி அதிகாரியலும் நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்.
ஆன்லைன் பதிவுகள் மீதான முடிவுகள் எடுப்பதற்கான காலவரை என்ன?
 • தகவல்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகள் அனைத்தும் சரியாக இருந்தால் மாநில (ம) மத்திய அதிகாரிகள் விண்ணப்பத்திற்கு 3 சாதாரண வேலை நாட்களுக்குள் பதிலுரைக்க வேண்டும்.
 • குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பத்தில் தரப்பட்ட தகவல்களில் ஏதேனும் குற்றம் குறைகளிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தால் தகவல் தெரிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் விண்ணப்பதாரர் குறைகளை நீக்கி தரவேண்டும்.
 • குறைகளை நீக்கிக்கொடுத்த தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் மாநில (ம) மத்திய அதிகாரிகள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவோ (அ) நிராகரிக்கவோ வேண்டும்.
 • குறிப்பிட்ட காலவரம்பிற்குள் துரை அதிகாரி பதிலளிக்கவில்லை எனில் பதிவு நடைமுறைகளை வலைவாயில் தானாகவே இயங்கும்.
பதிவு ரத்து ஆணையை ரத்து செய்ய முடியுமா?
 • ரத்து செய்ய முடியும். ஒரு வேளை அதற்குரிய அதிகாரி தன்னிசையாக முடிவெடுக்கும் முறையிலோ, வரி செலுத்துபவர் (அ) வாரிசுதாரர் விண்ணப்பிக்காத நிலையில் முதலில் ரத்து செய்யப்படுத்திருந்தால் ரத்தாணையை ரத்து செய்ய முடியும்.
 • தன்னிசையாக முடிவெடுக்கும் முறையில் ரத்தாணை கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அதற்குரிய அதிகாரியிடம் ரத்தாணையை ரத்து செய்ய கோரி மனு அளிக்க வேண்டும்.
 • ரத்தாணையை ரத்து செய்வதற்கான மனுவோ (அ) தகவல்களோ / தெளிவரையோ கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அதற்குரிய அதிகாரி பதிவு ரத்தாணையை ரத்து செய்யலாம்(அ) பதிவு ரத்தாணையை ரத்து செய்ய கோரிய மனுவை நிராகரிக்கலாம்.
ஒரு நபரின் பதிவை ரத்து செய்யப்படும் பொழுது அந்த நபர் வரி விலக்குகாக செய்திருந்த பதிவும் ரத்து செய்யப்படுமா?
 • ஆம்.CGST / SGST சட்டப்பிரிவு 29(5)ன் படி பதிவு ரத்தான ஓவ்வொரு வரி செலுத்தும் நபரும் மின்னணு பண வர்த்தனை/கடன் பதிவேட்டின் மூலமாகவோ ஒரு தொகையை செலுத்த வேண்டும்.
 • உள்ளீட்டில் தேங்கிய கையிருப்பு, பாதி நிறைவு பெற்ற (ம) நிறைவு பெற்று நிலையிலுள்ள பொருள்களின் கையிருப்பு (அ) பதிவு ரத்து செய்யப்பட்ட தேதிக்கு முன் தெரிவிக்கப்பட்ட பொருட்களின் முதலீடு (ம) இயந்திரங்கள் (அ) அம்மாதிரி பொருட்களின் மீது செலுத்த வேண்டிய வெளியீடு வரி, இதில் எது அதிகமாக உள்ளதோ அந்த தொகைக்கான இணையான தொகையை செலுத்த வேண்டும்.
மின்னணு வர்த்தக ஆபரேட்டர் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமா?
 • ஆமாம். அவர்களுக்கு ஆரம்ப விலக்கின் ஆதாயம் கிடையாது.
 • மேலும்,அவர்கள் விநியோகம் செய்யும் பொருட்கள் விலை எவ்வளவு இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும்.
வங்கி நிறுவனங்கள் தங்கம்(ம) வெள்ளி ஒப்பந்த அடிப்படையில்(Consignment basis)இறக்குமதி செய்யும் போது உலோகத்தின் உரிமம் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருக்குமெனில் வெளிநாட்டு நிறுவனம் GST சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டுமா?
 • இல்லை.இறக்குமதி செய்யும் வங்கி நிறுவனமானது RCM முறையில் வரிசெலுத்த வேண்டும். எனவே, வெளிநாட்டு நிறுவனம் GST சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டாம்.
 • மேலும், GST விதியின் கீழ் இறக்குமதி செய்யும் பொழுதே வரிவிதிப்பிற்கான நேரம்(Time of Supply) கணக்கிடப்படும்
அக்டோபர் 2018 போது, நான் GST எதுவும் கழிக்கவில்லை. நான் அக்டோபர் மாத ரிட்டன் தாக்கல் செய்யவேண்டுமா?

DDO  TDS ஐ கழித்த மாதம் அதற்கான ரிட்டனை படிவம் GST – 07 ஐ தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு எதுவும் கழிக்கவில்லையெனில் அக்டோபர் மாத ரிட்டனை தாக்கல் செய்யவேண்டாம்.

பதிவு ரத்து செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் இறுதி வருமானம் தாக்கல் செய்யவில்லை என்றால் என்னவாகும் ?
 • பதிவு ரத்து செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் FORM GSTR-10 ல் இறுதி வருமானம் தாக்கல் செய்யப்படவில்லையெனில், FORM GSTR-3A இல் வரி செலுத்துபவருக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
 • வரி செலுத்துவோர்  FORM GSTR-3A அறிவிப்பின் படி  15 நாட்களுக்குள் இறுதித் வருமானத்தை தாக்கல் செய்யாவிட்டால், CGST சட்டத்தின் பிரிவு 62 இன் கீழ், FORM GST ASMT-13 இல் மதிப்பீட்டு ஒழுங்கு (BEST JUDGMENT BASIS)  Rule 100 CGST படி , அதற்கான அதிகாரிக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் பிரிவு 29 (5) இன் கீழ் வரி செலுத்துவோர் பொறுப்பைத் தீர்மானித்து FORM GST ASMT-13 ஆணை பிறப்பிக்கப்படும்.
 • ஆணை பிறப்பித்த  30 நாட்களுக்குள் வரி செலுத்துவோர் இறுதி வருமானத்தை தாக்கல் செய்தால், அந்த ஆணை திரும்பப் பெற்றதாக கருதப்படும். இருப்பினும், வட்டி மற்றும் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.  
தொழில் முறைமைகள், தேவையான விதிகளுக்கு உடன்படுதல் ஆகியன GST/CGST சட்டங்களின்படி ஒன்றானவையா?
 • தொழில் முறைமைகள், விதிகளுக்கு உட்படும் அம்சங்கள் ஆகியன பதிவு செய்தல், வரவு – செலவு கணக்குகள் தாக்கல் செய்வது, வரி செலுத்தல் போன்றவற்றிற்கு ஒன்றேதான். இது தவிர CGST சட்டங்களில் சிலவற்றை மாற்றாமல் அப்படியே IGST சட்டம் இணைத்துக் கொண்டுள்ளது. மதிப்பாய்வு கணக்குப் பரிசோதனை, மதிப்பீடு பொருள் வழங்கல் நேரம் விலை விவரச்சீட்டு கணக்கீட்ட முறைகள் வழக்கு விவகார முறைமைகள் முறையீடு போன்றவை இதில் அடங்கும் (IGST யின் சட்டப் பிரிவு 20).
GSTR-1 மற்றும் GSTR-2 விற்கு இடையே காணப்படும் பொருந்தாமைதன்மையை அமைப்பு கண்டறிந்து உற்பத்தி வரியாக பிடித்தம் செய்யப்பட்டு மீட்கப்பட்ட தொகையை உரிமை கோர முடியுமா?
 • முடியும், தவறு கண்டறியப்பட்ட விலைப்பட்டிகள் அல்லது பற்று குறிப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் விவரங்களை தனது மாதாந்தர | காலாண்டு செல்லுபடியாகும் வருமான வரி கணக்குத் தாக்கலில் அறிப்பதன் மூலம் வழங்குனரால் பொருந்தாமை சரிசெய்யப்பட்ட பிறகு இந்த தொகை, அடுத்து வரும் வரி செலுத்தும் காலகட்டத்தில் உற்பத்தி வரி பொறுப்பிலிருந்து குறைக்கப்படுவதன் மூலம் மறுஉரிமை கோர முடியும்.
 • பிரிவு 42 (7). விற்பனையாளரால் வழங்கப்பட்ட வரவு குறிப்புகளைப் பொருத்தவரையில் சட்டப் பிரிவு 43-ல் இதே போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வரிசெலுத்துவோர் தானாகவே வருமானம் மற்றும் செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமா?
 • வேண்டாம். பதிவுசெய்துகொண்ட வரிசெலுத்துவோர்கூட தனது வருமானம் மற்றும் செலவு விவரங்களை, மத்திய அல்லது மாநில வரி நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வருமான வரி கணக்கு அறிக்கை தயாரிக்கும் ஒருவர் மூலம் தாக்கல் செய்யலாம்.
ஆண்டு வருமான வரி கணக்குத் தாக்கலும் இறுதி வருமான வரி கணக்குத் தாக்கலும் ஒன்றுதானா?
 • இல்லை. ஆண்டு வருமான வரி கணக்குத் தாக்கலை சாதாரண வரி செலுத்துவோராகப் பதிவு செய்துள்ள ஒவ்வொருவரும் சமர்ப்பிக்க வேண்டும்.
 • இறுதி வருமான வரி கணக்குத் தாக்கலை பதிவை ரத்து செய்வதற்காக விண்ணப்பிக்கும் நபர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
 • இந்த இறுதி வருமான வரி கணக்குத் தாக்கல், கான்சல் செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அல்லது ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
எந்த வகையான வரிசெலுத்துவோர் வருடாந்திர வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?
 • GSTR-1 முதல் GSTR-3 படிவம்வரை பூர்த்திசெய்யும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் அனைத்து வரிசெலுத்துவோர். ISD தவிர முறைமைக்குட்படாத குடியுரிமை பெறாத, சர்வு திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர்கள், TDS/TCS பிடித்தம் செய்பவர்கள் ஆகிய அனைவரும் வருடாந்திர வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். குடியுரிமை பெறாத ISDகள் மற்றும் சம்பளம் அல்லது வருமானத்தில் வரி பிடித்தம் / வதல் செய்ய அதிகாரம் பெற்ற நபர்கள் வருடாந்தர வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம்.
உள்ளிட்டு சேவை விநியோகஸ்தர்கள் (ISDக்கள்) தங்கள் வருமான வரி கணக்குத் தாக்கலில் உள்ளிட்டு மற்றும் வெளியீட்டு வழங்கல்களின் தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமா?
 • வேண்டாம். ISD, GSTR6 படிவத்தில் மட்டுமே தங்கள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
 • சேவை வழங்குவோரிடமிருந்து தாங்கள் பெற்ற கடன் விவரங்கள் மற்றும் பெறுனர் யூனிட்களுக்கு தாங்கள் விநியோகித்த கடன் விவரங்கள் வருமான வரி கணக்குத் தாக்கலில் இருக்க வேண்டும். இவர்களது வருமான வரி கணக்குத் தாக்கலிலேயே இந்த அம்சங்கள் இடம்பெற்றுவிடுவதால், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டு வழங்கல்களுக்கு தனியாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டிய தேவையில்லை.
GSTR-2 வின் சிறப்பு அம்சம் என்ன?
 • ஒரு பெறுபவர் பெறும் வழங்கல்கள் அவரது எதிர்தரப்பான வழங்குனர் தனது GSTR-1ல் பூர்த்திசெய்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் தானாகவே விரிவடையும் என்பதுதான் GSTR-2ன் சிறப்பு அம்சம்.
வருமான வரிவிதிக்கப்படக்கூடிய ஒரு நபர் தனது GSTR-2-ல் ஏதாவது வழங்க வேண்டுமா அல்லது எல்லாமே GSTR-1-லிருந்து தானாகவே விரிவடையுமா (auto-populated)?
 • GSTR-2விலிருந்து ஒரு பெரும் பகுதி விரிவடையும் அதே நேரத்தில், பெறுநரால் மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிற இறக்குமதிகள் ஏற்றுமதி விவரங்கள், பதிவு செய்யாத அல்லது கலந்த வழங்குனர்கள் மற்றும் விதிவிலக்கு GST- அல்லாத / ஒன்றுமில்லாத GST வழங்கல்கள் முதலிய சில வாங்கியதற்கான விவரங்கள்.
விலைப்பட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குமான விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமா?
 • வேண்டாம். உண்மையில், விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய தேவையிருக்காது.
 • பொருள்களை வழங்குதலுக்கான HSN குறியீடு மற்றும் சேவைகள் வழங்குதலுக்கான கணக்கியல் குறியீடு மட்டுடே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
 • பூர்த்திசெய்பவர் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச இலக்க எண்கள் கடந்த ஆண்டில் அவரது விற்றுமுதலைப் பொருத்து அமையும்.
மின்னணு வர்த்தக துறையில் 'மேட்சிங்'(TCS) எவ்வாறு செயல்படுகிறது?அதில் வேறுபாடு இருந்தால்,அதை எவ்வாறு அணுகுவது?
 • சப்ளை விவரங்கள் மற்றும் ஒவ்வொரு ஆபரேட்டரும் தன் அறிக்கையில் அம்மாதத்தில் வசூலானதாக கூறும் தொகை ஆகியவை சப்ளையர்கள் அம்மதத்திற்கோ அல்லது முந்தையை மாதத்திற்கோ சமர்ப்பிக்கும் வெளிப்புற சப்ளை தொடர்பான விவரங்களோடு மேட்சிங் செய்யப்படும்.
 • இது மேட்சிங் ஆகவில்லையெனில் இரு தரப்பினரும் தகவல் தெருவித்து விட வேண்டும்.விதியத்திற்கான தொகையை வட்டியுடன் சப்ளையர் கட்டவேண்டும்.
வில்லைப்பட்டியலுடன் வழங்கலின் விவரச்சீட்டும்(Invoice cum bill of supply) சேர்த்து எப்பொழுது கொடுக்கவேண்டும்?
 • பதிவு செய்யப்பட்ட நபர், பதிவு செய்யப்படாத நபருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட வழங்கள் மற்றும் வரிவிதிக்கத்தக்க வழங்கள் விநியோகிக்கும் போது வில்லைப்பட்டியலுடன் வழங்கலின் விவரச்சீட்டு(Invoice cum bill of supply) அளிக்கவேண்டும்.
சான்றுப் பற்று சீட்டு பெற்ற பின் விநியோகம் நடக்கவில்லையெனில் என்னாகும்?
 • பதிவு பெற்ற நபர் சரக்குகள் அல்லது சேவைகள்  விநியோகத்திற்கான சான்று பற்று சீட்டு(Receipt Voucher) பெற்றபின், அந்த விநியோகம் நடைபெறவில்லையெனில் மேற்சொன்ன பதிவு செய்யப்பட்ட நபர் செலுத்தும் செய்யத அந்த நபருக்கு அத்தகைய செலுத்தத்திற்கான மீட்பளிப்புச் சான்றுசீட்டு(Refund voucher) வழங்கவேண்டும்.
பதிவு செய்யப்பட்ட நபர் எப்பொழுது வரி வில்லைப்பட்டியலை கொடுக்க வேண்டாம்?
 • பதிவு செய்யப்பட்ட நபர்,பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விநியோகத்தின் மதிப்பு ரூ.200/- ன் கீழ் இருந்தால் வரி வில்லைப்பட்டியலை கொடுக்க வேண்டாம்.

          நிபந்தனைகள்:

 • பெறுநர் பதிவு செய்யப்படாத பெருநராக இருக்கவேண்டும்.
 • பெறுநருக்கு விலைப்பட்டியல் தேவையில்லை என்றால்.  
ஒரு கடையானது வரி விதிக்கப்படும் (ம ) வரி விலக்கு அளிக்க பட்ட இரண்டு பொருட்களையும் ஒரே நபருக்கு விற்கிறது, இதற்கு வழங்கல் மசோதா (ம) வரி விலைப்பட்டியல் இரண்டுமே தனியாக வழங்கவேண்டுமா?

தேவையில்லை . ஒரே வரி விலைபட்டியலில் இரண்டையும் குறிப்பிட்டால் போதும்.

சரக்கு மற்றும் சேவைகளை இறக்குமதி செய்யும் போது TCS கழிக்கவேண்டுமா?
 • சரக்கு மற்றும் சேவைகளை இறக்குமதி செய்யும் போது TCS ஐ கழிக்கக்கூடாது.TCS ஐ கழிக்கும் பொறுப்பு RCM முறையில் GST கட்டும்போது ஏற்படாது.ஏனவே, இறக்குமதி செய்யும் போது TCS ஐ கழிக்கவேண்டாம்.
மருத்துவமனைக்குள் சுகாதார சேவை மூலம் வழங்கப்படும் உணவுக்கு வரி விதிக்கப்படுமா?
 • மருத்துவமனையில் சுகாதார சேவைகளுடன் நோயாளிக்கான உணவு வழங்குதலும் சேர்த்தே கலவை வழங்களாக கருதப்படும். எனவே மருத்துவமனைக்குள் நோயாளிக்கு சுகாதார சேவை மூலம் வழங்கப்படும் உணவுக்கு தனியாக வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் வெளி நோயாளி (not admitted), பார்வையாளர் (ம) அட்டெண்டர் இவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு வரி உண்டு.
ஒரு நபர் விதிகளை மீறி தொகுப்பு வரி திட்டத்தை தேர்வு செய்தால் சட்ட பின்விளைவுகள் என்ன ?
 • வரி செலுத்தும் நபர் தனக்கு தகுதியில்லை என்று தெரிந்தே தொகுப்பு வரி திட்டத்தின் கீழ் வரி செலுத்தினர் என்றால் அந்த நபர் பிரிவு 73, 74 விதிகளின் கீழ் தண்டனைக்குரியவர்.
மறுபயன் இல்லாத சேவை இறக்குமதி GSTயின் கீழ் வரிவிதிப்புக்குரியதா?
 • GSTயின் பிரிவு 7ல் குறிப்பிட்டுள்ளபடி, மறுபயன் இல்லாமல் சேவைகளை இறக்குமதி செய்வது வழங்கல் அல்ல. ஆனால் அட்டவணை I- இன் தொடர் எண் 4இல் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு வரிவிதிப்புக்குரிய நபர், வியாபார முன்னேற்றத்தின் பகுதியாகத் தொடர்புடைய நபரிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய வேறொரு நிறுவனத்திலிருந்தோ சேவைகளை இறக்குமதி செய்வது அதற்கு மறுபயன் எதுவும் பெறவில்லை என்றாலும் வழங்கல் என்றே கருதப்படும்.
சரக்கு வழங்கலாகவும் கருதப்படாத சேவை வழங்கலாகவும் கருதப்படாத செயல்பாடுகள் ஏதேனும் உள்ளனவா?

ஆம். மாதிரி GST சட்டத்தின் அட்டவணை – III சில செயல்பாடுகளை பட்டியலிடுகிறது. (i) ஒரு வேலையாள் வேலை நிமித்தமாகவோ அல்லது வேலையுடன் தொடர்புடையதாகவோ வேலைகொடுத்தவருக்குச் செய்யும் சேவைகள், (ii) சட்டப்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் சேவைகள், (iii) நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், அரசியலமைப்பு பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் (iv) தகனம், அடக்கம், சுடுகாடு அல்லது பிணவறைச் சேவைகள் மற்றும் (v) நில விற்பனை மற்றும் (vi) லாட்டரி, பந்தயம் மற்றும் சூதாட்டம் அல்லாத உரிமைக் கோரிக்கைகள் ஆகியவை சரக்கு வழங்கலும் இல்லை சேவை வழங்கலும் இல்லை என்றே கருதப்படும்.

கலவை வழங்கல் மீதான வரிப் பொறுப்பு GSTயின் கீழ் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
 • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழங்கல்களை உள்ளடக்கிய கலவை வழங்கல், எந்தப் பொருளின் வழங்கல் ஆகப் பெரிய வரி விகிதத்துக்குரியதோ அதன் வழங்கலாகவே கருதப்படும்.
தொகுப்பு வழங்கலுக்கான வரிப் பொறுப்பு GSTயின் கீழ் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
 • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழங்கல்களை உள்ளடக்கிய தொகுப்பு வழங்கலில் அவற்றில் ஒன்று முதன்மை வழங்கலாக இருக்கையில் அந்த முதன்மை வழங்கல் எதுவோ அதுவே வழங்கல் என்று கருதப்படும்.
தவணைக் கொள்முதல் திட்டத்தில் வழங்கப்படும் சரக்குகள் சரக்கு வழங்கலாகக் கருதப்படுமா சேவை வழங்களாகக் கருதப்படுமா? ஏன்?
 • தவணைக் கொள்முதல் திட்டத்தில் வழங்கப்படும் சரக்குகள், சரக்கு வழங்கலாகவே கருதப்படும். ஏனெனில் அதில் வருங்காலத் தேதியிலாவது பொருளின் உரிமையாளர் மாற்றம் நிகழ்கிறது.
பணிகள், ஒப்பந்தங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் சரக்கு வழங்கலாகக் கருதப்படுமா சேவை வழங்களாகக் கருதப்படுமா?
 • பணிகள், ஒப்பந்தங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் ஆகியவை சேவை வழங்கலாகவே கருதப்படும். அவை இரண்டும், மாதிரி GST சட்டத்தின் அட்டவணை-IIன் தொடர் எண் 6 (ஏ) மற்றும் (பி) ஆகியவற்றில் இவை இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒரு சரக்கைப் பயன்படுத்தும் உரிமையை வேறொருவருக்கு அளிப்பது சரக்கு வழங்கல் என்று கருதப்படுமா சேவை வழங்கல் என்று கருதப்படுமா? ஏன்?

ஒரு சரக்கைப் பயன்படுத்தும் உரிமையை வேறொருவருக்கு அளிப்பது சேவை வழங்கல் என்றே கருதப்படும் ஏனென்றால் இப்படிப்பட்ட வழங்கலில் பொருளின் உரிமையாளர் மாற்றப்படவில்லை. இதுபோன்ற பரிவர்த்தனைகள், CGST / SGST சட்டத்தின் அட்டவணை- IIன்படி சேவை வழங்கல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரு குளிரூட்டி வணிகர், தனது சரக்குக் கையிருப்பிலிருந்த ஒரு குளிரூட்டியைத் தனது சொந்த பயன்பாட்டுக்காக நிரந்தரமாக விட்டில் போட்டுவிடுகிறார். இந்த பரிவர்த்தனை வழங்கல் என்று கருதப்படுமா?

ஆம். அட்டவணை-1 தொடர் எண் 1ன்படி, உள்ளீட்டு வரி வரவு பெறப்பட்ட வியாபாரச் சொத்துகளின் நிரந்தர பயன் மாற்றம் அல்லது விற்பனை, அவற்றால் எந்த மறுபயனும் பெறப்படவில்லை என்றால் GST இன் கீழ் வழங்கல் என்றே கருதப்படும்.

ஒரு நபர், சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கிய காரை ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒரு வணிகரிடம் விற்றுவிடுகிறார். இந்தப் பரிவர்த்தனை CGST / SGSTயின் கீழ் வழங்கல் என்று கருதப்படுமா? காரணங்களுடன் விளக்குக.

இல்லை ஏனென்றால் அந்த நபரால் ஒரு வியாபாரமாகவோ வியாபாரத்தின் முன்னேற்றத்துக்காகவோ அந்த வழங்கல் நிகழ்த்தப்படவில்லை. மேலும் அந்தக் கார், வியாபாரத்துடன் தொடர்பில்லாத பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டதால் அதை வாங்குகையில் அதற்கு உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்பட்டிருக்காது.

பிரிவு 7ல் சரக்குகள் இறக்குமதி குறிப்பிடப்படவே இல்லையே. ஏன்?
 • சரக்குகள் இறக்குமதி, சுங்கச் சட்டம் 1962ன் கீழ் தனியாகக் கையாளப்படுகிறது. அதன்படி சுங்கக் கட்டணச் சட்டம் 1975ன் கீழான அடிப்படை சுங்க வரியுடன், கூடுதல் சுங்க வரியாக IGST விதிக்கப்படுகிறது.
CGST/SGST சட்டத்தின் கீழ் வழங்கல் என்பதை வரையறுக்கத் தேவையான அத்தியாவசியக் கூறுகள் யாவை?
 • வழங்கல் என்று வரையறுக்கப்பட பின்வரும் கூறுகள் நிறைவேறப்பட்டிருக்க வேண்டும், அதாவது

(i) நிகழும் செயல்பாடு சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்கியதை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

(ii) வேறு வகையில் குறிப்பிடப்படாதவரை, அந்த வழங்கல் ஒரு மறுபயனுக்காக நிகழ்த்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

(iii) வியாபாரத்தின் பகுதியாகவோ அல்லது வியாபார முன்னேற்றத்துக்காகவோ வழங்கல் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

(iv) வரி விதிப்புக்குரிய நிலப் பகுதிக்குள் வழங்கல் நடந்திருக்க வேண்டும்.

(v) வழங்கல் வரி விதிப்புக்குரிய வழங்கலாக இருக்க வேண்டும் மற்றும்

(vi) வரி விதிப்புக்குரிய நபரால் வழங்கல் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

GSTN தளத்தில் GST பரிவர்த்தனைகளுக்காக கிரெடிட் கார்டு விவரங்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமா?
 • ஆம் வரி செலுத்துபவர் தன்னுடைய கிரெடிட் கார்டு விவரங்களை பொது GSTN தளத்தில், வரி செலுத்துவதற்கும் முன் பதிவு செய்ய வேண்டும். GSTN தரப்பிலிருந்து, வரி செலுத்துபவரின் கிரெடிட் கார்டு விவரங்கள், அந்த சேவையை வழங்கும் வங்கிகள் மூலம் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படும்.
 • கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைகள், தொழில்கள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக எந்தவித வரம்பும் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.
ஆதாரத்தில் சேர்க்கப்பட்ட வரி (TCS) என்பது என்ன?
 • CGST/SGST சட்டம் பிரிவு 52இன்படி இது இ-காமர்ஸ் ஆபரேட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள், ஏஜெண்டுகள் அல்லாதவர்கள் கணக்கிடப்பட்ட தொகை, “சப்ளையின் மொத்த மதிப்பில்” ஒரு சதவிகிதத்துக்கு மிகாமல் சேகரிக்கப்படும். மாத அடிப்படையில் அந்தத் தொகை இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் மூலம் குறிப்பிட்ட GST கணக்கில் அடுத்துவரும் மாதத்தின் 10ஆம் தேதியில் வரவு வைக்கப்பட வேண்டும். TCS ஆக வைப்பு வைக்கப்படும் தொகையானது சப்ளையரின் எலக்ட்ரானிக் கேஷ் லெட்ஜரில் பதிவு செய்யப்படும்.
இந்த TDS செயல்முறையில் சப்ளையர் தன்னுடைய வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது எத்தகைய பங்கு வகிக்கிறார்?
 • TDS-ஆக காட்டப்படும் எந்தவொரு தொகையும் குறிப்பிட்ட சப்ளையரின் மின்னணு கேஷ் லெட்ஜரில் குறிப்பிடப்படும். அவர் இந்த தொகையை அவர் தன்னுடைய வரி வட்டி மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இ-எஃப்பிபி (E-FPB) என்றால் என்ன?
 • இ-எஃப்பிபி என்பது எலக்ட்ரானிக் ஃபோகல் பாயிண்ட் பிரான்ச்சின் சுருக்கம். இவை ஜிஎஸ்டி 6) If 5L600TIf y560)6TL பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் ஆகும். ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட வங்கியும், இந்தியா முழுவதுமான பரிவர்த்தனைகளுக்கு ஒரே ஒரு இ-எஃப்பிபி கிளையை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இந்த இ-எஃப்பிபி கிளை ஒவ்வொரு அரசு துறைகளின் தலைமை அலுவலகத்துக்கும் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும்.
 • மொத்தம் 38 கணக்குகள் (CGST, IGST கணக்குகள் மற்றும் மாநிலங்கள்யூனியன் பிரதேச அரசுகளுக்கான SGST கணக்குகள்) தொடங்கப்பட வேண்டும். இ-எஃப்பிபி மூலம் பெறப்படும் வரி மற்றும் கட்டணங்கள், அந்த இ-எஃப்பிபி கிளை வசம் வைத்துள்ள சரியான GST கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். நெஃப்ட் / ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி இ-எஃப்பிபி கிளையாக செயல்படும்.
பிற கட்டணங்கள் என்பது எதைக் குறிக்கிறது?
 • “பிற கட்டணங்கள் என்பது வட்டி, அபராதம், கட்டணங்கள் மற்றும் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் செலுத்தப்பட வேண்டிய பிற கட்டணங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது.
CPIN என்பது என்ன?
 • CPIN என்பதன் விரிவாக்கம் பொது தள அடையாள எண் (Common Portal Identification Number -CPIN). இது பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டு உருவாக்கத்தின் போது வழங்கப்படும். 14 இலக்க எண் கொண்ட இந்த CPIN எண்ணை வைத்து விண்ணப்பச் சீட்டை அடையாளம் காண முடியும். மேலே குறிப்பிட்டது போல, சிபிஐஎன் எண்ணும் 15 நாட்கள் மட்டுமே வாலிட்டி கொண்டது.
வரி செலுத்துபவர் பல முறை பரிவர்த்தனை விண்ணப்பங்களைச் செய்ய முடியுமா?
 • ஆம், வரி செலுத்துபவர் பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டுகளைப் பகுதியாக நிரப்பி, தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு பின்னர் கூட நிறைவு செய்ய முடியும். சேமிக்கப்பட்ட விண்ணப்பம் நிறைவு செய்வதற்கு முன் திருத்தம்’ செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
 • வரி செலுத்துபவர் விண்ணப்பத்தை நிறைவு செய்த பிறகு, வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனையைச் செய்ய விண்ணப்பத்தை ஜென்ரேட் செய்யலாம். பணம் செலுத்துபவர் அந்த விண்ணப்பத்தைத் தனது பதிவுக்காக அச்சு எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
 • GSTN மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் (CBS) இடையிலான தொடர்பானது ரியல் டைமில் செயல்படும். சிபிஐஎன் (CPIN) ஆனது தானாகவே வங்கி வழியாக மின்னணு சரிபார்த்தல் நிகழ்வுக்காக அனுப்பப்படும் மற்றும் வரி மற்றும் கட்டணங்களைப் பெறுவது மற்றும் பரிவர்த்தனை விண்ணப்பச் சீட்டு எண் (CIN) வங்கிகள் தானாகவே GSTN பொதுத்தளத்துக்கு அனுப்பப்பட்டு பரிவர்த்தனை விண்ணப்பத்தின் ஒப்புதல் நிறைவுசெய்யப்பட்டதை உறுதி செய்யும். இந்த செயல்முறையில் வங்கி காசாளர்/கணக்காளர் அல்லது வரி செலுத்துபவர் உட்பட எந்த மனிதத் தலையீடும் இருக்காது.
காசோலை வழங்கப்பட்ட தேதி அல்லது பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதி அல்லது அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தேதி ஆகிய இரண்டில் எந்தத் தேதி செலுத்த வேண்டிய வரிக்கான டெபாசிட் தேதியாக எடுத்துக்கொள்ளப்படும்?

அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

வரி செலுத்துபவர் வரிக் கணக்கு தாக்கல் செய்து, வரிச் செலுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்?
 • அதுபோன்ற சமயங்களில், தாக்கல் செய்யப்பட்ட கணக்கு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. பிரிவு 2 (117) ஆனது பிரிவு 39இன் துணைப் பிரிவு (1) தாக்கல் செய்யப்பட்ட கணக்குக்கான முழு வரியையும் செலுத்தியிருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்குத் தாக்கல் ஆகும். அந்தக் கணக்குத் தாக்கலில் மட்டுமே பொருட்களைப் பெறுபவர் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார். வேறு வார்த்தைகலில் சொன்னால், சப்ளையர் வரிக் கணக்கு தாக்கல் செய்து முழு செல்ஃப்-அசெஸ்டு வரியையும் செலுத்தினால் மட்டுமே, பொருளைப் பெற்றவர் தாக்கல் செய்த வரிக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் வசதி ஏற்றுக்கொள்ளப்படும்.
வரி செலுத்துவதற்கான கால வரம்பு நீட்டிக்கப்படவும் அல்லது தவணை முறையில் செலுத்தவும் வாய்ப்பிருக்கிறதா?
 • இல்லை, இவை செல்ஃப்-அசெஸ்டு வரிச் செலுத்தலில் அனுமதிக்கப்படுவதில்லை. பிற நிகழ்வுகளில், கால வரம்பும், தவணை முறை வரி செலுத்தலும் CGST/SGST சட்டம் பிரிவு 80ன் படி அனுமதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு.
எப்படி வரி செலுத்தலாம்?

பின்வரும் முறைகளில் வரி செலுத்தலாம்:

 • பொதுவான தளத்தில் வரி செலுத்துபவர் நிர்வகித்துவரும் கடன் புத்தகத்தலிருந்து செலுத்தலாம். இதன் மூலம் வரி மட்டுமே செலுத்த முடியும். வட்டி, அபராதம் மற்றும் பிற கட்டணங்கள் கடன் புத்தகத்திலிருந்து செலுத்த முடியாது. வரி செலுத்துபவர்கள் செலுத்தப்பட்ட வரிகளை இன்புட் டேக்ஸ் கிரெட்டாக எடுத்துக்கொள்ளவும், அவற்றை அவுட்புட் டேக்ஸ் செலுத்தலுக்காக பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், CGSTயின் எந்தவொரு இன்புட் டேக்ஸ் கிரெடிட்டும், SGST வரிச் செலுத்தலுக்காகப் பயன்படுத்த முடியாது. அதேபோல் இதன் மாற்று வழிமுறையும் அனுமதிக்கப்பட மாட்டாது. IGST, CGST மற்றும் SGST என்ற வரிசையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 • பொதுவான தளத்தில் வரி செலுத்துபவர் நிர்வகித்து வரும் பணப் புத்தகத்தில் இருந்து பணமாகச் செலுத்தலாம். பணப் புத்தகத்தில் மின்னணு பரிவர்த்தனைகள் (இண்டர்நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு) மூலம் பணம் வைப்பு வைக்க வேண்டும்; மற்றும் RTGS நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் (NEFT) அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் பணமாகச் செலுத்துவதன் மூலமும் GST வரியைச் செலுத்தலாம்.
வசூலித்த TCS ஐ அரசு கணக்கில் செலுத்த வேண்டிய கால அவகாசம் எவ்வளவு?

மின்னணு ஆபரேட்டரால் வசூலிக்க படும் TCS தொகையை மாதம் முடிந்து 10 நாட்களில் அரசாங்க கணக்கில் செலுத்த வேண்டும்

UIN க்கு refund செயல்முறை நடைமுறை படுத்துவதற்கு யார் பொறுப்பு?
 • Refund கோரும் அனைத்து நிறுவனங்களும் படிவம் RFD-10 ஐ கொள்முதல் பொருட்களின் விலைப்பட்டியலுடன் அறிக்கையை நிரப்பி மத்திய வரி ஆணையர் அதிகார சபைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து Refund-ம் சம்மந்தப்பட்ட மத்திய வரி அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
UIN முகவர்கள் தான் வாங்கிய பொருட்களின் விலைப்பட்டியலில் UIN எண் குறிப்பிடவில்லை எனில் Refund பெறமுடியுமா?
 • Rule 46, CGST சட்டம் 2017 ன் படி விலைப்பட்டியலில் UIN எண் குறிப்பிடுவது அவசியம் ஆகும். ஜூலை 2017 முதல் மார்ச் 2018 வரையுள்ள வில்லைப்பட்டியலுக்கு  இந்த நிபந்தனையை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை இந்த நிபந்தனையை தள்ளுபடி செய்ய Circular No. 63/37/2018-GST dated 14.09.2018 ஐ வெளியீட்டுள்ளது.
மாநில வரி அதிகாரியிடம் UIN முகவர்கள் Refund பெறுவதற்கு விண்ணப்பிக்கலாமா?
 • இல்லை. மத்திய வரி ஆணைய அதிகாரியிடம் தான் UIN முகவர்கள்  Refund பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஐ.நா. அமைப்புக்கள் வாங்கிய உள் பொருட்களுக்கு செலுத்தப்பட்ட GST ஐ எவ்வாறு திரும்பப் பெறலாம்?

CGST Rule 95 ன் கீழ் Refund பெறுவதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.மேலும், Circular No. 36/10/2018-GST dated 13.03.2018 மற்றும் Circular No. 43/17/2018-GST dated 13.04.2018 வழிமுறைகளை தெளிவுப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.

பிரிவு 55 ன் கீழ் எந்தெந்த நபர்கள் Refund பெறுவதற்கு தகுதியானவர்கள்?
 • மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு எண்.16/2017-CT(Rate) ல் பின்வரும் நபர்கள் Refund பெறுவதற்கு தகுதியானவர்கள் :
 • United Nations or a specified international organisation
 • Foreign diplomatic mission or consular post in India, or diplomatic agents or career consular officers posted therein
எந்தக் காரணமும் சொல்லாமல் பணம் திரும்பப் பெறும் கோரிகைகைய நிராகரிக்க முடியுமா?
 • நிராகரிக்க முடியாது. இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என உரிய அதிகாரி முடிவுசெய்தால் அவர் GST RFD-08 படிவம் வாயிலாக விண்ணப்பதாரருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
 • GST RFD -09 படிவத்தில் இதற்கான பதிலை அளிக்கும்படி விண்ணப்பதாரரை கேட்டுக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரரின் பதிலை பரிசீலித்தப் பிறகு 15 நாட்களுக்குள் இந்த அதிகாரி பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிகையை ஏற்றக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.
 • இதற்கான உத்தரவை GST RFD-06 படிவம் வாயிலாக மட்டுமே அவர் பிறப்பிப்பார்.
பணம் திரும்பப் பெறும் கோரலில் குறைபாடுகள் இருந்தால் என்ன ஆகும்?
 • பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அது குறித்து 15 நாட்களுக்குள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
 • GST RFD-03 படிவம் உரிய அதிகாரி, குறைபாடுகளை விண்ணப்பதாரருக்குச் சுட்டிக்காட்டி இவற்றை நிவர்த்தி செய்த பிறகு, பணம் திருப்பப் பெறுவதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யும்படி, பொதுவான இணையதள வலைவாயில் மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டும்.
பணம் திரும்பப் பெறுவதற்காக(ம) பணம் திரும்பப் பெறுவதை அனுமதிப்பதற்கு தாக்கல் செய்யும் படிவத்திற்கு குறிப்பிட்ட ஏதாவது வடிவம் உள்ளதா?
 • பணம் திரும்பப் பெறுவதற்காக தாக்கல் செய்யும் ஒவ்வொரு கோரலும்GST RFD1 படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால், மின்னணு ரொக்க பேரேட்டில் உள்ள மீதமிருக்கும் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக கோரல், மாதாந்திர காலாண்டு வரவு செலவு தாக்கல் படிவம் பொருத்தமான GSTR 3, GSTR 4 அல்லது GSTR 7 இவற்றில் காலத்திற்கு பொருத்தமான படிவத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
 • பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை முறையாக இருந்தால், உரிய அதிகாரி GST RFD-06 படிவம் வாயிலாக பணம் வழங்குவதை அனுமதிப்பார். GST RFD05 படிவம் வாயிலாக அனுமதி ஆலோசனை வழங்கப்படும். திரும்ப வழங்கப்பட வேண்டிய தொகை விண்ணப்பதாரருக்கு அவர் கொடுத்த வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பட்டுவாடா முறையில் வரவு வைக்கப்படும்.
தற்காலிகமாக பணம் திருப்பிக்கொடுக்கப்படுவதற்கான கால அவகாசம் என்ன?

CGST/SGST சட்டத்தின் 54-வது பிரிவின் உட்பிரிவு 6-ன்படி வரி விதிக்கப்படாத பொருள்கள் விற்பனையைப் பொருத்தவரையில், பணம் திரும்பப் பெறுவதற்காக கோரப்பட்ட தொகையில் 90% வரையில், இதற்கான விண்ணப்பம் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் தற்காலிகமாக வழங்கப்படும்.

ஏற்றுமதிகளில் பணம் திரும்பப் பெற வேண்டிய நிலையில், இதற்கான அனுமதிக்கு BRCஅவசியமா?
 • ஏற்றுமதி பொருள்களுக்கான பணம் திரும்பப் பெறுதலில், இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய BRC ஆவணம் அவசியம் என்று பணம் திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளில் பரிந்துரைக்கப்படவில்லை.
 • ஆனால், ஏற்றுமதி சேவைகளுக்கான பணம் திரும்பப் பெறுதல் விண்ணப்பத்துடன் BRC விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஆவணங்கள் சரிபார்பார்க்கப்படுவதற்கு முன் பணம் திரும்ப வழங்கப்படுமா?
 • வரி விதிக்கப்படாத பொருள்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் (அறிவிக்கப்படக்கூடிய பதிவுபெற்ற நபர்கள் அல்லாதவர்கள்) விற்பனை செய்த பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் பணம் திரும்பப் பெறக் கோரிக்கை விடுக்கும்போது 90% தொகையை தற்காலிக அடிப்படையில் சரிபார்ப்பதற்கு முன்னரே திரும்பப்பெற அனுமதிக்கப்படலாம்.
 • CGST/SGST சட்டத்தின் 54-வது பிரிவின் உட் பிரிவு 6-ன்படி விதிக்கப்படக்கூடிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதி வழங்கப்படும்.
பணம் திரும்பப் பெறுவதற்கு ஏதாவது குறைந்தபட்ச ஆரம்பத்தொகை என்று உள்ளதா?
 • CGST/SGST சட்டத்தின் 54-வது பிரிவின் துணைப் பிரிவு 14. ன்படி தொகை 1000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், எந்த தொகையும் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
CGST ,SGST சட்டத்தின் 54-வது பிரிவின் துணைப் பிரிவு 11-ன்படி பணம் திரும்ப வழங்கப்படுவது நிறுத்தி வைத்துக்கொள்ளப்பட்டால், வரி விதிக்கப்பட வேண்டிய நபருக்கு வட்டித் தொகை வழங்கப்படுமா?
 • மேல் முறையீட்டின் அல்லது மேற்கொண்டு நடவடிக்கையின் விளைவாக வரி விதிக்கப்பட வேண்டிய நபர் பணம் திரும்பப் பெறுவதற்கு உரிமை உள்ளவராக மாறினால், CGST/SGST சட்டத்தின் 54-வது பிரிவின் துணைப் பிரிவு 12-ன்படி வட்டித்தொகைப் பெறவும் உரிமை பெறுகிறார்.
வரி செலுத்துவது நுகர்வோருக்கு மாற்றப்படும் நிலையில், பணம் திரும்பப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்படுமா?

ஆம், அவ்வாறு திரும்ப வழங்கப்பட்ட தொகை நுகர்வோர் நல நிதியில் வரவு வைக்கப்படும். CGST/SGST சட்டத்தின் 57-வது பிரிவின்படி.

நியாயமற்ற முறையில் வேறொருவர் பலன்பெறும் கோட்பாடு (Principle of unjust enrichment) பணம் திரும்பப் பெறுதலில் பொருந்துமா?
 • பணம் திரும்பப் பெறுதலில் பின்வரும் ஒருசில சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் நியாயமற்ற முறையில் வெறொருவர் பலன்பெறும் கோட்பாடு பொருந்தும்:
 • வரி விதிக்கப்படாத பொருள்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டுமே அல்லது வரி விதிக்கப்படாத விற்பனைப் பொருள்கள் உற்பத்தி செய்யப் பயன்படும் கொள்முதல்கள் அல்லது கொள்முதல் சேவைகளுக்கு செலுத்தப்பட்ட வரியைத் திருப்பி வழங்குதல்.
 • பின்வருவன தொடர்பான பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கடன் (அ) வரி விதிக்கப்படாத வரிசெலுத்தப்படாத விற்பனைகள், அல்லது,(ஆ) உற்பத்திப் பொருள்களுக்கான வரி விகிதத்தைவிட கொள்முதல் பொருள்களுக்கான வரிவிகிதம் அதிகமாக இருப்பதால், கடன் மொத்தமாக சேர்ந்திருக்கும் போது ,(இ) வழங்கப்படாத விலைப்பட்டி வழங்கப்படாத, விற்பனைக்காக செலுத்தப்பட்ட வரியை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ திருப்பிக் கொடுத்தல் (ஈ) CGST/SGST சட்டத்தின் 7-வது பிரிவின் படி தவறாக வதலிக்கப்பட்டு மாநில அல்லது மத்திய அரசிடம் செலுத்தப்பட்ட வரியை திருப்பிக் கொடுத்தல் (உ) வரிச்சுமை அல்லது செலுத்தப்பட்ட வட்டி வேறு எந்த நபருக்கும் மாற்றப்படவில்லை என்றால் (ஊ) அரசு அறிவிக்கக்கூடிய வரிச்சுமையை ஏற்றுக்கொண்ட இப்படிப்பட்ட வேறு வகையான நபர்கள்.
தூதரகங்கள் அல்லது ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்களுக்கு வரிவிதிக்கப்படுமா அல்லது விலக்கு அளிக்கப்படுமா?
 • தூதரகங்கள் அல்லது ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்களுக்கு வரிவிதிக்கப்படும், இது பின்னர் CGST/SGST சட்டத்தின் 54-வது பிரிவின் 2-வது உட்பிரிவின்படி பணம் திரும்பப் பெறுவதற்காகக் கோரப்படலாம்.
 • இந்தக் கோரிக்கை CGST/SGST பணம் திரும்பப் பெறும் விதிமுறைகளில் பரிந்துரைக்கப்பட்ட முறையில் பொருள்கள் பெறப்பட்ட மாதத்தின் கடைசி தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிவடைவதற்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.
 • ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் வெளிநாடுகளின் இணை தூதரகம் அல்லது தூதரகங்கள் (CGST/SGSTசட்டத்தின் 26 பிரிவின் 1-வது உட்பிரிவின்படி) தனிப்பட்ட அடையாள எண்ணை (Unique Identity Number) பெற வேண்டும்.
 • மேலும் இந்த அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள், விற்பனையாளர்களின்) உற்பத்தி வழங்கல்கள் வருமான வரி கணக்குத் தாக்கலில் இவர்களது தனிப்பட்ட அடையாள எண்ணில் காட்டப்படும்)
வரி விதிக்கப்பட வேண்டிய ஒரு நபர், மாநிலங்களுக்கு இடையே மாநிலத்திற்குள் தான் வழங்கிய பொருள்களுக்கு IGST/CGST/SGST தவறுதலாகச் செலுத்திவிட்டார், ஆனால் இதைத் தொடர்ந்து இந்தத் தவறு தெளிவாக்கப்பட்டுவிட்டது. CGST/SGST தொகை தவறாக செலுத்தப்பட்ட IGST தொகையில் சமன் செய்யப்படுமா அல்லது தவறாக செலுத்தப்பட்ட SGST IGST தொகை, CGST/SGST தொகையில் சமன் செய்யப்படுமா?
 • வரி செலுத்த வேண்டிய ஒரு நபர் CGST/SGST அல்லது தவறாக செலுத்தப்பட்ட IGST அல்லது CGST/SGST தொகையில் சமன் செய்துகொள்ள முடியாது.
 • ஆனால், அவ்வாறு தவறாக செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெறும் உரிமை பெற்றுள்ளார் . (CGST/SGSTசட்டத்தின் 77வது பிரிவின்படி)
ஏற்றுமதி தீர்வை உட்பட்ட பொருள்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கான கடன் தொகையைத் திரும்பப் பெற முடியுமா?
 • CGST,SGST சட்டத்தின் 54-வது பிரிவு, 3-வது உட்பிரிவின்படி ஏற்றுமதி தீர்வை உட்பட்ட பொருள்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது பயன்படுத்தப்படாத கொள்முதல் வரிக்கான கடன் தொகையைத் திரும்பப் பெற முடியாது.
வரி செலுத்துபவர் மதிப்பீட்டு ஆணையத்தின் சுருக்கத்தை(Summary) எவ்வாறு பெறவேண்டும்?
 • வரி செலுத்துபவர் படிவம் GST 07 ஐ விண்ணப்பித்து ஆணையத்தினிடம் இருந்து  மதிப்பீட்டு ஆணையத்தின் சுருக்கத்தை(Summary) பெற்றுக்கொள்ளலாம்.
தற்காலிக மதிப்பீடு முறையில் கணக்கிட்டு செலுத்திய வரி இறுதி முடிவில் கணக்கிட்ட வரியை விட அதிகமாக இருந்தால்.வரிசெலுத்துபவர் எவ்வாறு ரிபண்ட் பெற வேண்டும்?
 • வரிசெலுத்துபவர் பிரிவு 54 ன் கீழ் ரிபண்ட் பெறுவதற்கு Common Portal மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஆராய்ந்தபின் ரிபண்ட் செயல்முறை படுத்தப்படும்.
AAR மற்றும் AAAR அளித்த ஆணைகளை எங்கு காணலாம்?

AAR அளித்த உத்தரவுகள் http://gstcouncil.gov.in/rulings-by-advance-authority யில் மற்றும் AAAR அளித்த உத்தரவுகள் http://gstcouncil.gov.in/orders-appellate-authorityadvance-ruling யில் கிடைக்கும்.

ஜிஎஸ்டியின் கீழ் எத்தனை AAR மற்றும் AAAR உள்ளன?

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு AAR மற்றும் AAAR உள்ளனர். AAR மற்றும்  AAAR யின் தொடர்பு விவரங்கள் http://www.gstcouncil.gov.in/ இல் கிடைக்கும்.

கைது செய்தபின் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் யாவை?
 • கைது செய்யப்பட்ட நபரின் மருத்துவ பரிசோதனை மத்திய அல்லது மாநில அரசுகளின் சேவையில் ஒரு மருத்துவ அலுவலகத்தால் நடத்தப்பட வேண்டும், மருத்துவ அதிகாரி கிடைக்கவில்லை என்றால் பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் உடனடியாக கைது செய்யப்படும்.
 • கைது செய்யப்பட்ட நபர் ஒரு பெண் என்றால், அத்தகைய பரிசோதனை ஒரு பெண் மருத்துவ அதிகாரி மேற்பார்வையில் பரிசோதனை நடக்கவேண்டும். பெண் மருத்துவ அதிகாரி இல்லையெனில் ஒரு பெண் பதிவு மருத்துவ பயிற்சியாளர் மூலம் பரிசோதனை நடக்கவேண்டும்.
CGST சட்டம், 2017 ன் கீழ் கைது செய்யப்படுவதற்கான ஆவணத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு ஏதேனும் உள்ளதா?

CGST சட்டம், 2017 ன் கீழ் கைது செய்யப்படுவதற்கான ஆவணத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு எதுவும் இல்லை. ஆனால், D.K. Basu v/s. State of West Bengal reported in 1997 (1) SCC 416 வழக்கில் மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்ட வடிவமைப்பை பூர்த்தி செய்யவேண்டும்.

Appellate Tribunal முன் மேல் முறையீடு செய்வதற்கு ஏதேனும் ஒரு பரிந்துரைக்கப்பட்ட படிவம் இருக்கிறதா?
 • ஆம்.  விதி 110 CGST சட்டம், 2017 ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள FORM GST APL – 05 ல் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க வேண்டும்
கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான SCN வழங்குவதற்கான கால அளவு என்ன?
 • பிரிவு 67(2) கீழ் எந்தவொரு பொருளும் கைப்பற்றப்பட்டால், அந்த பொருளைப் பற்றிய அறிவிப்பை ஆறு மாதங்களுக்குள் அறிவிக்கவேண்டும். போதுமான காரணத்திற்காக, அதிகாரி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கலாம்.
ஒரு நபர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்களைப் பெற முடியுமா?
 • ஆம். அந்த நபர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்களைப் பறிமுதல் செய்த அதிகாரியின் அனுமதியுடன் பெற முடியும்.
தீர்ப்பாயத்திற்கு அதன் உத்தரவை திருத்த அதிகாரமும் உள்ளதா?
 • ஆம். தீர்ப்பாயத்திற்கு அவர்கள் அளித்த உத்தரவில் திருத்தங்கள் செய்ய அதிகாரம் இருக்கிறது. இதை, தவறு கண்டறியப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளாகத் திருத்தப்பட வேண்டும். இந்தத் தவறை, தங்களது ஆவணங்கள் மூலம் கண்டறியலாம், ஆணையாளரும்  தவறைக் கண்டறிந்து ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரலாம். இந்தத் திருத்தத்தினால் மற்றொரு நபர் செலுத்த வேண்டிய வரித் தொகை அதிகமானாலோ அல்லது உள்ளிட்டு வரிக்கடன் குறைந்தாலோ, அந்த நபருக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
எந்த உத்தரவுகளுக்கு எதிராக மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும்?
 • கீழ் குறிப்பிட்டுள்ள உத்தரவுகளுக்கு எதிராக மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும்.
 • National Bench அல்லது Regional Benches of the Appellate Tribunal லால் அளிக்கப்பட்ட உத்தரவுக்கு, அல்லது
 • பிரிவு 117 ன் கீழ் உயர்நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பு அல்லது உத்தரவிற்கு  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்
எந்தெந்த உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு இல்லை?
 • கீழ் குறிப்பிட்டுள்ள CGST அதிகாரிகளால் அளிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யமுடியாது
 • ஆணையாளர் அல்லது பிற அதிகாரியின் உத்தரவின் படி நேரடியாக நடவடிக்கைகளை ஒரு அதிகாரியிடமிருந்து மற்றொரு அதிகாரிக்கு மாற்றுவதற்கு, அல்லது
 • கணக்கு புத்தகங்கள், பதிவு மற்றும் பிற ஆவணம் பறிமுதல் அல்லது தக்கவைத்தல் தொடர்பான ஒரு உத்தரவு, அல்லது
 • CGST சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர ஒரு உத்தரவு, அல்லது
 • பிரிவு 80 ன் கீழ் நிறைவேற்றப்பட்ட ஒரு உத்தரவு. (தவணைகளில் வரி செலுத்துதல்)
வழக்காளிகள் நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு கமிஷனுக்கு (Consumer Disputes Redressal Commissions) செலுத்திய கட்டணத்திற்கு GST உண்டா?
 • நீதிமன்றத்தினால் அல்லது தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்ட சேவைகள் GST வரையறைக்குள் வராது. இது 12 பிப்ரவரி, 2018 தேதியிட்ட CBIC சுற்றறிக்கை எண். 32/06/2018 ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஒரு வரி செலுத்துவோர் ஒரு GST பயிற்சி நிபுணர்களை எப்படி தேடலாம்?

GST போர்ட்டில் பதிவுசெய்யப்பட்ட நபரின் டாஷ்போர்டில் ஒரு செயல்பாடு உள்ளது. இதில், மாநில, மாவட்ட மற்றும் பின்கோடு வாரியாக உள்ள அனைத்து GST பயிற்சி நிபுணர்களின் தொடர்பு விபரங்களைப் பெற முடியும்.

இறுதி மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டிய சமீபத்திய காலம் என்ன?

தற்காலிக மதிப்பீட்டிற்கான உத்தரவின் தேதியிருந்து ஆறு மாத காலத்திற்குள் இறுதி மதிப்பீடுக்கான உத்தரவை உரிய அதிகாரி பிறப்பிக்க வேண்டும். ஆனால், போதுமான காரணங்கள் காட்டப்பட்டு காரணங்கள் எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால், மேலே குறிப்பிட்ட ஆறு மாத காலகட்டம் பின்வருபவர்களால் நீட்டிக்கப்படலாம்: (அ) இணை / கூடுதல் ஆணையர் மூலம் மேலும் ஆறு மாத காலத்திற்கு மிகாமல், மேலும் (ஆ) இந்த நீட்டிக்கப்பட்ட காலம் ஆணையர் பொருத்தமானது என கருதும் மேலும் நான்கு ஆண்டு காலத்திற்கு மிகாமல், எனவே தற்காலிக மதிப்பீடு தாற்காலிகமாகவே அதிகபட்சம் ஐந்து ஆண்டு காலத்திற்கு நீடிக்கலாம்.

வரி செலுத்த வேண்டிய ஒருவர் சட்டப்படி (சட்டப்பிரிவு 39 (மாதாந்தரகாலாண்டு) அல்லது 45 (இறுதி வருமான வரி கணக்குத் தாக்கல்) வருமானம் மற்றும் செலவு விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறினால், வரி அதிகாரி சட்டபூர்வமான மாற்று வழி என்ன?

வருமானம் மற்றும் செலவு விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்த வேண்டிய நபருக்கு முதலில் உரிய அதிகாரி CGST/SGST சட்டத்தின் 45-வது பிரிவின் கீழ் பதினைந்து நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யச் சொல்லி ஒரு அறிக்கையை அனுப்புவார். கொடுக்கப்பட்டுள்ள காலகட்டத்திற்குள் வரிசெலுத்த வேண்டிய நபர் வருமான வரிகணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், உரிய அதிகாரி தன்னிடம் இருக்கும் இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யத் தவறியவரிடமிருந்து வரவேண்டிய வரித் தொகையை பெறுவதற்காக தானாகவே முடிவுசெய்து நடவடிக்கைகளை எடுப்பார். (சட்டப்பிரிவு 62).

சுருக்கமான மதிப்பீட்டு உத்தரவுக்கு எதிராக வரிசெலுத்துபவருக்கு மேல்முறையீட்டு தீர்வு தவிர வேறு மாற்று வழிகள் என்ன உள்ளது?
 • சுருக்கமான மதிப்பீட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வரி செலுத்த வேண்டிய ஒரு நபர், அந்த உத்தரவு பெறப்பட்ட முப்பது நாட்களுக்குள் தனது பகுதியின் அதிகார எல்லைக்குள் உள்ள கூடுதல்இணை ஆணையரிடம் அதை வாபஸ் பெறுமாறு கோரலாம். மேற்குறிப்பிட்ட அதிகாரி உத்தரவு பிழையாக இருப்பதாக உணர்ந்தால், அதை அவர் வாபஸ் பெறச்செய்து, உரிய அதிகாரியிடம் சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 73 அல்லது 74 வது பிரிவுகளின்படி வரி பொறுப்பைத் தீர்மானிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். சுருக்கமான மதிப்பீட்டு உத்தரவு தவறு என்பதைக் கண்டறிந்தால், கூடுதல்/இணை ஆணையர் இதே மாதிரியான நடவடிக்கையைப் பின்பற்றி தானாகவே சட்டப்படி நடவடிக்கையை மேற்கொள்ளலாம். (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 64. வது பிரிவு).
வரிலுத்துவோருக்கான கணக்குத் தணிக்கையை யார் மேற்கொள்ள முடியும்?
 • கீழே விளக்கப்பட்டுள்ளது போல ஜி. எஸ்டி சட்டத்தில்(ங்களில்) நான்கு வகை கணக்குத் தணிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது:

(அ) பட்டயக் கணக்காளர் அல்லது செலவு கணக்காளரால் மேற்கொள்ளப்படும் கணக்குத் தணிக்கை: பதிவு பெற்றுள்ள பரிந்துரைக்கப்பட்ட வரையறைக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும், தனது கணக்குகளை ஒரு பட்டயக் கணக்காளர் அல்லது செலவு கணக்காளரைக் கொண்டு கணக்குத் தணிக்கை செய்துகொள்ள வேண்டும், (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி சட்டத்தின் 355)-வது பிரிவு)

(ஆ) துறையினார் கணக்குத் தணிக்கை: சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. அல்லது யு.டி. ஜி. எஸ்.டி ஆணையர் அல்லது வேறு அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான அல்லது குறிப்பிட்ட உத்தரவின் பேரில் எந்த ஒரு பதிவு பெற்ற நபருக்கும் கணக்குத் தணிக்கை செய்யலாம். இதற்கான காலகட்டம் மற்றும் கணக்குத் தணிக்கை முறை உரிய நேரத்தில் பரிந்துரைக்கப்படும். (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 65-வது பிரிவின்படி)

(இ) விசேஷ கணக்குத் தணிக்கை: மீளாய்வு, விசாரணை ஆய்வு அல்லது வேறு எந்த நடவடிக்கையின் எந்த ஒரு கட்டத்திலும் துறையின் கருத்துப்படி மதிப்பு சரியானபடி அறிவிக்கப்படவில்லை அல்லது பெறப்பட்ட கடன் சாதாரண வரையறைகளுக்குள் இல்லை என்றால், துறையால் நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் அல்லது செலவு கணக்காளரை விசேஷ கணக்குத் தணிக்கை செய்யுமாறு துறை உத்தரவிடலாம். (சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 66. வது பிரிவின்படி)

கணக்கு தணிக்கை அறிவிப்பைப் பெறும், வரி செலுத்தும் நபரின் கடமைகள் என்னென்ன?
 • வரி செலுத்த வேண்டியநபர் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும்:

(அ) கையில் இருக்கும் அல்லது அதிகாரிகள் கோரிய கணக்குகள்/ஆவணங்களை சரிபார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்,

(ஆ) கணக்குத் தணிக்கை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்க வேண்டும், மேலும்

(இ) கணக்குத் தணிக்கை சரியான நேரத்தில் பூர்த்தியடைய வேண்டிய உதவிகளை செய்தல்.

கணக்குத் தணிக்கை முடிந்த பிறகு உரிய அதிகாரி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?
 • கணக்குத் தணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் வரிசெலுத்த வேண்டிய நபருக்கு தனது கண்டுபிடிப்புகள், அதற்கான காரணங்கள் மற்றும் அந்த கண்டுபிடிப்புகள் குறித்த வரிசெலுத்த வேண்டிய நபரின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
விசேஷ கணக்குத் தணிக்கைக்குப் பின் வரிவிதிப்பு அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?
 • சி.ஜி.எஸ்.டி எஸ்.ஜி. எஸ்.டி. சட்டத்தின் 73 அல்லது 74-வது பிரிவின்படி விசேஷ தணிக்கையில் கண்டறிந்த ஆராய்ந்த விஷயங்களின் அடிப்படையில் நடவடிக்கைத் தொடங்கப்படலாம்.
CGST சட்டம் 61வது பிரிவின் கீழ் அதிகாரி ஒருவர் மீளாய்வு செய்யும் சமயத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமானம் மற்றும் செலவு விவரங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளுக்கான உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், வேறு என்ன மாற்று வழி உள்ளது?
 • வரி செலுத்த வேண்டிய நபர், தகவல் தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் (சம்பந்தப்பட்ட அதிகாரியால் நீட்டிக்கப்படலாம்) திருப்திகரமாக விளக்கம் வழங்கவில்லை என்றால், அல்லது முரண்பாடுகளை ஏற்ற பின் முரண்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதத்தில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையில் அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், உரிய அதிகாரி பின்வரும் விதிகளில் ஏதாவது ஒரு மாற்று வழியைத் தேர்ந்தெடுப்பார்:

(அ) சட்டப் பிரிவு 65இன் கீழ் கணக்குத் தணிக்கை நடத்துதல்

(ஆ)சட்டப் பிரிவு 66இன் கீழ் இந்த நோக்கத்திற்காகவே ஆணையரால் நியமிக்கப்பட்ட ஒரு பட்டயக் கணக்காளர் செலவு கணக்காளர் அல்லது ஒரு விசேஷ கணக்குத் தணிக்கை நடத்த வழிகாட்டுதல்; அல்லது,

(இ) சட்டப் பிரிவு 67இன் கீழ் ஆய்வு மேற்கொள்தல், தேடல், பறிமுதல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றுதல்; அல்லது

(ஈ) சட்டப் பிரிவு 73 அல்லது 74-ன் கீழ் வரி மற்றும் பிற நிலுவைகள் குறித்து தீர்மானிப்பதற்கான அடுத்த நடவடிக்கையைத் தொடங்குதல்.

ஏற்றுமதி செய்யும், மாநிலம், இறக்குமதி செய்யும் மாநிலம், மத்திய அரசு ஆகியவற்றிடையே ஒப்பந்தம் என்பது எப்படி இருக்கும்?
 • மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்குமிடையே இரண்டு விதமான ஒப்பந்தக் கணக்கீட்டு முறை இருக்கும்.
 • மத்திய அரச மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலம் ஏற்றுமதியில் ஈடுபடும் மாநிலம் பொருள் வழங்குபவர் பயன்படுத்தும் IGST யின் ITC தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசுக்கு செலுத்தும்.
 • மத்திய அரசும் இறக்குமதி செய்யும் மாநிலமும்: மத்திய அரசு, இந்த வாணிபம் தொடர்புள்ள டீலர் மாநிலங்களிடையேயான வழங்கல்களுக்கான SGST கட்டணத்தை செலுத்துவதற்குப் பயன்படுத்திய IGST யின் ITC தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசு செலுத்தும் இவை தொடர்பான மாநில அளவிலான ஒப்பந்தம் குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து டீலர்களும் ஒப்பந்த காலத்தில் தரும் விவரங்களின் ஒட்டுமொத்த கணக்கீட்டின் அடிப்படையில் இருக்கும் இதே போன்றதொரு ஒப்பந்தப்படி தொகை அளித்தல் CGST மற்றும் IGST -க்கு இடையே எடுத்துக்கொள்ளப்படும்.
உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான கால வரையறை என்ன?
 • எந்த உத்தரவை எதிர்த்து முறையீடு செய்கிறாரோ அது தொடர்பான உத்தரவைப் பெற்ற நாளிலிருந்து 180 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து எந்த அமைப்பின் முன், முறையீடு செய்யலாம்?
 • வட்டார தீர்ப்பாயத்தின் மாநில அமர்வு அல்லது அமர்வு மன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றத்தின் கீழ் வரும் அதாவது, இம்மன்றங்களின் தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டில் தீர்க்கப்பட வேண்டிய சட்டச் சிக்கல் அடங்கியுள்ளது என்று கருதினால், (சட்டப் பிரிவு 117(1) அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். ஆனால் தேசிய அமர்வு மன்றம், மற்றும் பிராந்திய அமர்வு மன்றங்கள், உயர்நீதி மன்றத்தின் விசாரணை வரம்பின் கீழ் வராது.
 • இம் மன்றங்கள் அளிக்கும் தீர்ப்பானையை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும். (சட்டப் பிரிவு 1095)இன்படி வழங்கலின் இடம் குறித்தான பிரச்சினைகளில் உருவாகும் மேல் முறையீடுகளை தேசிய அமர்வு மற்றும் பிராந்திய அமர்வு மன்றங்களிலும் தீர்மானம் செய்ய முடியும்)
ஜிஎஸ்டி யின் படி மறுஆய்வு அதிகாரி தனது கீழ்நிலை அதிகாரிகளின் ஆணையை மாற்றும் அதிகாரத்திற்குத் தடைபோட ஷரத்துக்கள் உள்ளனவா?
 • ஆம். மறுஆய்வு அதிகாரியினால், ஏற்கெனவேவெளியிடப்பட்ட தீர்ப்பாணை, சட்டப் பிரிவு 107இன் கீழ்,அல்லது 112ன் கீழ் அல்லது 117ன் கீழ் அல்லது 118ன் கீழ் வெளியிடப்பட்டால், மறு ஆய்வு அதிகாரி தலையிட முடியாது.
 • 107(2) சட்டத்தில் குறிப்பிட்டுள்ள கால அவகாசம், முடிவுக்கு வராத நிலை, அல்லது தீர்ப்பானை வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகள் கடந்த நிலை ஆகியன இருந்தாலும், மறு ஆய்வு அதிகாரி தலையிட முடியாது.
 • இந்த உத்தரவு, இந்தச் சட்டப் பிரிவின் கீழ் ஏற்கெனவே மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும், மறுஆய்வு அதிகாரியால் தலையிட முடியாது.
சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி அதிகாரி இந்தச் சட்டத்தின்படி ஏற்கெனவே அவரது கீழ் நிலை அதிகாரிகள் அறிவித்த உத்தரவை மாற்ற முடியுமா?
 • சட்டப் பிரிவு 2 (99)இன்படி நியமனம் செய்யப்பட்ட மறுஆய்வு அதிகாரி, சட்டப் பிரிவு 108இன்படி இந்த அதிகாரத்தைப் பெறுகிறார். சட்டப் பிரிவு 108 இன்படி, இந்த அதிகாரி, தனது கீழ்நிலை அதிகாரிகளால் அளிக்கப்பட்ட உத்தரவுகள், முடிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கோ, தவறு என்ற முடிவெடுப்பதற்கோ அதிகாரம் படைத்தவர்.
 • இது வரி வருவாய்க்கு இடையூறு விளைவிப்பது சட்டத்திற்குப் புறம்பானது, முறையற்றது. குறிப்பிட்ட உண்மைத் தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதிருந்து இவை, உத்தரவு வெளியிடப்பட்ட சமயத்தில் தெரிய வந்தாலும், இல்லாவிட்டாலும், இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டறி பதிவின் அடிப்படையில் விளைவாக இருந்தாலும், இவ்வாறான காரணங்களால், தேவையானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் தர அனுமதித்த பிறகு, ஏற்கெனவே அளிக்கப்பட்ட உத்தரவை மாற்றலாம்.
மேல் முறையீட்டின்போது, AA ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உத்தரவில் காணப்பட்ட வரி / அபராதம் / தண்டனை மற்றும் திருப்தியளிக்கும் தொகை / ITC - யைக் குறைப்பது ஆகியனவற்றிற்கு அதிகாரம் உள்ளதா?
 • பறிமுதல் செய்வதற்குப் பதிலாக விதிக்கப்படும் தண்டனை கட்டணம், அபராதம் ஆகியனவற்றை உயர்த்துவதற்கும் அல்லது திருப்பி அளிக்க வேண்டிய தொகையைக் குறைப்பதற்கும், அல்லது அளிக்கப்பட்ட வரிக்கடன் தொகையைக் குறைப்பதற்கும் AA-விற்கு அதிகாரம் உண்டு.
 • இதற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பாணைக்கு எதிராக மனுதாரர் தகுந்த காரணங்களை அளித்திருக்க வேண்டும். (சட்டப் பரிவு 107 (11) இன் படி)
ஒவ்வொரு முறை மேல் முறையீடு செய்யும் போதும், முன்வைப்புத் தொகையாக ஆணையத்திடம் அளிக்க வேண்டிய தொகை எவ்வளவு?

எந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறாரோ அதில் அறிவிக்கப்பட்ட அபராதம், முழு வரி, அதற்கான வட்டி, அபராதத் தொகை, கட்டணங்கள் ஆகியவற்றுடன், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட வரித் தொகையில் 10% சேர்த்து, முன்வைப்புத் தொகையாக மேல் முறையீட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும்.

மேல் முறையீட்டு ஆணையர், மேல் முறையீட்டு தாமத்தை அனுமதிக்க அதிகாரம் பெற்றிருக்கிறாரா?
 • ஆம். சட்டம் 1074)இல் குறிப்பிடப்பட்டுள்ள சரியான காரணிகளின் அடிப்படையில் மேல் முறையீட்டுக்கான காரணங்கள் இருந்தால் ஆணையர், மேல் முறையீடு செய்ய வேண்டிய காலவரையறையின் கடைசித் தேதியிலிருந்து 1 மாதம் வரை அதாவது (3+16+1) தாமதத்தை அனுமதிக்கலாம்.
தனக்கெதிரான உத்தரவு அல்லது முடிவினால் பாதிக்கப்பட்டவர் அதை எதிர்த்து முறையீடு செய்ய உரிமை உள்ளதா? உள்ளது எனில் முறையீடு செய்வதற்கான கால வரையறை என்ன?
 • GST சட்டம் (கள்) கீழ் வெளியிடப்பட்ட உத்தரவு (அ) முடிவினால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் பிரிவு 107 இன் கீழ் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. மேற்படி உத்தரவு அல்லது முடிவு “ஆணையிடும் அதிகாரியால்” அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • எனினும், சில முடிவுகள் (ம) கட்டளைகள் (பிரிவு 121 இல் தொடர்புடைய) முறையீடு செய்யப்பட முடியாதவை.
 • பாதிக்கப்பட்டவர், அதற்கான முடிவு அல்லது உத்தரவு கிடைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
 • வருவாய்த் துறைக்குக் கால வரையறை, 6 மாதங்கள். இதற்குள்ளாக மறு ஆய்வு நடைமுறைகள் முடிக்கப்பட்டு, மேல் முறையீட்டு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்
முன்னீட்டு தீர்ப்பு எவ்வளவு காலத்திற்குப் பொருந்தும்?
 • இதற்கெனச் சட்டத்தில் குறிப்பிட்ட காலம் ஏதுவும் குறிப்பிடவில்லை.அதற்கு பதிலாக 103(2) CGST கீழ்,முன்னீட்டு தீர்ப்பு,அது தொடர்புடைய சட்டம்,உண்மை நிலை (அ ) சூழ்நிலைகள் , மாறாத அடிப்படைத் தீர்ப்புடன் ஒத்திசைவு இருக்கும் வரையில் பொருந்தும்.
AAR/AAAR இன் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலோ (அ) உயர் நீதிமன்றத்திலோ மேல்முறையீடு தாக்கல் செய்யலாமா?
 • CGST/SGST சட்டத்தின் கீழ் AAR/AAAR இன் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலோ (அ) உயர் நீதிமன்றத்திலோ தாக்கல் செய்யமுடியாது.ஆனால்,ரிட் மனு தொடர்பான சட்ட அதிகாரம் உயர் நீதிமன்றத்திலும்/உச்ச நீதிமன்றத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
AAR தீர்ப்பாணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமா? அதன் வழிமுறைகள் என்ன?
 • AAR ன் தீர்ப்பாணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.அதன் வழிமுறைகள் CGST/UTGST /SGST(பிரிவு 100/101/14) சட்டத்தின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.
 • AAR ன் தீர்ப்பினால் விண்ணப்பத்தாராரோ (அ) அதிகாரியோ பாதிக்க பட்டுயிருப்பதாக நினைத்தாலோ (அ ) தீர்ப்பில் திருப்தி இல்லையெனில் AAARக்கு முன்னீட்டுத் தீர்ப்பாணைப் பெற்ற 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம்.
AAR உறுப்பினர்களிடையே தீர்பாணை குறித்து வெவ்வெறு கருத்து இருந்தால் என்ன நடக்கும்?
 • AAR உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால்,எந்த அம்சத்தில் வேறுபாடு இருக்கிறதோ அதை AAAR விசாரணைக்கு அனுப்பிவிடுவர்.
எந்தெந்தச் சூழ்நிலையில் முன்னீட்டுத் தீர்ப்பாணைக்குக் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் ?
 • GST சட்டங்களின் எந்த அம்சத்தைப் பற்றிய கேள்வியை மனுதாரர் எழுப்பிகிறாரோ , அதே கேள்வி ஏற்கனவே விசாரணையில் இருந்தாலோ (அ) தகுதிப் பெற்ற மன்றங்களால் முடிவு செய்யப்பட்டு இருந்தாலோ,விண்ணப்பதாரரின் மனுத் தள்ளுபடி செய்யப்படும்.
முன்னீட்டுத் தீர்ப்பு செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க முடியுமா?
 • ஆம்.பின்வரும் சூழ்நிலையில் செல்லாது என்று அறிவிக்கலாம்.
 • அந்தத் தீர்ப்பை ,மனுதாரர் மோசடியான முறையில் பெற்றிருந்தால் , ஆதாரங்களை மறைத்தும் , உண்மை நிலையை மறைத்தும் தீர்ப்பைப் பெற்றிருந்தால், அந்தத் தீர்ப்பைச் செல்லாது என்று அறிவிக்க முடியும்.
முன்னீட்டுத் தீர்ப்பானையின் தீர்ப்பு யாருக்குப் பொருந்தும்?அந்த தீர்ப்பு உயர் நீதிமன்றத்திலோ (அ ) உச்ச நீதிமன்றத்திலோ முன்னுதாரண மதிப்புரிமை வழங்கப்படுமா ?
 • முன்னீட்டுத் தீர்ப்பானையின் தீர்ப்பு முறையீடு செய்த மனுதாரருக்கும் அவரது சட்ட வரம்பெல்லைக்குள் வரும் அதிகாரிகளுக்கு பொருந்தும்.
 • இந்த தீர்ப்பானது உயர் நீதிமன்றத்திலோ (அ) உச்ச நீதிமன்றத்திலோ முன்னுதாரண மதிப்புரிமை வழங்கப்படாது.
GST சட்டத்தின் கீழ் முன்னீட்டுத் தீர்ப்பு வழங்கும் ஆணையத்தின் அமைப்பு முறை என்ன ?

முன்னீட்டுத் தீர்ப்பாணையம் CGST யில் ஒரு உறுப்பினரும் SGST / UTGST யில் ஒரு உறுப்பினரும் மாநில(ம ) மத்திய அரசால் முறையாக நியமிக்கும்.

முன்னீட்டு தீர்ப்பாணை என்றால் என்ன?எந்தந்த கேள்விகளுக்கு முன்னீட்டு தீர்ப்பாணையை அனுகலாம் ?தீர்ப்பு வழங்குவதருக்கான கால அவகாசம் எவ்வளவு?
 • GST சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நபர் பிரிவு 97(2) CGST சட்டத்தின் கீழ் (அல்லது) 100(1) UTGST சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கேள்விகள் சம்மந்தமான கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.ஏழுப்பிய கோரிக்கைகளை AAR (முன்னீட்டு தீர்ப்பானை அதிகாரி) 90 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும்.
வருமான வரி அதிகாரிகளுக்கு கூடுதலாக அதிகாரங்கள் ஏதேனும் உள்ளதா?
 • துணை ஆய்வாளர் பதவிக்கு குறையாத பதவியில் இருக்கும் எந்த அதிகாரியும் குறிப்பிட்ட தகவல்களைக் கேட்டு மின்னணு ஆபரேட்டருக்கு நோட்டீஸ் பேறப்படும் தேதியிலுருந்து 15 வேலை நாட்களுக்குள் தங்குந்த பதிலை அனுப்பும்படி நோட்டீஸ் அனுப்பலாம்.
வங்கி கடனாக தங்கத்தை வியாபாரிகளுக்கு வழங்குகிறது அதற்கான வட்டி தங்கத்தின் விலை மீது கணக்கிட படுகிறது தங்கத்தின் விலை மாறிக்கொன்டே இருப்பதால் முந்தையை சட்டம் போல் இடைக்கால முறை (Provisional Method ) பின்பற்றப்படுமா?
 • ஆம் , வங்கிகள் பிரிவு 60 CGST Act 2017 கீழ் இடைக்கால முறை (Provisional Method) பின்பற்றலாம்.
 • Provisional முறையில் அதிக வரி செலுத்திருந்தால் பிரிவு 54 CGST சட்டம் 2017யின் கீழ் Refund பெற்றுக்கொள்ளலாம் (அ) குறைவாக வரி செலுத்திருந்தால் வித்தியாச தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
பதிவு செய்த ஒரு நபர், கடைசி VAT திருப்புத் தொகையில் கூடுதலாக ITC ரூ.10,000 பெற்றார். GSTயின் கீழ் அவர் காம்பொஸிஷன் திட்டத்தின் கீழ் இருக்கத் தெரிவு செய்கிறார். அவரால் கூடுதல் ITCயை முன்னெடுத்துச் செல்ல முடியுமா?

பதிவு செய்த நபரால், ITCயின் வாட் உபரித் தொகையை காம்பொஸிஷன் திட்டத்தின் கீழ் இருக்கத் தெரிவு செய்வதால் – சட்டப் பிரிவு 140 (1)ஐ முன்னெடுத்துச் செல்ல முடியாது.

GST சட்டம் வருவதற்கு முன்னால் கடைசி ரிடர்னில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட CENVAT கடன் (அல்லது VAT கடன்). இப்போதுள்ள GST- யின் கீழ் ITC - என்பதாக இருக்குமா?
 • பதிவு செய்யப்பட்ட ஒரு நபர், காம்பொஸிஷன் திட்டத்தின் கீழ் வரி செலுத்துவதாக தெரிவு செய்தாலொழிய, அவர் தனது மின்னணு கடன் லெட்ஜரில், கடைசி ரிடர்னில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட CENVAT கடன் (அல்லது VAT கடன்) தொகைக்கு ஈடாகக் கடன் பெற முடியும். புதிய சட்டத்தில் இருக்கும் இது குறித்தான நிபந்தனைகளுக்கு உட்பட்டது. (CGST / SGST சட்டப் பிரிவு 140(1)).
ஒப்புதலின் பேரில் அனுப்பப்பட்ட பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முந்தைய ஆறு மாதங்களுக்கு முன்பாக அனுப்பப்படவில்லை ஆனால் அந்த பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குப் பிறகு ஆறு மாதம் கழித்து விற்றவருக்கே திருப்பி வழங்கப்பட்டால், அதற்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டுமா?

ஆம், அப்படிப்பட்ட பொருட்கள் ஜிஎஸ்டி வரி சட்டத்தின் கீழ் வரிச் செலுத்தப்பட வேண்டியிருந்தால், பொருட்களைத் திருப்பி அளிக்கும் நபர் அல்லது பொருட்களை ஒப்புதல் செய்யாத நபர், நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குப் பிறகு ஆறு மாதம் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்கள்) கழித்து திருப்பி வழங்கும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இந்த நிகழ்வுகளில் பொருட்களை ஒப்புதலில் பேரில் அனுப்பியவரும் வரி செலுத்த வேண்டியிருக்கும் – பிரிவு 142(12).

மாநில VAT வரிச் சட்டத்தின் கீழ், பொருட்களை எங்கு விற்றாலும் VAT வரி பிடிக்கப்படும். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குப் பிறகு பணம் செலுத்தப்பட்டிருந்தால் வரிப் பிடித்தமானது இந்தச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுமா?

இல்லை, இது போன்ற நிகழ்வுகளில் ஆதார விலையில் செய்யப்படும் வரிப் பிடித்தமானது ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்

முந்தைய சட்டத்தின் கீழ் ஐஎஸ்டி பெற்ற சேவைகளுக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் ஜிஎஸ்டி சட்டத்தில் வழங்கப்பட முடியுமா?
 • ஆம், இதுபோன்ற சேவைகளோடு தொடர்புடைய இன்வாய்ஸ் நிர்ணயிக்கப்பட்ட நாளில் பெறப்பட்டிருந்தாலும் சரி அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்டிருந்தாலும் சரி வழங்கப்படும் – சிஜிஎஸ்டி சட்டம் பிரிவு 140(7).
தற்போதுள்ள சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்டநாளுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட எந்த ஒரு அசெஸ்மெண்ட் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ரிஃபண்ட்(Refund) செய்யப்பட வேண்டிய வரி, வட்டி, அபராதம் ஆகியவை ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமா?
 • தற்போதுள்ள சட்டத்தின் கீழ் எந்த ரீஃபண்ட் தொகையும் ரொக்கமாகத் தரப்பட மாட்டாது – சிஜிஎஸ்டி சட்டம் பிரிவு 142(8)(b)
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் சப்ளை செய்யப்பட்டால் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டியிருக்குமா?
 • தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் சப்ளை செய்யப்பட்டால் எந்த ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டியதில்லை – பிரிவு 142(1).
ஜிஎஸ்டியில் எந்தவொரு பொருட்கள் சேவைகள் சப்ளை செய்யப்பட்டாலும், தற்போதுள்ள சட்டத்தின் கீழ் அதற்கான கான்ட்ராக்ட் பதிவு செய்யப்பட்டிருந்தால், எந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும்?
 • அந்த சப்ளைகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட வேண்டியிருக்கும் ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 142(10)
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட கணக்குத் தாக்கல் பரிசீலனையில் ஏதேனும் ரீஃபண்ட் செய்யப்பட வேண்டியதாக இருந்தால் அது ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் எப்படி கையாளப்படும்?
 • தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட கணக்குத் தாக்கல் பரிசீலனையின் விளைவாக ஏதேனும் ரீஃபண்ட் செய்யப்பட வேண்டியிருந்தால் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குப் பின்னர் ரொக்கமாக தற்போதுள்ள சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்பவே ரிஃபண்ட் செய்யப்பட்டுவிடும் – பிரிவு 142(9)
மேல்முறையீடு அல்லது மறுபரிசீலனை அசெஸிக்கு சாதகமாக மாறினால், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ரீஃபண்ட் செய்யப்படுமா? ஒருவேளை முடிவு அசெஸிக்கு எதிராக மாறினால் என்ன ஆகும்?
 • தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு ஏற்பவே ரீஃபண்ட் முறைகள் செயல்படுத்தப்படும். தற்போதுள்ள சட்டத்தின் கீழ் ஏதேனும் மீட்கவேண்டிய தொகை மீட்கப்படாமல் இருந்தால் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் நிலுவை வரியாக மீட்கப்படும் – பிரிவுகள் 142(6) & 142(7)
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள VAT வரியின் மீதான CENVAT ITC போன்றவற்றைப் பெறுவதற்கான கோரிக்கை அல்லது பரிசீலனையின் விதி என்ன? அது வெளியீட்டு வரியுடன் தொடர்புடையதாக இருந்தால்?
 • CENVAT / ITC அல்லது நிர்ணயிக்கப்பட்டநாட்களுக்கு முன் அல்லது பின் செயல்படுத்தப்பட்ட எந்தவொரு வெளியீட்டு வரி ஆகியவற்றின் மீதான அனைத்து கோரிக்கைகள், மறுபரிசீலனைகள், ஆய்வுகள் அல்லது குறிப்புகள் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். மற்றும் திருப்பி வழங்கப்பட வேண்டிய CENVAT /ITC அல்லது வெளியீட்டு வரி தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தால் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் வழங்கப்படும். அதேபோல் ஏதேனும் தொகை திருப்பி எடுக்கப்பட வேண்டியிருந்தால் அவை ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் நிலுவை வரிகளாக எடுத்துக்கொள்ளப்படும் . பிரிவு 142(6/1427).
தற்போது சட்டத்தில் நிலுவையில் உள்ள திருப்பி வழங்கப்பட வேண்டிய வரிவட்டி போன்றவற்றின் விதி என்ன?

நிலுவையில் உள்ள திருப்பி வழங்கப்பட வேண்டிய வரிவட்டி போன்றவை தற்போதுள்ள சட்டம் பிரிவு 1423)இன் படி வழங்கப்படும்.

விலைகளை மறுபரிசீலனை செய்வதற்கு டெபிட்கிரெடிட் விவரக் குறிப்புகளை வழங்குவதற்கான கால வரம்பு என்ன?

வரி செலுத்த வேண்டிய நபர் டெபிட்கிரெடிட் விவரக் குறிப்புகள் அல்லது சப்ளிமெண்டரி இன்வாய்ஸ் விலை மறுபரிசீலனைக்கு 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விலைகள் கீழ்நோக்கி மறுபரிசீலனை செய்யப்பட்டால், வரி செலுத்துபவர் அவருடைய வரியைக் குறைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார் அதுவும் பொருளைப் பெற்றவர் இன்வாய்ஸ் அல்லது கிரெடிட் குறிப்புகளில் இன்புட் டேக்ஸ் கிரெடிட் குறைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரிக் குறைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் பிரிவு 142(2).

பிரிவு 141இல் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு மாத நீட்டிப்பு என்பது தானாகவே செயல்படுத்தப்படுமா?

இல்லை, தானாகச் செயல்படுத்தப்பட மாட்டாது. ஏற்றுக்கொள்ளத் தக்க காரணங்களைத் தெரிவித்த பின்னரே ஆணையரால் அது நீட்டிக்கப்படும்.

உற்பத்தி செயல்பாட்டின் கீழ் வராத, சோதனை செயல்பாடுகள் அல்லது வேறு செயல்பாடுகளுக்காக வேறு நிறுவனத்தைச் சார்ந்த வேலையாளுக்கு அனுப்பப்பட்ட உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்குத் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் எப்போது ஜிஎஸ்டி வரியானது செலுத்த வேண்டி வரும்?
 • நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சோதனைக்காகவோ அல்லது வேறு செயல்பாடுகளுக்காகவோ பிற நிறுவன வேலையாளுக்கு அனுப்பப்பட்டிருந்தால் தற்போதுள்ள சட்டத்தின் கீழ், அந்தப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்) திருப்பி வழங்கப்படாவிட்டால் ஜிஎஸ்டி வரியை அந்த வேலையாள் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் உற்பத்தியாளர் அனுபவித்து அந்த இன்புட் டேக்ஸ் கிரெடிட்டும், அந்தப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் திருப்பி வழங்கப்படாத பட்சத்தில் அவரிடமிருந்து திருப்பி வாங்கப்படும் . பிரிவு 141(3)
தொழிற்சாலையிலிருந்து அனுப்பப்பட்ட முழுமையடைந்த பொருட்கள் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நாளில் அல்லது அதற்குப் பின் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டால் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்குமா?

தொழிற்சாலையிலிருந்து முழுமையடைந்த பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன் பிற நிறுவனங்களுக்கு அல்லது சோதனைக்காக அனுப்பப்பட்டு சோதனை செயல்பாடுகள் முடிந்து மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்) திருப்பி வழங்கப்பட்டால் ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 141(3)இன் கீழ் எந்த வரியும் இல்லை.

உற்பத்தியாளர் சோதனைக்காக அனுப்பப்பட்ட முழுமையடைந்த பொருட்களை வரி செலுத்துபவர் வேறு யாருக்கேனும் தர முடியுமா?
 • ஆம், உற்பத்தியாளர் சோதனைக்காக அனுப்பிய முழுமையடைந்த பொருட்களை, ஆறு மாதங்களுக்குள் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்) இந்தியாவில் வரி செலுத்தப் பதிவுசெய்த வேறு நிறுவனங்களுக்குத் தரலாம் அல்லது வரி செலுத்த வேண்டிய அவசியமற்ற ஏற்றுமதி மூலம் அனுப்பிக்கொள்ளலாம். -141(3)
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் விற்பனை ஆன பொருட்கள் திரும்புதல் என்பது ஒட்டுமொத்த வருவாயிலிருந்து, ஆறு மாதங்களுக்குள் கழித்துக் கொள்ளக் கூடியதா? உதாரணமாக பொருளை வாங்கும் ஒரு நபர் ஜி.எஸ்.டி. ஆளுமையில் இருக்கும்போது பொருளைத் திருப்புகிறார். இது குறிப்பிட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாக நடக்கிறது. இது ஜி.எஸ்.டி - யின் கீழ் வரிவிதிப்பிற்கு உரியதா?
 • அமலில் இருக்கும் ஒரு சட்டத்தின்படி வாங்கியது எந்தப் பொருளாக இருந்தாலும் அதற்கு வரியும் (இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, CST) ஏற்கெனவே ஒப்ப்புக் கொண்ட நாளுக்கு ஆறு மாதங்களுக்குள் செலுத்தியாகி விட்டது. வாங்கியவர் அந்த சரக்கினை ஏற்கெனவே ஒப்புக் கொண்ட நாளுக்குப் பின்னர் திருப்பி அனுப்பி விடுகிறார். அவ்வாறு அனுப்பப்பட்ட சரக்கை வழங்கல் என்றுதான் ஜி.எஸ்.டி கூறுகிறது. அதற்கான வரி செலுத்தப் படவேண்டும். இதற்க்கான இரண்டு நிபந்தனைகள்

1) அந்தச் சரக்குகள் ஜி.எஸ்.டி. சட்டப்படி வரி விதிப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

2) பொருளை வாங்கியவர் ஜி.எஸ்.டி வரியின் கீழ்பதிவு செய்திருக்க வேண்டும். அதே சமயம் பொருளை விற்றவர், ஒரு வேளை வாங்கியவர் தற்போதைய சட்டப்படி பதிவு செய்திராவிட்டால், அத்தகைய வரியை ( CST) உரிமை பெற்றிருக்கிறார். இது தவிர, அந்தச் சரக்குகள் ஆறு மாதங்களுக்குள் (அல்லது நீட்ட்டிக்கப்பட்ட கால வரையாக, அதிக பட்சம் மேலும் இரண்டு மாதங்கள்) திரும்ப அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த சரக்குகள் அடையாளம் காணும் வகையில் இருக்க வேண்டும். சட்டப் பிரிவு 140 (1)

ஒரு உற்பத்தியாளர் அல்லது பணித் தொழிலாளி ஆகியோர் பாதி முடிக்கப்பட்ட பொருட்களை, முழுவதுமாக முடித்துக் குறிப்பட்ட தினத்திற்குப் பிறகு அனுப்புகிறார்கள். தற்போதைய சட்டத்தின்படி இவர்கள் வரி செலுத்தக் கடமைப்பட்டவர்களா?
 • இல்லை. பின் வரும் தழ்நிலைகளில் உற்பத்தியாளரோ, பணித் தொழிலாளரோ எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை

1) உள்ளிடுகள் அல்லது பாதி முடிக்கப் பட்ட பொருட்கள், இப்போதிருக்கும் சட்டங்களில் உள்ள ஷரத்துக்களின்படி குறிப்பிட்ட நாளுக்கு முன்பு அனுப்பி வைக்கப்படும் நிலை

2) பணித் தொழிலாளி, அவற்றை ஆறு மாதங்களுக்குள்ளாக, (அல்லது அதற்கு மேல் நீட்டிக்கப்பட்ட காலகட்டத்திற்குள்) குறிப்பிட்ட நாளில் திருப்பி அனுப்பிவிடுகிறார்.

3) உற்பத்தியாளர் மற்றும் தொழிலாளி ஆகியோர் பணித் தொழிலாளியிடம் இருந்த கையிருப்புச் சரக்கைப் பற்றி குறிப்பிட்ட நாளில் அதற்கான படிவத்தின் வாயிலாக அறிவித்து விடுகிறார்கள்.

 • இது தொடர்பான சட்டப் பிரிவுகள் – 141(1), 141(2) & 1414)அதே சமயத்தில், அந்த பொருட்கள் ஆறு மாதங்களுக்குள் (அல்லது நீட்டிக்கப்பட்ட அதிகபட்ச 85T6)loté0T, மேலும் இரண்டு மாதங்களுக்குள்) திரும்ப அனுப்பப்படாவிட்டால், பயன்படுத்திய வரிக்கடன் மீட்டெடுக்கப்படும்.
குறிப்பிட்ட தினத்தில், VAT வரி செலுத்தப்பட்ட இன்புட்களை ஸ்டாக்குகளாகக் கொண்டிருக்கும் சேவை வழங்குநருக்கு ITC அனுமதிக்கப்படுமா?
 • ஆம். சட்டப் பிரிவின்படி அவரது இத்தகைய ஸ்டாக்குகளுக்கு இன்புட் வரிக் கடன் பெற உரிமை உண்டு.
பதிவு செய்த வரி செலுத்த வேண்டிய ஒரு நபர் இப்போது இருக்கும் சுங்கத் தீர்வை சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கும், அதே சமயம், ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்பற்கான இரண்டு உதாரணங்களைத் தருக?
 • ஒரு உற்பத்தியாளரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ. 60 லட்சம். அவர் தற்போதைய சட்டத்தின்படி, ss – ந் விலக்குப் பெறவராகிறார். ஆனால் ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி பிரிவு (22) ன்படி அவரது ஆண்டின் மொத்த வருமானம் சட்ட வரம்பான ரூ. 20 லட்சத்திற்கு மேல் இருக்கிறது.
 • ஒரு வணிகருக்கு ஆண்டின் மொத்த வருவாய் VATன் வரம்பைவிடக் குறைவுதான். ஆனால் அவர் கணிணி மூலமாக விற்பனை செய்யும் வணிகர் மூலமாக தனது பொருளை விற்பதால், அவர் GSTயின் கீழ் பதிவு செய்யப் பட வேண்டியவராகிறார். இது போன்ற நபர்களுக்கு, சட்டப் பிரிவு 24இன்படி இச்சலுகைகள் கிடையாது.
பதிவு செய்யப்பட்ட ஒரு நபர், தற்போதைய சட்டத்தின் படிதவறாக கடனைப் பெற்றுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இதைத் திரும்ப வதலிப்பது, ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி நடக்குமா? அல்லது தற்போதைய சட்டத்தின்படி நடக்குமா?
 • ITC தவறாக அனுபவித்ததை மீட்பது தற்போதைய சட்டப்படி முடியாது என்றால், அந்தத் தொகை நிலுவைத் தொகையாக, GST சட்டத்தின்படி வசூலிக்கப்படும்.
இப்போது இருக்கும் சட்டத்தின்படி, (சுங்கத் தீர்வை) VAT கடன் என்பது x&y எனபவற்றிற்கு முதலீட்டு சரக்குகள் என்பதாகக் கிடைக்காது. ஆனால் அவை GSTயில் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படியானால், பதிவு செய்த வரிசெலுத்துபவர் என்றிருப்பதால் இந்தக் கடனைப் பெற முடியுமா?
 • அது போன்ற பொருட்கள் ITC யில் இப்போதய சட்டத்தின்படி அனுமதிக்கப் பட்டிருந்தால், அதனுடன் கூடவே ஜி.எஸ்.டி. யிலும் அனுமதிக்கத் தக்கது என்றிருந்தால் அவருக்கு அந்தக் கடனைப் பெற உரிமை உண்டு. ஒருவேளை, இது போன்ற கடனை தற்போதைய சட்டங்களின்படி பெற முடியாது என்றால் அவர் ஜி.எஸ்.டி.யில் பெற முடியாது. எஸ்.ஜி.எஸ்.டி.யின் சட்டப் பிரிவு 140(2).
பதிவு செய்த ஒரு நபர் மூலதன பொருட்களை இப்போதிருக்கும் சுங்க வரிச் சட்டத்தின்படி ஜூன் காலாண்டுக் கால கட்டத்தில் 2017 - 2018 வாங்குகிறார். அதற்கான விற்பனை விலைச் சீட்டு பெறப்பட்டது ஜின் 30 ஆம் தேதிதான் என்றாலும் முதலீட்டு சரக்கு பெறப்பட்ட்டது, 5 ஜீலை, 2017 (அதாவது GST-யின் சட்ட ஆளுமையில்). இந்த நபருக்கு GST ஆளுமையில் CANVATஇன் முழுக் கடன் பெற முடியுமா?

ஆம் முடியும். அவருக்கு 2017 – 2018 காலகட்டத்தில் கடன் பெறத் தகுதி உண்டு. அதே சமயம், போன்ற கடன் CANVAT கடனாகப் பெறலாம் என்பது இப்போது இருக்கும் சட்ட்டத்தில் இருந்தால். மேலும், சி.ஜி.எஸ்.டி. சட்டத்தில் சி.ஜி.எஸ்.டி – பிரிவு 140 (2)இன்படி கடனாக அளிக்கப்படலாம் என்றும் இருக்க வேண்டும்.

வேலைப் பணி தொடர்பான சட்டப் பிரிவுகளை முதலாமவர் பின்பற்ற வேண்டியது கட்டாயமான ஒன்றா?
 • இல்லை. சிறப்பான செய்முறையைப் பின்பற்றாமல் GST தொகையைச் செலுத்தியப் பின் இன்புட்கேபிடல் சரக்குகளை பணி அளிப்பவர் அனுப்பலாம். அச்சமயத்தில் வேலைப் பணியாளர் இன்புட் வரிக்கடனை எடுத்து ப்ராசஸ் செய்யப்பட்ட சரக்குகளை (வேலைப் பணி முடிந்தவுடன்) GST செலுத்தப்பட்ட பின்னர் சப்ளை செய்வார்.
இடைவழிச் சரக்குகளும் வேலைப் பணிக்கு அனுப்பப்படுமா?
 • ஆம். வேலைப் பணியில் இன்புட் என்றால் வேறு நிகழ்முறையைச் சார்ந்த இடைவழிச் சரக்குகள் அல்லது இன்புட்களில் பணி அளிப்பவர் (அ) வேலைப் பணியாளர் செய்யும் செய்முறை ஆகியவை அடங்கும்.
கருவி/பொருட்கள் உள்ளிட்ட சில கேபிடல் சரக்குகளை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் பயன்படுத்த முடியாது; பொதுவாக அவற்றை ஸ்கிராப்பாக விற்கப்படுகின்றன. வேலைப் பணி சட்டங்களில் இதுபோன்ற சரக்குகளை எப்படிக் கையாளுகின்றனர்?

கேபிடல் சரக்குகளை மூன்றாண்டுகளுக்குள் திருப்பிக் கொண்டு வரும் சட்ட நிபந்தனை மோல்டுகள், சாயங்கள், கருவிகள்பொருட்கள் அல்லது சிறு கருவிகளுக்குப் பொருந்தாது.

வேலைப் பணியாளருக்கு அனுப்பப்படும் இன்புட்கேபிடல் சரக்கை ITC ஆக எடுக்கத் தேவைப்படும் சட்டப் பிரிவுகள் யாவை?
 • இன்புட்கேபிடல் சரக்கைத்தான் தொழில் புரியுமிடத்தில் பெற்று பின் அதைத் திருப்பி அனுப்பினாலும் அவை முதலில் தனது இடத்திற்கு வராமல் வேலைப்பணியாளரின் இடத்துக்கே நேரடியாக அனுப்பப்பட்டாலும், வேலைப்பணியாளருக்கு அனுப்பப்படும் இன்புட்கேபிடல் சரக்கின் மீதான வரியைக் கடனாகப் பெற பணி அளிப்பவருக்கு உரிமை உண்டு.
 • ஆயினும் வேலைப் பணியைச் செய்து முடித்தவுடன் அவை அனுப்பப்பட்ட 1.3 ஆண்டுகளுக்குள் இன்புட்கேபிடல் சரக்குகள் மீண்டும் திரும்பப் பெற்றாக வேண்டும் அல்லது வேலைப் பணியாளரின் இடத்திலிருந்து சப்ளை செய்யப்பட்டாக வேண்டும்.
வேலைப் பணியாளரின் இடத்திலிருந்து நேரடியாக சப்ளை செய்யப்படும் பணி அளிப்பவரின் சரக்குகள் வேலைப் பணியாளரின் நிகர லாபக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

மாட்டாது; அவை பணி அளிப்பவரின் நிகர லாபக் கணக்கில்தான் வரும். ஆயினும், வேலையைச் செய்து முடிக்க வேலைப் பணியாளர் பயன்படுத்தும் சரக்குகள் / சேவைகளின் மதிப்பு வேலைப் பணியாளர் சப்ளை செய்யும் சேவைகளின் மதிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.

வரி செலுத்துபவரிடமிருந்து ஒரு வேலைப் பணியாளருக்கு அனுப்பப்படும் சரக்கு சப்ளையாகவும், GST வரிக்குட்பட்டதாகவும் ஆகுமா? ஆம் என்றால் ஏன் அப்படி ஆகிறது?
 • சப்ளை என்பது விற்பனை, இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து சப்ளை வடிவங்களையும் உள்ளடக்கியதால் இது சப்ளையாகக் கருதப்படும்.
 • ஆயினும் நிபந்தனைகளுடன் கூடிய தகவல் தெரிவிக்கப்பட்ட்ட பதிவு செய்த வரி செலுத்தும் நபர் (பணி அளிப்பவர்) எவ்வளவு இன்புட்கள் மற்றும் / அல்லது கேபிடல் சரக்குகளையும் வரியின்றி வேலைப் பணிக்காக வேலைப்பணியாளருக்கு அனுப்பலாம்; அங்கிருந்து அது பிற வேலைப்பணியாளர்களுக்குச் செல்லலாம்;
 • வரி செலுத்துபவர் அந்த இன்புட்களையும் கேபிடல் சரக்குகளையும் வேலைப் பணியாளர் தொழில் புரியும் இடத்திலிருந்து வேலை முடிந்த பின்னரோ அல்லது அவை அனுப்பப்பட்ட 1 வருடம் 3 வருடங்களுக்குள் இந்தியாவுக்குள் என்றால் வரி செலுத்தியோ அல்லது ஏற்றுமதிச் சரக்கு என்றால் வரி செலுத்தாமலோ அதைத் திரும்ப எடுத்துக் கொண்டு வரலாம்.
பணி எடுத்து செய்பவர் (Job Worker) வர்த்தகம் செய்யும் இடத்திலிருந்து சரக்குகளை வழங்குவதற்கான அனுமதி உண்டா?

அனுமதி உண்டு.ஆனால் பணி எடுத்து செய்பவர் பதிவு செய்த இடத்திலிருந்து மட்டும் (அ) தனது கூடுதல் வர்த்தகம் செய்யும் இடம் என்று தன்னுடைய பிரதான வர்த்தகம் செய்யும் இடத்தை அறிவிக்காத வரை.

நாம் தங்கத்தை மூலப்பொருளாக ஒப்பந்த தொழிலாளிகளுக்கு வழங்கி அதை நிறைவு செய்ய பட்ட பொருட்களாக(Finished Goods) பெறுவது வழக்கம்.இதில் GSTஐ எப்படி கடைபிடிக்க வேண்டும்?
 • பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளியென்றால், ஒப்பந்த கூலி மீது GST 5% வரி விதிக்கப்படும்.
 • பதிவு செய்யப்படாத ஒப்பந்த தொழிலாளியென்றால் தங்க வியாபாரி RCM முறையில் வரி செலுத்தவேண்டும்.இந்த இரண்டு சம்பங்களிலும் வியாபாரி ITC எடுத்து கொள்ளலாம்
குறைகள் மெனுவின் கீழ் detention report என்றால் என்ன?

ஒரு வரி செலுத்துபவர் (அ) இடமாற்றியுடைய பொருட்களோ (அ) வாகனமோ 30 நிமிடத்திற்கும் மேலாக வரி அதிகாரிகளால் நிறுத்திவைக்கப்பட்டால் இடமாற்றி E -Way bill portal ல் detention report பதிவு செய்யவேண்டும்.

துணை பயனர்கள் ஏன் வேண்டும்?
 • ஒரு வரி செலுத்துபவர் எந்நேரமும் தானே EWB ஐ இயக்கவோ (அ) தயாரிக்க இயலாது, அதனால் முக்கிய பயனர் துணை பயனரை உருவாக்கலாம். அந்த துணை பயனர் EWB ஐ இயக்க, தயாரிக்க (ம) நிராகரிக்க முடியும்.
ஒரே E -Way bill ற்கு எவ்வாறு பல வழிகளில் போக்குவரத்து, அதாவது, சாலை, ரயில், கப்பல், காற்று ஆகியவற்றை நுழைப்பது?
 • ஒரு E -Way bill ஐ பல போக்குவரத்து முறைகளில் எடுத்துச் செல்லலாம். போக்குவரத்து முறைகளின் படி ‘Update Vehicle Number’ மூலம் E -Way bill ஐ மேம்படுத்தலாம்.
இடமாற்றி (Transporter) e-Way bill ல் Part B ஐ எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?
 • E -Way bill செல்லுபடியாகும் வரை அவர் விருப்பம் போல Part B ஐ பல முறை மாற்றம் செய்துகொள்ளலாம்.
சரக்குகளை எடை போடுவதற்காக எடைமானிக்கு எடுத்து செல்லும் பொழுது e-Way bill அவசியமா?

இல்லை, சரக்குகளை 20 கி மீ வரை மாநிலத்திற்குள் எடை போடுவதற்காக எடைமானிக்கு எடுத்து செல்லும்பொழுது delivery challan இருக்கும் பட்சத்தில் e-Way bill அவசியமில்லை.

வாகன எண்ணை ஒருங்கிணைக்கப்பட்ட E- way bill ல் மாற்றப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
 • ‘ஒருங்கிணைந்த EWB’ மெனுவில் ‘regenerate CEWB’ என்ற விருப்பத்தை கொண்டு தனிப்பட்ட EWB ஐ மாற்றாமல் CEWB லில்லேயே மாற்றம் செய்து கொள்ளலாம். இது புதிய வாகனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். பழைய CEWB பயன்பாட்டிற்கு செல்லுபடியாகாது.
ஒருங்கிணைந்த E- way bill செல்லுபடியாகும் காலம் என்ன?
 • ஒருங்கிணைந்த EWB ஒரு பயணம் தாள் போன்றது மற்றும் வாகனங்களைப் பொறுத்தவரை பல்வேறு வகையான சரக்குகள் கொண்ட EWB களின் விவரங்களைக் கொண்டிருக்கும் ,எனவே, ஒருங்கிணைந்த EWB க்கு தனியாக செல்லுபடியாகும் காலம் இல்லை. இருப்பினும், ஒருங்கிணைந்த EWB இல் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்ட சரக்குகளின் EWB காலத்திற்கேற்ப அவை இலக்கை அடைய வேண்டும்.
ஒருங்கிணைந்த E- way bill ஐ யார் உருவாக்கலாம்?

இடமாற்றி ஒரு வாகனத்தில் பல சரக்குகளை எடுத்து செல்வதற்காக ஒரு ஒருங்கிணைந்த E- way bill ஐ உருவாக்குவார்.

யார் E- way bill ஐ நிராகரிக்க முடியும், ஏன்?
 • இடமாற்றி E- way bill ஐ உருவாக்கும் பொழுது அதில் ஒருவருடைய GSTIN குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நபர் தன்னுடைய E- way bill portal மூலம் அறிந்து கொண்டு சரக்குகளை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க முடியும். E- way bill உருவாக்கி 72 மணி நேரம் (அ) விநியோகத்தின் நேரம் ஆகியவற்றில் எது முன்னதாக உள்ளதோ அதற்குள் ஏற்றுக்கொள்ளப்படாமலோ (அ) நிராகரிக்கப்படாமலோ இருந்தால், அவர் அந்த விவரங்களை ஏற்றுக் கொண்டார் என்று கருதப்படும்.
பயணத்தின்போதோ (அ) இடமாற்றியின் கிடங்கில் வைக்கப்படும்போதோ E- way bill ரத்தாகிவிட்டால் செல்லுபடியாகக்கூடிய E- way bill அவசியமா?
 • E- way bill என்பது ஒரு விற்பனையாளரின் இடத்திலிருந்து பெறுநர் இடத்திற்கு எடுத்துச்செல்வதற்கு தேவையான ஆவணம் ஆகும். எனவே எடுத்துச்செல்லும் பொருட்கள் ( இடமாற்றியின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தாலும் அந்த கிடங்கு பெருநரின் city/town க்குள் விநியோகிப்பதற்கு முன் இருந்தாலும்) எப்பொழுதும் செல்லக்கூடிய E- way bill இணைக்கப்பட வேண்டும்.
E- way bill நீக்கம் (அ) ரத்து செய்ய முடியுமா?
 • ஒரு முறை உருவாக்கப்பட்ட E- way bill உருவாக்குனரால் நீக்கமுடியும் E- way bill ல் வழங்கப்பட்ட விவரங்களின்படி சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாமலோ (அ) சரக்குகள் ஏற்றப்படாமலோ இருந்தால் E- way bill உருவாகி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யமுடியும்.
E way bill portal -லில் உங்கள் கணக்கு freeze ஆகிவிட்டால் எவ்வாறு சரி செய்வது?
 • E way bill portal-லில் உங்கள் கணக்கு freeze ஆகியிருந்தால், அதற்கு உங்கள் GSTN ஐ ரத்தாகி இருக்கலாம் (அ) GSTN (de-activated) முடக்க பட்டுயிருக்கலாம். நீங்கள் உடனே GST Common Portal (www.gst.gov.in) சென்று அதில் ‘Search Taxpayer’ மூலம் status ஐ தெரிந்து கொள்ளலாம்.உங்களால் GST portal க்குள் செல்ல முடிந்து e way bill portal க்குள் செல்ல முடியவில்லை என்றால் தயவுசெய்து https://selfservice.gstsystem.in/.இல் உங்கள் குறைகளை தெரிவிக்கவும்.
டிரான்ஸ்போர்களர்கள் எதற்காக e - way bill system ம் கீழ் பதிவு செய்ய வேண்டும்?
 • சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத சில டிரான்ஸ்போர்களர்கள் இருக்கலாம், ஆனால் அத்தகைய போக்குவரத்துவாசிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான பொருட்களின் இயக்கத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் 15 இலக்க Unique Transporter Id பெறுவதற்கு e – way bill system ல் பதிவு செய்ய வேண்டும்.
E-Way Portal ல் விலாசம் (ம) தொலைபேசி எண்ணை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?
 • சமீபத்தில் GST பொது வலைதளத்தில் உங்கள் வியாபார பதிவு விவரங்களை நீங்கள் புதுப்பித்துயிருக்கலாம். உங்களுடைய விவரங்களை மாற்ற E-Way Portal ல் உள்ள “Update on Common Portal ” பொத்தானை தேர்வு செய்தால் சமீபத்திய தகவல்கள் அனைத்தும் வந்து சேரும் .இந்த நடவடிக்கைக்கு பிறகும் தவறான தகவல் காண்பித்தால் GST Portal க்குள் சென்று திருத்தம் (Amendment) செய்ய வேண்டும்.
பல்க் தயாரிப்பு (Bulk Genration) என்றால் என்ன? எந்தெந்த சூழல்களில் E Way பில் மொத்தமாக தயாரிக்கும் (Bulk Genration) வசதியை பயன்படுத்த வேண்டும்?
 • ஒரே சமயத்தில் பல விலைபட்டியல்களைப் பதிவேற்றி பல e way பில்களை தயாரிக்கலாம். பின்வரும் சூழல்களில் மொத்தமாக தயாரிக்கும் (Bulk Genration) வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்:

 

1.E-Way பில் தயாரிக்க

2.Part B மேம்படுத்தல்(update)

3.தொகுக்கப்பட்ட E-Way bill தயாரிக்க (CEWB)

இதைப் பற்றி மேலும் அறிய பயனர் கையேடு பார்க்கவும்.

இந்த வசதி மூலம் பயன்பாட்டாளர் பல நன்மைகளைப் பெறலாம்.

E Way பில்லில் குறிப்பிட வேண்டிய சரக்குகளின் மதிப்பு எவ்வளவு?
 • வரி விலைபட்டியலில்(அ ) டெலிவரி செல்லான் (அ) பில் ஆப் சப்ளையில் (Bill of Supply) குறிப்பிட்ட மதிப்புடன் GST வரியை சேர்த்து காட்ட வேண்டும்.
E-Way பில் தயாரிப்பதற்குத் தற்காலிக வாகன எண் பயன்படுத்தலாமா?
 • ஆம், e way bill தயாரிப்பதற்கு தற்காலிக வாகன எண் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சரக்குகளை CSD யில் இருந்து Unit Run Canteenக்கு எடுத்துச் செல்லும்போது E Way பில் தயாரிக்க வேண்டுமா?
 • தேவையில்லை. இந்த வழங்கல் (Supply) ஆனது வரி விலக்கு அளிக்கப்பட்ட வழங்கல் ஆகும். ஏனவே, இது E-Way பில் தயாரிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொது போக்குவரத்துகளில் எடுத்து செல்லும் சரக்குகளுக்கு எவ்வாறு e-way bill தயாரிக்கவேண்டும்?

சரக்கு வழிவகை ஏற்படுத்தும் நபர் e way bill தயாரிக்க வேண்டும். சரிபார்ப்பு (verification) போது அவர் அதிகாரியிடம் e way bill எண்ணை கூற வேண்டும்.

ஒரு விலைப்பட்டியலின் பொருட்கள் பல வாகனங்களில் சென்றால், அதற்கான e way bill ஐ எப்படி தயாரிக்க வேண்டும்?
 • சரக்குகளை SKD / CKD முறையில் பரிமாற்றப்படும்போது,டெலிவரி செல்லான்கள்(Delivery Challans) பொறுத்து ஒவ்வாரு வாகனத்திற்கும் தனித்தனி e way bill தயாரிக்கவேண்டும்.CGST Rule 55 இதனைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
E -way பில் செல்லுபடியாகும் கால அவகாசத்தை எவ்வாறு நீட்டிப்பது?
 • E Way பில்லின் கால அவகாசத்தை நீடித்துக்கொள்ள வழிகள் உண்டு. இந்த வழிகள் e-way பில் காலாவதியாவதற்கு முன்புள்ள 8 மணி நேரத்திலோ (அ) பின்புள்ள 8 மணி நேரத்திலோ தான் பயன்படுத்தலாம். இதில், போக்குவரத்து உரிமையாளர் (Transporter) நீட்டிப்புக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். பயணிக்க வேண்டிய மீதமுள்ள தூரத்தை அடிப்படையாக கொண்டு காலம் நீட்டிக்கப்படும்.
பல விலைப்பட்டியல்கள் ஒரே சரக்கு அனுப்புநர் பெறுநர் சார்ந்தவை என்றால் எவ்வாறு E-way bill உருவாக்க வேண்டும்?

பல விலைப்பட்டியல்கள் ஒரே சரக்கு அனுப்புநர் பெறுநர் சார்ந்தவை என்றாலும் ஒரு விலைபட்டியலுக்கு ஒரு E-way பில் தான் உருவாக்க வேண்டும்.பின்பு,அனைத்து e-way பில்லையும் ஒன்று சேர்த்து ஒரே தொகுக்கப்பட்ட e-way பில்லாக(Consolidated EWB) உருவாக்கி அதையே வாகன ஓட்டி எடுத்துச்செல்லலாம்.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி(அ) இறக்குமதி செய்யும்போது சரக்குப் போக்குவரத்து தூர அளவை எவ்வாறு கணக்கிடுவது?
 • ஏற்றுமதி பொறுத்தவரை, சரக்குப் போக்குவரத்து தூர அளவு என்பது கன்சைனர் இடத்திலிருந்து சரக்குகளை customs clearance க்கு பிறகு நாட்டிலிருந்து வெளியேற்ற படும் இடம் வரை. அதேபோல இறக்குமதிக்கு  நாட்டிற்குள் நுழையும் இடத்திலிருந்து சரக்குகளை customs clearance க்கு பிறகு சேரவேண்டிய இலக்கு வரையாகும்.
வரி செலுத்துவோர் தானாகவே சரக்குகளை எடுத்துச் செல்லும் போது (Transport).அவர் எப்படி Part A ஐ நிரப்ப வேண்டும்?

E-way bill போர்டலின் எதிர்பார்ப்பானது பயனீட்டாளர் Transporter ID (அ) வாகன எண்ணங்கள் குறிப்பிட வேண்டும்.அதனால், சப்ளையர் GSTN ஐ Transporter ID இல் கொடுத்து Part A சீட்டைத் தயார்செய்யலாம்.இது போர்டல் அமைப்புக்கு வரிசெலுத்துபவரே வாகன ஓட்டி என்று குறிப்பிடுகிறது.பின்னர் போக்குவரத்து விவரங்கள் கிடைத்தப்பின் Part-B நிரப்பிக் கொள்ளலாம்.

E Way Bill உடன் வாகன ஓட்டி(Transporter) எடுத்த செல்ல வேண்டிய ஆவணங்கள் யாவை?
 • E Way Bill உடன் வாகன ஓட்டி பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்:

1.வரி விலைப்பட்டியல்(Tax Invoice)

2.வழங்கல் மசோதா  (Bill of Supply)

3.டெலிவரி செல்லான் (Delivery Challan)

E Way Bill செல்லுபடியாகும் காலம் எவ்வளவு ?
 • E Way பில்லின் செல்லுபடியாகும் காலம் பொருட்களை கொண்டு செல்லும் தூரத்தைப் பொறுத்தவை.ஒரு வேளைப் பொருட்களை வழக்கமான வாகனம் (அ) போக்குவரத்து முறைகள் பயன்படுத்தினால், ஒவ்வொரு 100 கி.மீ.(அ) அதன் இயக்கத்தின் ஒரு பகுதிக்கு,ஒரு நாள் செல்லுபடியாகும். ஒரு வேலைப் பொருட்களைப் பரிமாண சரக்கு வாகனங்களில் எடுத்துச் சென்றால் ஒவ்வொரு 20கி.மீ.(அ) அதன் இயக்கத்தின் ஒரு பகுதிக்கு,ஒரு நாள் செல்லுபடியாகும். மற்றும் செல்லுபடியாகும் கடைசி நாளின் நள்ளிரவில் காலாவதியாகும்.
E Way Bill ஆனது அனைத்து போக்குவரத்துச் சரக்குகளுக்கும் எழுப்ப வேண்டுமா ?
 • E-Way Bill ஆனது அனைத்து போக்குவரத்துச் சரக்குகளுக்கும் அவசியம்.ஆனால், வரி விலக்கு அளிக்கப்பட்ட சரக்குகளுக்கு E way Bill தேவையில்லை.மேலும், கைவினைப் பொருட்கள் (ம) Job Worker-க்கு அனுப்பும் பொருட்களுக்கு குறிப்பிட்ட சூழ்நிலையில் சரக்கு மதிப்பு ரூ.50,000க்கு கீழ் இருந்தாலும் E Way Bill அவசியம்.மேலும், விவரங்களுக்கு E Way Rules ஐ பார்க்கவும்.
E-Way பில்லில் தவறான தகவல்களை கொடுத்திருந்தால் அதை எவ்வாறு சரி செய்வது?

E-Way பில்லில் தவறான தகவல்களை கொடுத்திருந்தால் அந்த e way bill ஐ ரத்து செய்யது விட்டுப் புதிதாக e way bill எழுப்ப வேண்டும்.அதே E-Way பில்லில் திருத்தமோ அல்லது மாற்றமோ செய்யமுடியாது.

தற்காலிகமாக வரிக்கு உட்பட்ட நபராக பதிவு செய்யப்படும் போது முன்கூட்டியே வரி செலுத்தப்பட வேண்டிய தொகை, கணக்கிடப்படும் மொத்த வரியில் ITC ஐ குறைத்து 100% மும் செலுத்தவேண்டுமா?

ஆமாம்.தற்காலிகமாக வரிக்கு உட்பட்ட நபராக பதிவு செய்யப்படும் போது முன்கூட்டியே வரி செலுத்தப்பட வேண்டிய தொகை, கணக்கிடப்படும் மொத்த வரியில் ITC ஐ குறைத்து 100% மும் செலுத்த வேண்டும்.

இந்தியாவிலிருக்கும் ஒரு நபரின் நிறுவனம் அதனுடைய வெளிநாடு நிறுவனத்துக்கு வழங்கும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுமா?
 • இல்லை. விநியோகத்தின்  இடம் பிரிவு 13 IGST சட்டம்,2017 ன் கீழ் வெளிநாட்டில் இருக்குமெனில் அந்த  சேவைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது (Notification No. 15/2018-Integrated Tax (Rate) dated 26th July, 2018).
சேவை ஏற்றுமதி என்றால் என்ன? எந்தெந்த ஏற்றுமதிகள் சேவை ஏற்றுமதியாக கருதப்படும்?
 • ஒரு ஏற்றுமதியை சேவை ஏற்றுமதியாக கருதப்பட வேண்டும் ஏன்றால் பிரிவு 2(6) ன் IGST சட்டம்,2017 ஐ நிறைவு செய்யவேண்டும்.பிரிவு 2(6) ல் குறிப்பிட்ட காரணிகள்:
 • சேவை வழங்கும் விநியோகஸ்தரின் இடம் இந்தியாவில் அமைந்தீருக்க வேண்டும்.சேவை பெருநரின் இடம் வெளிநாட்டில் இருத்தல்.சேவை விநியோகிக்கும் இடம் வெளிநாட்டில் அமைத்தல்.விநியோகத்திற்கான மறுபயன் வெளிநாட்டு நாணயத்தில் பெறுதல்.சேவை வழங்குபவர் மற்றும் சேவையை பெறுபவர், பிரிவு 8 இல் விளக்கம் 1 இன் படி,வெறுமனே  தனிவேறுநபராக(i.e.,தொடர்புடைய நபர்) இருக்க கூடாது.
தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்ய தகுதியற்றவர்கள் யார்?
 • பெரியளவில், பதிவு செய்திருக்கின்ற நபர்களில் ஐந்து வகையானவர்கள், தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்ய தகுதியற்றவர்கள். அவர்கள் :-

அ) உணவக சேவைக்கான வழங்குபவர் தவிர மற்ற சேவைகள் வழங்குபவர்.

ஆ) CGST / SGST / UTGST சட்டங்களுக்கு கீழ் வரி செலுத்தாத சரக்கு வழங்குபவர்;

இ) மாநிலங்களுக்கிடையில் சரக்கு வழங்குபவர்;

ஈ) ஒரு மின்னணு வர்த்தக இயக்குபவர் மூலம் சரக்குகளை வழங்கும் நபர்

உ) அறிவிக்கப்பட்ட சில பொருட்களின் உற்பத்தியாளர்.

சரக்கு மற்றும் சேவைகள் அல்லது இரண்டிற்கும் மீது வசூலிக்கப்பட்ட வரி மொத்தத்திற்கும் முற்றிலும் அனுமதிக்கப்பட்ட விலக்களித்த பின் ஒரு நபர் வரி செலுத்த வேண்டுமா?

வரி செலுத்த வேண்டாம். விலக்களிக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டிற்கும் அதிக திறன்பட்ட விகிதத்தின் வரி வசூலிக்கக்கூடாது.

தொகுப்பு வரித் திட்டத்திற்கு தகுதியை தீர்மானிப்பதற்கு ஒட்டுமொத்த விற்றுமுதலை கணக்கிடுவது எப்படி?
 • ஒட்டுமொத்த விற்றுமுதலை கணக்கிடும் முறையை பிரிவு 2(6)ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரே  நிரந்தர கணக்கு எண்ணுடைய (PAN) நபரின் வெளியே வழங்கியவற்றின் மதிப்புதான் (வரி விதிக்கப்பட வேண்டிய வழங்கல் + விலக்களிக்கப்பட்ட வழங்கல் + ஏற்றுமதி + மாநிலங்களுக்கிடையிலான வழங்கல்) ஒட்டுமொத்த விற்றுமுதல் என்பதன் பொருளாகும். மத்திய வரி (CGST), மாநில வரி (SGST) யூனியன் பிரதேச வரி (UTGST), ஒருங்கிணைந்த வரி (IGST) மற்றும் இழப்பீடு மேல்வரி இவற்றில் எதிலிருந்தும் வரி விதிக்கப்படாதவை. மேலும், உள்ளீட்டு வழங்கலின் மதிப்பு மீது நேர்மாறான வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துப்பட வேண்டியவற்றை ஒட்டுமொத்த விற்றுமுதல் கணக்கீடின் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை
வழங்குபவர் அல்லது பெறுபவர் இவர்களைத் தவிர வேறு யாராவது GSTன் கீழ் வரி செலுத்தபடவேண்டுமா?
 • ஆமாம். மத்திய மாநில அரசாங்கங்கள் குறிப்பிட்ட வகையான சில சேவைகளுக்கு வரி விதித்துள்ளது. அது மின்னணு வர்த்தகம் இயக்குபவர் சேவைகளாகும். சேவைகளை அதன் வழியாக வழங்கப்பட்டிருந்தால், அனைத்து சட்ட விதிமுறைகளும் இந்த மின்னணு வர்த்தகம் இயக்குபவர் சேவைகளுக்கு பொருந்தும். அம்மாதிரி சேவைகளை வழங்கிய நபர் வரி செலுத்த கடமைப்பட்டவர் ஆவார்.
பலமுறை பதிவு செய்த ஒரு வரி செலுத்தும் நபர், ஒரு சில பதிவுகளுக்கு மட்டும் தொகுப்பு வரி திட்டத்தை தெரிவு செய்ய தகுதி உள்ளதா?
 • பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் ஒரே நிரந்தர கணக்கு எண்ணின் (PAN) மூலம் தான் தொகுப்பு வரித் திட்டத்தை தெரிவு செய்ய முடியும். ஒரு பதிவு செய்த நபர் சாதாரண திட்டத்தை தெரிவு செய்துவிட்டார் எனில், மற்றவர்கள் தொகுப்பு வரி திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
GST விதித்த வரிக்கு விலக்கு அளிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்குள் GST சட்டம் வழங்கியுள்ளதா?
 • ஆமாம் வழங்கியுள்ளது. மக்கள் நலனுக்காக, சரக்கு மற்றும் சேவைகள் அல்லது இரண்டிற்கும் GST வரி விதிப்பிலிருந்து முற்றிலுமாகவோ அல்லது நிபந்தனை அடிப்படையிலோ விலக்களிக்க முடியும். இதற்கு GST கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, மத்திய மாநில அரசுகள், மொத்தமாகவோ அல்லது பகுதியையோ விலக்கு அளிக்கலாம். ஒரு விதிவிலக்கான தன்மையில் சூழ்நிலையின் ஏற்ப ஒரு சிறப்பு ஆணை பிறப்பித்து, எந்த சரக்குகளுக்கும் அல்லது சேவைகளுக்கும் அல்லது இரண்டிற்கும் வரி விலக்கு அளிக்க அரசாங்கத்தால் முடியும். SGST சட்டம் மற்றும் UTGST சட்டபபடி, CGSTன் கீழ் அனுமதிக்கப்பட்ட எந்த விலக்கும் சட்டப்படி கூறப்பட்டதாகும்.
செக்யூரிட்டிஸ் க்கு GST வரி விதிக்கப்படுமா?

செக்யூரிட்டிஸ் சரக்கு (ம) சேவை வரையறைக்குள் சேர்க்கப்படவில்லை. எனவே செக்யூரிட்டிஸ் க்கு  GST வரி விதிக்கப்படாது.

ஒரு உற்பத்தியாளர் வணிகர்-ஏற்றுமதியாளர் மூலம் ஏற்றுமதி செய்தால் உற்பத்தியாளர் (ம) வணிகர்-ஏற்றுமதியாளர் எந்த வரி தலையில் வரி செலுத்த வேண்டும் (CGST & SGST/ IGST)?
 • IGST சட்டத்தின் பிரிவு 2 (5), 2017 கீழ் உற்பத்தியாளர் CGST (ம) SGST செலுத்த வேண்டும். வணிகர்-ஏற்றுமதியாளர் ஒன்று LUT பயன்படுத்தலாம் (அ) IGST செலுத்தவேண்டும்
ஒரு உற்பத்தியாளர் வணிகர்-ஏற்றுமதியாளர் மூலம் ஏற்றுமதி செய்தால் உற்பத்தியாளர் (ம) வணிகர்-ஏற்றுமதியாளர் எந்த வரி தலையில் வரி செலுத்த வேண்டும் (CGST & SGST/ IGST)?
 • IGST சட்டத்தின் பிரிவு 2 (5), 2017 கீழ் உற்பத்தியாளர் CGST (ம) SGST செலுத்த வேண்டும். வணிகர்-ஏற்றுமதியாளர் ஒன்று LUT பயன்படுத்தலாம் (அ) IGST செலுத்தவேண்டும்.
GST யின் கீழ் தொகுப்பு வழங்கள் மற்றும் கூட்டு வழங்களுக்கான நடவடிக்கைகள் என்ன?
 • தொகுப்பு வழங்களில் முதல் வழங்கப்பட்ட வழங்களுக்கே வரி விதிக்கப்படும். கூட்டு வழங்களில் குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவைகளின் வழங்களாக கருதி அதிகபட்ச வரி விகிதம் விதிக்கப்படும்.
புகையிலை (ம) புகையிலைப் பொருள்களின் மீதான GST ன் நிலைப்பாடு என்ன?
 • புகையிலை (ம) புகையிலைப் பொருள் GST க்கு உட்படுத்தப்பட்டது. கூடுதலாக இந்த பொருள்களின் மீது மத்திய சுங்கவரியை கூடுதலாக விதிக்க மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
GST சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படாத பொருள்கள் யாவை?
 • கச்சா பெட்ரோல், மோட்டார் எரிபொருள் அதி வேக டீசல் இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகிய ஐந்து பெட்ரோலிய பொருள்களை GSTக்கு வெளியில் தற்காலிகமாக வைத்துள்ளது.
 • எந்த தேதியில் இருந்து GST க்குள் சேர்க்க வேண்டும் என்பதை GST கவுன்சில் முடிவு செய்யும்.
 • மேலும் GSTயிலிருந்து மின்சாரம் (ம)மனிதன் உட்கொள்ளும் மது வெளியேறிவிட்டது.
GST ன் கீழ் ஏற்றுமதிகள் எவ்வாறு வாி விதிக்கப்படுகிறது?
 • அனைத்து விதமான ஏற்றுமதிகளும் இன்டெர் ஸ்டேட் சப்ளையாக தான் கருதப்படும்.ஏற்றுமதி மூலம் செய்யப்படும் சரக்கு (ம) சேவைகள் 0% விகிதத்தில் கணக்கிடப்படும்.
 • ஏற்றுமதி செய்பவர்களுக்கு LUT இருந்தால் வரி செலுத்த தேவையில்லை இல்லையெனில் அவர்கள் பணம் மூலமாகவோ (அ) ITC credit மூலம் வரி செலுத்த வேண்டும்.
 • பிறகு செலுத்திய வரியை திரும்ப (Refund) பெற்று கொள்ளலாம்.
GST ன் கீழ் இறக்குமதிகள் எவ்வாறு வாி விதிக்கப்படுகிறது?
 • அனைத்து விதமான இறக்குமதிகளும் இன்டெர் ஸ்டேட் சப்ளையாக தான் கருதப்படும்.
 • சுங்கவரியுடன் சேர்த்த விநியோகத்தின் மதிப்பில் IGST கணக்கிடப்படும்.
 • பிறகு மொத்த ITC யும் credit எடுத்து கொள்ளலாம்.
விநியோகஸ்தர் “தூய முகவர்களாக”(Pure Agent) செலவழித்த மதிப்பை விநியோகத்தின் மதிப்பில் சேர்த்து GST வசூலிக்க வேண்டுமா?

இல்லை. விநியோகஸ்தர் தூய முகவர்களாக செலவழித்த மதிப்பை பெருநரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.ஆனால், அதை GST கணக்கிடும் மதிப்பில்(Value of Supply) சேர்க்கக்கூடாது.

சேவை விநியோகிப்பவரின் இடம் எது?
 • சேவை விநியோகிப்பவரின் இடம் பிரிவு 2(15)ன் கீழ் விளக்கப்பட்டுள்ளது. அதனின் சாராம்சம்  இங்கு விளக்கப்பட்டுள்ளன:
 • பதிவு செய்யப்பட்ட இடத்தில் இருந்து விநியோகம் செய்யதால் அந்த இடமே விநியோகிப்பவரின் இடம் ஆகும்.

நிலையுறுதி நிறுவனத்தில் இருந்து விநியோகம் செய்யதால் அந்த இடமே விநியோகிப்பவரின் இடம் ஆகும்.

 • ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து விநியோகம் செய்யப்பட்டால் மிக நேரடியாக தொடர்புடைய நிறுவனமே விநியோகிப்பவரின் இடமாகும்.
 • மேற்கண்டவைகளில் பூர்த்தி ஆகாத விநியோகத்திற்கு விநியோகிப்பவரின் வழக்கமான இடமே விநியோகிப்பவரின் இடமாகும்.
பிரிவு 15(2) ல் குறிப்பிடப்பட்டுள்ள, பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுவதற்கான வரையறைகள் என்னென்ன?
 • பிரிவு 15(2) ல் குறிப்பிடப்பட்டுள்ள, பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுவதற்கான வரையறைகள்:

அ) பொருளை வாங்குபவரிடம் சப்ளையர் வாங்கும், எஸ்ஜிஎஸ்டி / சிஜிஎஸ்டி சட்டம் மற்றும் GST (மாநிலங்களின் வருவாய் இழப்புக்கான ஈட்டுத்தொகை) சட்டம் அல்லாத பிற சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் எந்தவொரு வரி, கலால் வரி, செஸ், மற்றும் கட்டணங்கள்.ஆ) குறிப்பிட்ட பொருளின் சப்ளைக்கு, சப்ளையர் தர வேண்டிய எந்த ஒரு தொகையும் இதில் அடங்கும். ஆனால் இவை பொருளை வாங்கியவரிடம் தான் பெறப்படும்

இ) தற்செயல் செலவுகள், அதாவது பொருளை வாங்குபவரிடம் சப்ளையர், பொருட்கள் அல்லது சேவையை வழங்கும்போதோ அல்லது வழங்குவதற்கு முன்னரோ பெரும் கமிஷன் மற்றும் பேக்கிங் செலவு போன்ற எந்தவொரு தொகையும்.

ஈ) எந்த ஒரு சப்ளைக்கும் தாமதப்படுத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் வட்டி அல்லது தாமத கட்டணம் அல்லது அபராதம் ஆகியவை.

உ) மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் மானியங்கள் தவிர்த்து, நேரடியாக விலையுடன் தொடர்புடைய பிற மானியங்கள்.

எப்போதெல்லாம் மதிப்பிடுதல் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன?

(i) முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பணத்தின் வரையறைகளில் இல்லாமல் இருந்தால்,

(ii) பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் தலையீடு இருந்தால் அல்லது குறிப்பிட்ட வகை சப்ளையரின் சப்ளையாக இருந்தால்; மற்றும்

(iii) நிர்ணயிக்கப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு நம்பகமானதாக இல்லாமல் இருந்தால் மதிப்பிடுதல் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சப்ளைக்குப் பிறக்கான கழிவுகள் அல்லது ஊக்கச் சலுகைகள் பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கப்படுமா?

ஆம். ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் சப்ளைக்குப் பிறக்கான கழிவுகள் சப்ளையின்போதோ அல்லது சப்ளைக்கு முன்போ அறியப்பட்டு அந்தக் கழிவுகள் சம்பந்தப்பட்ட இன்வாய்ஸில் சேர்க்கப்படும். பொருளைப் பெறுபவர் அந்தக் கழிவுகளுக்கான வரியைச் செலுத்தினால் இந்த கழிவுகள்GST சட்டம் பிரிவு 15ன் கீழ் விலக்கு -அளிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பிரிவு 15-ன் துணைப் பிரிவு (1)இன் கீழ் நிர்ணயிக்கப்படும் பரிவர்த்தனை மதிப்பு ஏற்றுக்கொள்ளத் தக்கதா?
 • ஆம், ஆனால் பிரிவு 152இல் உள்ள வரையறைகளைச் சரிபார்த்த பின்பே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், வழங்குபவர் மற்றும் பெறுபவர் இருவரும் பரிவர்த்தனை மதிப்பில் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களுடைய தலையீடு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில் அந்தப் பரிவர்த்தனை மதிப்பும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே.
கான்ட்ராக்ட் விலை சப்ளை செய்யப்படும் பொருளுக்கான மதிப்பைத் தீர்மானிப்பதற்கு போதுமானதாக இருக்கிறதா?
 • கான்ட்ராக்ட் விலையானது மிகக் குறிப்பாக “பரிவர்த்தனை மதிப்பு’’ என்றே குறிப்பிடப்படுகிறது. மேலும் வரியைக் கணக்கிடுவதற்கு இதுவே அடிப்படையாகவும் உள்ளது. ஆனாலும், பொருளின் விலையானது, பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களின் தலையீடுகளால் அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் விலையில்லாத சப்ளை நடக்கும்போது தாக்கத்துக்குட்பட்டால் அதற்கான மதிப்பானது GST மதிப்பிடுதல் விதிகளின்படி நிர்ணயிக்கப்படும்.
GST வரி விதிப்பு முறையில் வரி விதிக்கப்படும் பொருளின் மதிப்பு என்னவாக இருக்கும்?
 • வழக்கமாக, வரி விதிக்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு அதாவது அந்தப் பொருளுக்கான விலை, பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுடைய தொடர்பில்லாமல், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அதன் விலை மட்டுமே அதன் மதிப்பு ஆகும். CGST / SGST சட்டத்தின் பிரிவு 15 பரிவர்த்தனை மதிப்புகளின் வரையறைக்குள் வரும் விஷயங்களையும், விதிவிலக்குகளையும் பற்றி மேலும் விரிவாகச் சொல்கிறது. உதாரணத்துக்கு, பரிவர்த்தனை மதிப்பு வரையறைக்குள் திருப்பி அளிக்கப்படும் கணக்குகள், பொருட்கள் சப்ளை செய்யப்படும்போது அல்லது அதற்கு முன்பு சில நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படும் கழிவுகள் ஆகியவை சேர்க்கப்பட மாட்டாது.
ஒரு அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் அத்தியாவசியமான பொருட்களுக்கு வரி விதிக்கப்படுமா?
 • பரிமாற்றங்கள் வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் இருந்தால், வழங்கப்பட்ட பொருட்களுக்கு GSTயின் கீழ் வரி விதிக்கபடும். வியாபாரத்தை பெருக்கும் நோக்கம் இல்லை என்றால் GSTயின் கீழ் வரி விதிக்கப்பட மாட்டாது.
GST கீழ் மருந்துகளின் பரிவர்த்தனைதயின் மதிப்பு அதிகபட்ச சில்லறை விலையா (MRP) அல்லது பரிமாற்ற விலையா ?
 • மருந்துகள் பற்றிய மதிப்பீடு GST இன் கீழ் பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் இருக்கும்
 • ITC சங்கிலியை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் விநியோகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் கொள்முதல் மட்டத்தில் வழங்கப்பட்ட GST நடுநிலையாக்கப்படும்.
உரிமம் பெற்ற டூரிஸ்ட் வழிகாட்டி(Tourist guide) பதிவு செய்யப்பட்ட அலுவலகம் ஒரு மாநிலத்தில் இருக்கும். ஆனால், அவர் பல மாநிலங்களுக்குச் சேவை வழங்குவார். எனவே, GST இவரின் நிலை என்ன?
 • சுற்றுலா வழிகாட்டி இருத்தல் அனைத்து மாநிலங்களிலும் தேவைப்படம் என்றால் அவர் அனைத்து இடங்களிலும் பதிவுச் செய்யவேண்டும்.
பொதுவாக,சேவை வழங்குநர் அரசாங்க சார்ந்த வேலைகளுக்கு விலைப்பட்டியல் தயாரிக்கமாட்டார்.இதில் காலத்திற்கான நேரத்தை (Time of Supply ) எவ்வாறு கணக்கிடுவது?

சேவை வழங்குநர் பிரிவு 13 CGST சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் விலைபட்டியலை தயாரித்து சேவைப் பெறுநருக்கு வழங்கவேண்டும் (அ) எதிர்மறை வரியில் (RCM ) சேவைப் பெறுநர் விலைபட்டியலை தயாரித்து வழங்கவேண்டும்.

குர்கான் (Gurgaon) பகுதியில் வசிக்கும் ஒரு நபர், ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பையிலிருந்து டெல்லிக்குச் செல்கிறார். அவருக்கான பயணக் காப்பீடு மும்பையில் செய்துகொள்கிறார் இதில் வழங்கல் இடம் எதுவாக இருக்கும்?
 • பொருள் சேவை வழங்குபவரின் சேவைப் பதிவு ஆவணங்களில், அதைப் பெற்றவரது விலாசம்தான் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பதால், அதுதான் வழங்கல் இடமாகக் கருதப்படும் [IGST சட்டப் பிரிவின் 12(13)]
ஒருவர் மும்பையிலிருந்த குல்லு-மனாலிக்குச் செல்கிறார். அங்கிருக்கும் ICICI வங்கியின் சேவைகள் சிலவற்றைப் பெறுகிறார். வழங்கல் இடம் என்னவாக இருக்கும்?

அந்த நபர் பெறும் சேவை, அவரது வங்கிக் கணக்குத் தொடர்பானது இல்லையென்றால், வழங்குபவரின் இடம். அதே சமயம் அந்த நபர் பெறம் சேவை, அவரது வங்கிக் கணக்குகடன் சம்பந்தப்பட்டு இருந்தால், சேவை வழங்கும் இடம் மும்பையாகக் கருதப்படும். ஏனென்றால் வழங்குபவரின் ஆவணப் பதிவுகளில் அந்த சேவையைப் பெற்றவரது விலாசம்தான் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

கோவாவில் இருக்கும் ஒருவர், டில்லியில் இருக்கும் ஒரு பங்குத்தரகரின் மூலம் மும்பையில் இருக்கும் NSE-யின் பங்குகளை வாங்குகிறார். வழங்கல் இடம் என்னவாக இருக்கும்?

இந்த சேவைகளை வழங்கும் நபர்கள்நிறுவனங்களின் கட்டணச் சீட்டுகளில், வழங்கல் இடம், அதைப் பெறுபவரின் விலாசமாகத்தான் இருக்கும் என்பதால் அதுதான் வழங்கல் இடம். ஆகவே கோவாதான் வழங்கல் இடமாக இருக்கும்.

செல்பேசி இணைப்புகளுக்கான வழங்கல் இடம் என்னவாக இருக்க முடியும்? பொருள் வழங்குபவரின் இடமாக இது இருக்க முடியுமா?
 • உள்நாட்டு வழங்கல்களைப் பொறுத்தவரை, பொருள் வழங்குபவரின் இடமாக இருக்க முடியாது.ஏனென்றால் செல்பேசி நிறுவனங்கள் பல மாநிலங்களில், இந்த சேவைகளை வழங்கிவருகிறது. இதில் பல சேவைகள், மாநிலங்களுக்கிடையில் இருக்கிறது. பொருள் வழங்குபவர்களின் இடம்தான், வழங்கல் இடம் என்று எடுத்துக்கொண்டால் நுகர்வுக் கேட்பாடு வலுவிழந்து விடம். ஏனென்றால், எல்லா வருவாயும், பொருள் வழங்குவோர் இருக்கும் சில மாநிலங்களுக்கு மட்டும் சென்றுவிடும்.
 • ஆகவே செல்பேசி இணைப்பு வழங்கல் இடம் என்பது, அந்த இணைப்பு சேவைக்கு முன் கட்டணம் சேவைக்குப் பின் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானமாகும். சேவைக்குப் பின் கட்டணம் (Post paid) இணைப்பாக இருந்தால், அது குறித்த கட்டணச் சீட்டில் இருக்கும விலாசம் எந்தப்பகுதியில் இருக்கிறதோ, அதுதான் சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும். சேவைக்கு முன் கட்டணம் (Pre paid) இணைப்பு என்றால், இந்தக் கட்டணம் எந்த இடத்தில் பெறப்படுகிறதோ, அதுதான் சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும். அதே சமயம், சேவை புதுப்பித்தல் (Recharge) வலைதளம் வழியாக நடந்தால் அதைப் பெறுபவர் இருக்கும் இடம்தான், சேவை வழங்கல் இடமாக இருக்கும். சர்வதேச பொருள் வழங்குவோர். இந்தச் சேவைகளைப் பெறுபவர் இருக்கும் இடங்கள்தாம், சேவை வழங்கும் இடமாகக் கருதப்படும்.
ஒரு நபர் மும்பையிலிருந்து டெல்லி, மறுபடியும் மும்பை என்றவாறு பயணம் செய்தால், எந்த இடம், பிரயாணிக்கான போக்குவரத்துச் சேவை வழங்கலாகக் கருத முடியும்?
 • அந்த நபர் பதிவு செய்திருந்தால், சேவை வழங்கல் இடம் சேவையைப் பெறுபவரது இடம்தான். அவர் பதிவு செய்யாவிட்டால், மேல் நோக்கிச் செல்லும் பயணம் எங்கிருந்து துவங்குகிறதோ அதுதான் சேவை வழங்கல் இடம். உதாரணமாக, மும்பை டெல்லி மார்க்கத்தில் டெல்லிதான் சேவை வழங்கல் இடம்.
 • அதே சமயம் திரும்பி வரும் பயணத்தில் வழங்கு இடம் என்றால் டில்லியாகவே இருக்கும். இதைத் தனிப் பயணமாகவே கருத வேண்டும். (IGST சட்டம், 12(9) பிரிவிற்கான விவரக் குறிப்பு)
பொருள்களைப் போக்குவரத்தின் மூலமாகக் கொண்டு செல்லும் சேவைகள், (இதில் கடிதப் போக்குவரத்து மற்றும் கூரியரும் அடங்கும்) இருந்தால் பொருள் வழங்கல் இடமாக எதைக் கருதுவது?
 • உள்ளுர் வழங்கல் என்ற பட்சத்தில், அதைப் பெறுபவர் பதிவு செய்திருந்தால் அந்த நபரின் இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப்படும். அவர் பதிவு செய்யாமலிருந்தால், பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, எங்கே கொடுக்கப்படுகிறதோ அல்லது சேகரிக்கப்படுகிறதோ அந்த இடம்தான் பொருள் வழங்கல் இடமாகக் கருதப்படும். (IGST சட்டம் 12 பிரிவு)
 • சர்வதேச வழங்கல்கள். போக்குவரத்து சேவை வழங்கல் இடங்கள் கொரியர் சேவைகளைத் தவிர மற்றவை, அந்த பொருள் போய்ச் சேரும் இடமாக இருக்கும். கூரியரைப் பொறுத்தமட்டில், சேவைகள் வழங்கும் இடம் என்றால் பொருட்கள், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் இடம்தான் பொருள் வழங்கல் இடம். அதே சமயம், இப்படிக் கொடுக்கும்போது, அது சேர வேண்டிய இடம், சிறு அளவில் இந்தியாவில் இருந்தாலும் வழங்கல் இந்தியாவில் நடந்ததாகக் கருதப்படும். (IGST சட்டப் பிரிவு 13(3) 13(6) மற்றும் 13(9) ஆகியன.
IPL கிரிக்கெட் போட்டிகளைப் போல ஒரு நிகழ்ச்சி பல மாநிலங்களில் நடத்தப்படும்போது, சேவைகள் வழங்கும் இடமாக எது கருதப்படும்?
 • எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அந்த சேவையைப் பெறுபவர் பதிவு செய்தவராக இருந்தால் இவ்வகையான சேவைகளை அளிக்கும் நபர் எங்கிருக்கிறாரோ, அவர் இருக்கும் இடம்தான் சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும்
 • அதே சமயம், சேவையைப் பெறுபவர் பதிவுசெய்திராவிட்டால், அந்த நிகழ்வு நடக்கும் இடம்தாம், சேவை வழங்கல் இடமாகக் கருதப்படும். இந்த நிகழ்வு பல மாநிலங்களில் நடைபெறுவதால், அது நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் சேவையின் அளவிற்கு ஏற்றபடி, மதிப்பிடப்படும். இது பற்றிய விரிவான விளக்கம் IGST சட்டம் 12(7) குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக அசையாச் சொத்துள்ள இடம்தான் பொருள் வழங்கு இடமாகக் கருதப்படும். உதாரணமாக டில்லியிலிருந்த மும்பை வரை நெடுஞ்சாலை போடப்படுகிறது. வழியில் பல மாநிலங்களைக் கடக்கிறது. இப்படி இருக்கும்போது, பொருள் வழங்கல் இடம் எது?

அசையாச் சொத்து ஒரு மாநிலத்திற்கும் கூடுதலாகப் பரவியிருக்கும் பட்சத்தில், சேவை வழங்கல் என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்ற பணி, அதற்கான ஒப்பந்தம், ஆகியனவற்றை வைத்து அந்தந்த மாநிலத்தில் அளிக்கப்பட்ட சேவை என்று தனித்தனியாகக் கருதப்பட்டு பொருள் வழங்கல் இடம் எது என்று தீர்மானிக்கப்படும். அது போல, ஒப்பந்தம் இல்லாதிருந்தால் IGST உள்ளூர் வழங்கல்கள் சட்டப் பிரிவு 12(3) – ன்படி தீர்மானம் செய்யப்படும்.

பதிவு செய்யப்படாதவர்களுக்குப் பொருள் வழங்கலின்போது என்ன விதமாக அனுமானம் இருக்கும்?
 • பதிவு செய்யப்படாதவர்களுக்குப் பொருள் பெறப்பட்ட இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப்படும்.ஆனால் பல சமயங்களில் பொருளைப் பெறும் நபரின் விலாசம் இல்லையென்றால், பொருளை வழங்கியவரின் / சேவைகள் அளித்தவரின் இடம்தான், பொருள் வழங்கு இடத்திற்கு பதிலியாகக் கருதப்படும்.
வழங்கப்படும் பொருட்கள், பயணத்தில் இருக்கும் வாகனங்களில், கப்பலாக, விமானமாக ரயிலாக அல்லது மோட்டார் வாகனமாக இருந்தால் பொருள் வழங்கப்பட்ட இடம் எது?
 • இப்படிப்பட்ட சூழலில், எந்த இடத்தில் பொருட்கள்/சரக்குகள் பெறப்பட்டதோ, அந்த இடம்தான் பொருட்கள் வழங்கப்பட்ட இடம்(IGST சட்டத்தின் 10வது பிரிவு) அதே சமயத்தில், சேவைகளைப் பொறுத்தமட்டில், பயணிக்கும் வாகனத்தின் ஆரம்பப் பகுதிதான் (இடம்) பொருள் வழங்கப்பட்ட இடம் என்று கருதப்படும் (IGST சட்டத்தின் 12 மற்றம் 13 பிரிவுகள்)
பொருட்களை வழங்குபவர், மூன்றாவது நபரின் வழிகாட்டலின்படி, குறிப்பிட்ட நபருக்குக் கொண்டு சேர்க்கிறார் என்ற நிலையில், பொருள் வழங்கல் இடம் எது?
 • இந்த தழலில், மூன்றாவது நபர்தான் பொருட்களைப் பெற்றதாகவும், பொருட்கள் வழங்கப்பட்ட இடம்தான், அவரது தொழில் நடக்கும் இடமாகவும் கருதப்படும்.
B2B (பதிவு செய்த நபர்களுக்கு பொருள் வழங்கல்) மற்றும் B2C (பதிவு செய்யாத நபர்களுக்க பொருள் வழங்கல்) ஆகியவற்றிற்கு பொருள் வழங்கும் இடம் குறித்துத் தனித்தனியான விதிமுறைகள் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?
 • B2B வணிகப் பரிவர்த்தனைபோது, அதைப் பெறுபவர், அதற்கான வரியை கடனாகப் பெறுவதால், அது போன்ற வணிக பரிமாற்றங்கள் இயல்பாகக் கடந்துபோகும். B2B வழங்கல்களில் வசூலிக்கப்படும் CGST உண்மையில், அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பை உருவாக்குகிறது. இது பொருள்களைப் பெறுபவர்களுக்கு சொத்துபோல. ஏனெனில் பொருளை / சேவையைப் பெறுபவர், எதிர்காலக் கடன்களைப் பெறுவதற்கு உள்ளிட்டுக் கடனைப் பயன்படுத்த முடியும்.
 • ஏனென்றால் B2B பரிமாற்றத்தின்போது, அதைப் பெறுபவரது இடம், எல்லா தழ்நிலைகளையும் கவனித்துக் கொள்ளும். ஏனென்றால் அடுத்து வரும் கடன்களை, பொருட்களைப் பெறுபவர் தனது பொறுப்பில் ஏற்பார். பொதுவாக, இது போல பொருட்களைப் பெறுபவர், அதை மற்றொரு வாடிக்கையாளருக்கு வழங்குவார். ஆகவே வழங்கப்பட்ட பொருள், B2B பரிமாற்றத்திலிருந்து B2C பரிமாற்றமாக மாற்றப்பட்டவுடன்தான், அந்தப் பொருள் பயன்படுத்தப்படும். B2C பரிமாற்றத்தின்போதுதான், பயன்படுத்தப்பட்டு அதற்கான வரிகள் அரசாங்கத்திற்கு வந்து சேரும்.
வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்போ பின்போ சப்ளை நடந்திருந்தால், அந்த சப்ளையின் நேரத்தில் மாற்றம் இருக்குமா?
 • ஆம். அந்தச் சமயங்களில் பிரிவு 14ன் விதிமுறை செயல்படுத்தப்படும்
இன்வாய்ஸ் வழங்குவதற்கும் பொருட்கள் அனுப்பப்படுவதற்கு அல்லது விற்பனைக்கான அனுமதி கிடைப்பதற்குமான கால அளவு என்ன?
 • சப்ளைக்கு அனுப்பப்பட்ட அல்லது விற்பனைக்கான அனுமதி பெற்ற அல்லது திரும்ப எடுத்துக்கொள்ளப்படும் சப்ளையின் போது அல்லது சப்ளைக்கு முன்பு அல்லது அனுமதி செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குள் இருக்கும்.
சேவைகள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டு வரும் பட்சத்தில் இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?
 • சேவைகள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டு வரும் பட்சத்தில்,

(அ) காண்ட்ராக்ட்டில் பணம் பெறுவதற்கான கெடு தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் சேவையைப் பெறுபவர் தர வேண்டிய பணத்தை தரும் தேதிக்கு முன் அல்லது பின் இன்வாய்ஸ் வழங்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் சர்வீஸ் சப்ளை செய்தவர் தனக்கு பணம் வருகிறதோ இல்லையோ இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் இன்வாய்ஸ் வழங்கப்பட வேண்டும்.

(ஆ) காண்ட்ராக்ட்டில் பணம் பெறுவதற்கான கெடு தேதி குறிப்பிடாத பட்சத்தில் ஒவ்வொரு முறை சப்ளை செய்யப்பட்ட சேவைகளுக்கான பணம் பெறப்படுவதற்கு முன் அல்லது பின் வழங்கலாம் ஆனால் இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் வழங்கப்பட வேண்டும்.

(இ) செலுத்தப்பட்ட பணம் நிறைவுபெற்ற சப்ளையோடு தொடர்புடையதாக இருந்தால், அதற்கான இன்வாய்ஸ் சப்ளை நிறைவு பெறுவதற்கு முன் அல்லது பின் வழங்கலாம். ஆனால் இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் இன்வாய்ஸ் வழங்கப்பட வேண்டும்.

பொருட்கள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டுவரும் பட்சத்தில் இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?
 • பொருட்கள் தொடர்ச்சியாக சப்ளை செய்யப்பட்டு வரும் பட்சத்தில், அவற்றுக்கான கணக்கு அறிக்கைகள் அல்லது பெறப்பட வேண்டிய பணம் ஆகியவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருந்தால், அவற்றுக்கான இன்வாய்ஸ் ஒவ்வொரு சப்ளைக்குமான கணக்கு அறிக்கை செயல்படுத்தும்போது அல்லது பணம் பெறப்படும்போது அல்லது அவற்றுக்கு முன்போ வழங்கப்பட வேண்டும்.
சப்ளை செய்யப்படும் சேவைகளுக்கான இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?

CGST/SGST சட்டம் பிரிவு 31ன் படி பதிவு செய்யப்பட்ட வரிச் செலுத்துபவர் சர்விஸ் வழங்குவதற்கு முன் அல்லது பின், ஆனால் இதில் குறிப்பிடப்பட்ட கால அளவுக்குள் இன்வாய்ஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இன்வாய்ஸ் ஆனது சேவைகள் குறித்த விவரங்கள், அவற்றின் மதிப்பு, செலுத்த வேண்டிய வரி மற்றும் குறிப்பிட்ட பிற விவரங்களுடன் வழங்கப்பட வேண்டும்.

சப்ளை செய்யப்படும் பொருட்களுக்கான இன்வாய்ஸ் வழங்குவதற்கான கால அளவு என்ன?
 • CGST/SGST சட்டம் பிரிவு 31ன் படி பதிவு செய்யப்பட்ட வரிச் செலுத்துபவர் பொருட்கள், அளவு, மற்றும் பொருட்களின் மதிப்பு செலுத்த வேண்டிய வரி மற்றும் பிற விவரங்கள் படி பின்வரும் சமயங்களில் இன்வாய்ஸ் வழங்க வேண்டும்:

(அ) பொருட்கள் அனுப்பப்படுவதற்காக எடுக்கப்படும்போது, அதாவது பொருட்கள் சப்ளைக்காக அனுப்பப்படும்போது,

(ஆ) பொருட்கள் டெலிவரி செய்யப்படும் போது அல்லது பிற சமயங்களில் பெறுபவருக்கு பொருட்கள் கிடைக்கும்போது.

வரி விகிதமானது 18 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக 1.6.2017 தேதியிலிருந்து உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு ஜூன் 2017இல் சப்ளை செய்யப்பட்டு இன்வாய்ஸும் வழங்கப்பட்ட பொருட்களுக்கான முழுப் பணமும் முன்பணமாக ஏப்ரல் 2017இலேயே பெறப்பட்டிருந்தால் என்ன வரி விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்?
 • பொருட்களும், இன்வாய்ஸ்ஸும் 1.6.2017 தேதிக்குப் பின்னரே வழங்கப்பட்டிருப்பதால் புதிய வரி விகிதமான 20 சதவீதம்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வரி விகிதமானது 18 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக 1.6.2017 தேதியிலிருந்து உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மாற்றம் நடப்பதற்கு முன் ஏப்ரல் 2017ல் சேவை வழங்கப்பட்டு அதற்கான இன்வாய்ஸும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான பணம் ஜூன் 2017இல் வரிவிகிதத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு பெறப்படுகிறது என்றால் எந்த வரி விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்?

1.6.2017 க்கு முன்பு வழங்கப்பட்ட சேவைகள் என்பதால் பழைய வரி விகிதமான 18 சதவிகிதம் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சப்ளை செய்யப்பட்டிருந்தால், சப்ளை நேரம் என்ன?
 • இது போன்ற சமயங்களில் சப்ளையானது,

(i) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு பின் பணம் பெறப்பட்டு ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டிருந்தால் சப்ளையானது, பணம் பெறப்பட்ட சீட்டில் உள்ள தேதியில் நடக்கும்.

(ii) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு, பணமும் பெறப்பட்டிருந்தால் சப்ளை தேதியானது, பணம் பெறப்பட்ட சீட்டில் உள்ள தேதி அல்லது இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதி இரண்டில் முன்னதாக உள்ள தேதி.

(iii) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பின் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு, ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் பணம் பெறப்பட்டிருந்தால் சப்ளை தேதியானது, இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதி ஆகும்.

வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்போ பின்போ சப்ளை நடந்திருந்தால், அந்த சப்ளையின் நேரம் என்னவாக இருக்கும்?
 • இது போன்ற சமயங்களில் சப்ளையானது,

(1) வரி விகிதங்களில் மாற்ற செய்யப்பட்ட பிறகு சப்ளைக்கான இன்வாய்ஸ் வழங்கப்பட்டு அதற்கான பணமும் பெறப்பட்டிருந்தால், பணம் பெறப்பட்டதற்கான சீட்டின் தேதி அல்லது இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதி இரண்டில் முன்னதாக வரும் தேதி.

(2) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு பணம் பெறப்பட்டிருந்தால் சப்ளையானது, இன்வாய்ஸ் வழங்கப்பட்ட தேதியில் நடக்கும்.

(3) வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் பணம் பெறப்பட்டு ஆனால் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு இன்வாய்ஸ் வழங்கப்பட்டிருந்தால் சப்ளையானது, பணம் பெறப்பட்ட சீட்டில் உள்ள தேதியில் நடக்கும்.

செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப் பெறும் நிகழ்வுகளில் சேவைகளின் சப்ளை நேரம் என்ன?
 • சப்ளை நேரங்கள் பின்வரும் தேதிகளுக்கு முன் இருக்கும்

அ) பணம் செலுத்தப்பட்ட தேதி

ஆ) சப்ளையர் வழங்கிய இன்வாய்ஸ் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்

செலுத்தப்பட்ட்ட வரியைத் திரும்ப பெறும் நிகழ்வுகளில் பொருட்களின் சப்ளை நேரம் என்ன?
 • சப்ளை நேரங்கள் பின்வரும் தேதிகளுக்கு முன் இருக்கும்

அ)  பொருட்களின் சீட்டில் உள்ள தேதி

ஆ)  பணம் செலுத்தப்பட்ட தேதி

இ)  சப்ளையர் வழங்கிய இன்வாய்ஸ் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்

ஒருவேளை, பகுதியளவு முன்பணம் தரப்பட்டிருந்தால் அல்லது பகுதி பணத்துக்கான இன்வாய்ஸ் தரப்பட்டிருந்தால் சப்ளை செய்யப்படும் நேரத்தில் முழுமையாக சப்ளை செய்யப்படுமா?
 • இல்லை. இன்வாய்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது பெறப்பட்ட பகுதியளவு பணத்தின் அளவுக்கு மட்டுமே சப்ளை இருக்கும்.
பணம் செலுத்துதல் சீட்டு தேதி’ என்பது என்ன?
 • பணம் செலுத்தலை சப்ளையரின் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கு முந்தைய தேதி அல்லது பணம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் தேதி ஆகும்.
TCS வரி என்றால் என்ன? வரி வசூலிக்கும் நேரம் ஏது?
 • மின்னணு வர்த்தகர் தான் சப்பளை செய்யும் சரக்கு (ம) சேவைகள் அனைத்திலும் TCS 1% பிடித்து அந்த மாதத்திலேயே வசூலித்த TCS ஐ செலுத்த வேண்டும்.
விளம்பரம் மற்றும் தகவல்தொடர்பு பொருளை(eg:banners / hoardings / posters) distributorக்கு வழங்கினால், அது வழங்கல் (Supply) வரையறைக்குள் வருமா?
 • பொருளை இலவசமாக (Free of Cost) வழங்கினால்,அந்த பொருட்கள் மீது ITC எடுத்திருந்தால் அதை17(5) of CGST சட்டத்தின் கீழ் திருப்பி அளிக்க வேண்டும்.
 • பொருளை பிரதிபலனுக்காக (Consideration) வழங்கினால், அது வழங்கல்(Supply) வரையறைக்குள் வரும்.
ஒரு ஏற்றுமதியாளர் அறிவிப்பு வடிவம் மூலம் வரி செலுத்தாமல் பொருட்களை வாங்க முடியுமா?
 • இல்லை, GST யில் அத்தகைய ஷரத்துகள் ஏதும் இல்லை. ஏற்றுமதியாளர் உள் வினியோகத்திற்கு வரி செலுத்த வேண்டும்  மற்றும் அவர்கள் ITC திரும்ப பெறலாம்.
 • இருப்பினும், ஒரு 0.1% திட்டம் உள்ளது, இதில் ஒரு சப்ளையர் ஒரு ஏற்றுமதியாளருக்கு வழங்கும் சரக்குகளுக்கு  0.1% GST மட்டுமே செலுத்தி ITC ரீபண்ட் வாங்கிக்கொள்ளலாம். ஏற்றுமதியாளர் LUT / Bond வழியை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
SEZ பிரிவுகள் அல்லது மேம்பாட்டாளருக்கு வழங்கப்படும் பொருட்கள் எவ்வாறு கருதப்படும்?
 • SEZ பிரிவுகள் அல்லது மேம்பாட்டாளருக்கு அளிக்கப்படும் பொருள் வழங்கல்கள், ஆகியன முதன்மை (physical) ஏற்றுமதிகளுக்கு இருக்கும்.
 • பூஜ்ய சதவிகித கட்டணங்கள் முறைமையே இதற்கும் பொருந்தும். பொருள் வழங்குபவர் வரிகள் ஏதுமின்றி SEZ க்கு பெறுகிறார். அதன் பிறகு அது போன்ற வழங்கல்களுக்கான உள்ளிட்டு வரியை திரும்பப் பெறலாம். GSTயின் சட்டப் பிரிவு 16இன்படி)
கலவை திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர் பிரிவு 10 ன் கீழ் குறிப்பிட்ட வரம்பை கடந்து ஒரு வழக்கமான வரிக்கு உட்பட்ட நபராக பதிவு செய்யதால். அவர் ITC கடனை பெற முடியுமா? முடியுமென்றால், எந்த நாளிலிருந்து ITC கடனை எடுக்கவேண்டும்?
 • கலவை திட்டத்திலிருந்து சாதாரன வரி திட்டத்திற்கு  இடம்பெயரும் நபர் ITC ஐ பெறமுடியும்.கலவை திட்டத்தில் பதிவு செய்யவதற்கு தகுதியற்றவர்களாக மாறும் நாளின் முந்தைய நாளிலிருந்து ITC ஐ எடுத்துக்கொள்ளலாம்.
ITC-ஐப் பெற ஏதாவது குறிப்பிட்ட கால அளவு இருக்கிறதா?
 • புதிய பதிவைப் பொறுத்தவரை தொகுப்பு வரியிலிருந்து சாதாரண திட்டத்துக்கு மாறினால் – விலக்கு பெற்றதிலிருந்து வரி செலுத்தும் சப்ளைக்கு மாறினால், சம்பந்தப்பட்ட நபர் அந்த சப்ளைக்கான வரி விலைப்பட்டி வெளியான தேதியிலிருந்து ஓராண்டு முடிந்த பின்தான் ITC-ஐப் பெற முடியும்.
பதிவு செய்துள்ள ஒருவரால் சப்ளை செய்யப்படும் சரக்குள் மற்றும்/அல்லது சேவைகள் விலக்குப் பெற்றவையாக இருந்து அவர் தொகுப்புவரித் திட்டத்தை நாடினால் இன்புட் வரிக்கடன் என்ன ஆகும்?
 • பதிவு செய்தவர் தான் விருப்பம் தெரிவிக்கும் நாளுக்கு முந்தைய நாள் தன்னிடமிருக்கும் ஸ்டாக்குகளின் அடைபடையில் (அ) விலக்கு பெறும் நாளுக்கு முந்தைய நாள் அடிப்படையில் இன்புட் வரிக்கடனுக்கு நிகரான தொகையைச் செலுத்த வேண்டும். கேபிடல் சரக்குகளைப் பொறுத்தவரை செலுத்த வேண்டிய தொகை சதவீதப் புள்ளியைக் கழித்துக் கணக்கிடப்படும். கடன் லெட்ஜரின் கணிசமான தொகை மீதமிருந்தால் மின்னணு கடன் லெட்ஜரிலிருந்தும்/கேஷ் லெட்ஜரிலிருந்தும் தொகையைப் பிடித்தம் செய்து கொள்ளலாம். கிரெடிட் லெட்ஜரில் இருக்கும் மீதித்தொகை காலாவதியாகிவிடும்.
வங்கிகளுக்கு ஏதேனும் சிறப்பான பிரிவுகள் இருக்கின்றனவா?

வங்கி அல்லது குறிப்பிட்ட சிறப்பான சேவைகளை சப்ளை செய்யும் வங்கியில்லாத நிதி நிறுவனத்திற்கு விகிதாசார கடன் வசதி அல்லது அதன் தகுதிக்கேற்ற இன்புட் வரிக்கடனில் 50% கிடைக்கும்.

தொகுப்பு வரியல்லாத நிலையில் வரி செலுத்தும் ஒரு நபர் ஆரம்பகால நிலையைத் தாண்டி இயல்பான வரிசெலுத்தும் நபராகிறார். அவருக்கு ITC கிடைக்குமா, அப்படியானால் எந்தத் தேதியிலிருந்து கிடைக்கும்?
 • அவருக்கு ஸ்டாக்கில் இருக்கும் இன்புட்டுகள்/பாதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட இன்புட்டுகள் மற்றும் கேபிடல் சரக்குகளின் அடிப்படையில் (பரிந்துரைக்கப்பட்ட சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்ட) தொகுப்பு வரிக்கு அவர் தகுதி இழக்கும் தேதிக்கு ஒரு நாள் முன்பு வரை ITC வசதி கிடைக்கும். அவருக்குரிய கடன் வசதி விதிமுறைப்படி கணக்கிட்டு முடிவு செய்யப்படும்.
ITCல் புதிதாகப் பதிவு செய்ய ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

பதிவுக்கு விண்ணப்பிக்கும் நபர் ஸ்டாக், இன்புட் வடிவத்தில் பாதி/முழுதும் முடிந்த நிலையில் இருக்கும் ஸ்டாக்குகள் மீது இன்புட் வரிக்கடனைப் பெறலாம்; இவ்விண்ணப்பம் பதிவு கிடைக்கப் பெறும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே தரப்பட வேண்டும். பதிவு பெறும் நபர் அந்தக் குறிப்பிட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை பதிவுக்கு விண்ணப்பித்திருந்தால், ஸ்டாக்இன்புட் முடிந்த/முடியாத நிலையில் இருக்கும் சரக்குகளின் வடிவில் வைத்திருக்கும் இன்புட் வரிக்கடனைப் பதிவு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே பெற்றுக் கொள்ளலாம்.

ITC-ஐப் பெற்றுக் கொள்ள இருக்கும் கால அளவு என்ன; அதற்கான காரணங்கள் யாவை?
 • சரக்குகள்/சேவைகளை சப்ளை செய்ததற்கான விலைப்பட்டி (அ) கடன் குறிப்பிற்கெதிராக பிரிவு 39-ன் கீழ் அதற்கான தேதி முடிந்த பின் ரிடர்னை நிதியாண்டு முடிந்த பின் வரும் செப்டம்பரில் சமர்ப்பித்தாலும் (கடன் குறிப்புடன் தொடர்புடைய விலைப்பட்டி இருந்தாலும்) பதிவு செய்த நபரால் TC-ஐப் பெறமுடியாது; எனவே, அடுத்த நிதியாண்டின் அக்டோபர் 20 அல்லது வருடாந்திர ரிடர்னை சமர்ப்பிக்கும் தேதி (இரண்டில் எது முன் வருகிறதோ) ITC-ஐப் பெற இறுதிநாள் ஆகும். இக்கட்டுப்பாட்டுக்குப் பின்னணியில் இருக்கும் கட்டுப்பாடு என்னவென்றால் சமர்ப்பிக்கப்பட்ட ரிடர்னை அடுத்த நிதியாண்டு செப்டம்பருக்குப் பின் மாற்ற முடியாது. வருடாந்தர ரிடர்னை செப்டம்பருக்கு முன் சமர்ப்பித்திருந்தால், அவ்வாறு சமர்ப்பித்த பின் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.
வரி செலுத்தும் நபரைத் தவிர வேறொருவருக்கு சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டால் ITC யாருக்குக் கிடைக்கும்?
 • வரி செலுத்தும் நபர் கேட்டுக் கொண்டதன் பேரில் வேறொருவருக்கு சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டாலும் பதிவு செய்துள்ள நபர் பெற்றதாகவே பொருள் கொள்ளப்படும். எனவே, யாருடைய கோரிக்கையின் பேரில் 3-வது பார்ட்டிக்கு சரக்கு டெலிவரி செய்யப்பட்டதோ அவருக்கே ITC கிடைக்கும்.
விலைப்பட்டி வெளியிடப்பட்ட 180 நாட்களுக்குள் மீதத்தை வரியுடன் அவர் செலுத்தாமல் ITC-ஐ பெற்றுக்கொண்டால் என்ன நிகழும்?
 • ITC தொகை அந்நபரின் அவுட்புட் வரி மீதத்துடன் சேர்க்கப்பட்டு விடும். அத்துடன் வட்டியையும் அவர் செலுத்தியாக வேண்டும். ஆயினும், மீதத்தை வரியுடன் செலுத்திய பின் அவர் ITC-ஐப் பெற்றுக் கொள்ளலாம்.
இன்புட் வரிக்கடனை சப்ளைக்கான வரியை சப்ளையருக்குச் செலுத்தாமல் யாராலாவது பெற முடியுமா?
 • ஆம், அவர் ITC-ஐப் பெறலாம்; ஆனால் விலைப்பட்டி வெளியிடப்பட்ட 180 நாட்களுக்குள் மீதத்தை வரியுடன் அவர் செலுத்தியாக வேண்டும். தலைகீழ் கட்டண அடிப்படையில் வரி செலுத்தப்படும்போது இந்நிபந்தனை பொருந்தாது.
ITC பெறுவதற்குத் தேவையான நிபந்தனைகள் என்னென்ன?
 • ITC பெறுவதற்குப் பதிவுபெற்ற வரி செலுத்தும் நபர் பின்வரும் நான்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்: (அ) வரி விலைப்பட்டி

(அ) கடன் விவரம் (அல்லது) வேறு ஏதாவது வரி செலுத்திய ஆவணங்கள் (குறிப்பிடப்பட்டுள்ளது போல்) அவரிடம் இருக்க வேண்டும்;

(ஆ) சரக்குகள் அல்லது/மற்றும் சேவைகளை அவர் பெற்றிருக்க வேண்டும்;

(இ) அரசுக்கு சப்ளை செய்த சரக்கின் மீதான வரியை சப்ளையர் செலுத்தி இருக்க வேண்டும்;

(ஈ) பிரிவு 39-ன் கீழ் ரிடர்ன்களை அவர் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

விற்பனையாளர்களிடம் இருந்த காலாவதியான மருந்துகள் அழிப்பதற்காக உற்பத்தியாளரிடம் செல்வதற்கான GST வழிமுறைகள் என்ன ?

உற்பத்தியாளர் CGST சட்டத்தின் பிரிவு 34(2) குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப பெற்ற காலாவதியான மருந்துகள் அவரது ITC யை குறைக்குமெனில் Credit Note வழங்கவேண்டும். காலாவதியான மருந்துகளை அழிக்கும் பொழுது உற்பத்தியாளர் ITC திரும்பி அளிக்கவேண்டும் (Reversal). CGST சட்டத்தின் பிரிவு 34 (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள நேர வரம்புக்குள் பதிவு செய்யப்பட்ட நபர் காலாவதியான மருந்துகளை திரும்பிதராவிட்டால் வரி விலைப்பட்டியல் வழங்கவேண்டும்.

நான் எனது வணிக சொத்துக்களுக்கு ITC Credit எடுக்கவில்லை அந்த சொத்துக்களின் விற்பனை மீது வரி செலுத்த வேண்டுமா?

ஆம்.தொகுக்கப்பட்ட மதிப்பீடு ரூ.20 லட்சம் மேல் இருந்தால் வரி செலுத்தவேண்டும்(சிறப்பு வகை மாநிலங்களுக்கு ரூ.10 லட்சம்)

SGST / UTGST மற்றும் GST கடன் வசதி SGST / UTGST கடனாகத் தரப்படலாமா?
 • தரப்படலாம்: SGST/IGST கடனை SGSTIUTGST கடனாக ஒரே மாநிலத்தில் இருப்பவர்களுக்கு ISD-யால் தரப்படலாம்.
தரப்பட்ட உபரிக் கடனை SD(Service Distributor)-யிடமிருந்து துறையினரால் மீட்க முடியுமா?

முடியாது. தரப்பட்ட உபரிக்கடனை வட்டியுடன் பெற்றவர்களிடமிருந்து திரும்ப மீட்கலாமே தவிர ISD-யிடமிருந்து அல்ல. பிரிவு 73 (அ) 74-ன் கீழ் உள்ள விதிகளின்படி தரப்பட்ட கடன் திரும்ப மீட்கப்படும்.

ISD-யின் கடன் பெறும் அனைவருக்கும் பொதுவான கடனாக இதை எப்படித் தருவது?
 • பொதுக்கடனாக அனைவராலும் பயன்படுத்தப்படும் கடனை ISD ‘புரோ ரேட்டா அடிப்படையில் – அதாவது அதைப் பெறும் ஒவ்வொருவரின் மொத்த வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் – தரலாம்.
SGST / UTGST மற்றும் GST கடன் வசதி SGST / UTGST கடனாகத் தரப்படலாமா?

தரப்படலாம்: SGST/IGST கடனை SGSTIUTGST கடனாக ஒரே மாநிலத்தில் இருப்பவர்களுக்கு ISD-யால் தரப்படலாம்.

CGST/IGST கடன் வசதியை CGST கடனாக ISD தருமா?
 • ஆம்; ஒரே மாநிலத்தில் இருப்பவர்களுக்கு CGST / IGST கடன் CGST கடனாக ISDயால் தரப்படலாம்
CGST/IGST கடன் வசதியை CGST கடனாக ISD தருமா?
 • ஆம்; ஒரே மாநிலத்தில் இருப்பவர்களுக்கு CGST / IGST கடன் CGST கடனாக ISDயால் தரப்படலாம்
SGST/UTGST கடன் வசதிகள் GST கடன் வசதியாக ISD-யால் பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்களுக்குத் தரப்படலாமா?

ஆம்: SGST/UTGST கடன் வசதி IGST கடன் வசதியாகப் பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்களுக்கு ISD-யால் தரப்படலாம்.

ISD-யால் தவறாக / உபரியாகத் தரப்பட்ட கடனை மீட்பதற்கான சட்டப் பிரிவுகள் என்ன?

உபரியாக / தவறாகத் தரப்பட்ட கடன் அதைப் பெற்றவர்களிடமிருந்து வட்டியுடன் பிரிவு 73 (அ) 74-ன் கீழ் மீட்கப்படலாம்.

ஒரு நிறுவனம் பல்வேறு ISD-க்களை வைத்திருக்கலாமா?
 • ஆம்; மார்க்கெட்டிங் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் தனித்தனி ISD-க்கு விண்ணப்பித்து அவற்றைப் பெறலாம்.
தொழிலை மேம்படுத்துவது, அதற்கான உள்ளீட்டு சேவைகளின் அளவு இரண்டையும் இணைப்பது சப்ளையர்களுக்குப் பெரும்பாலும் ஒரு சவாலாகவே இருக்கிறது. அந்நிலையில் ISD-யால் TC பகிரல் எப்படிச் செய்யப்படும்?
 • இச்சூழலில் பகிரல் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும். முதலாவதாக, உள்ளீட்டு சேவை தரப்பட்டு உள்ளீட்டு கடன் வசதி பெறுபவர்கள் மட்டும் இப்பகிரலால் பலனடைவர். இரண்டாவதாக, ஆபரேஷனல் யூனிட்கள் மத்தியில் மட்டும் பகிரப்படும். மூன்றாவது, ஒரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் பெறுபவரின் லாபத்துக்கும் உள்ளீட்டு சேவை பகிரப்படும். அனைவரின் சராசரிக்கும் உள்ள விகித அடிப்படையில் பகிரப்படும். இறுதியாக, பகிரப்படும் கடன் வசதி இதற்கான எல்லையை மீறக்கூடாது.
பதிவுகளில் தவறுகள் இருந்தால் அது எப்படி சரிசெய்யப்படுகின்றன?
 • பதிவுகள், கணக்குகள் மற்றும் ஆவணங்களில் உள்ள எந்த நுழைவுமே அழிக்கப்படவோ அடித்து எழுதவோ கூடாது, எழுத்து பிழைகளை தவிர மற்றவற்றிற்கு சான்றொப்பத்துடன் அடிக்கப்பட்டு புதிய நுழைவை சேர்க்கவேண்டும். பதிவுகள் மற்றும் பிற ஆவணங்கள் மின்னணு முறையில் பராமரிக்கப்பட்டால் ஒவ்வொன்றின்  நுழைவு திருத்தம் அல்லது நீக்கம் செய்ததின் பதிவு பராமரிக்கப்பட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட நபர் GST சட்டத்தின் கீழ் பராமரிக்க அவசியமான ஆவணங்கள் எவை?

பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் உண்மையான மற்றும் சரியான கீழ் குறிப்பிட்ட கணக்கை பராமரிக்க வேண்டும்.

 • சரக்குகளின் விளைவாக்கம் அல்லது உற்பத்தி,
 • சரக்குகளின் கையிருப்பு,
 • சரக்குகள் அல்லது சேவைகளின் உள்முக அல்லது வெளிமுக வழங்கல்,
 • பயன்படுத்திய உள்ளீட்டு வரி வரவு,
 • செலுத்தத்தக்க மற்றும் செலுத்திய வெளிமுக வரி மற்றும் பிற விவரங்கள்.
பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும் சரியான கணக்கை வைத்திருக்க வேண்டுமா?
 • பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும் பதிவு சான்றிதழில் குறிப்பிட்டவாறு அவரது அலுவல்- தொழிலின் முதன்மை இடத்தில் உண்மையான மற்றும் சரியான கணக்கு வைத்து மற்றும் பேணிவருதல் வேண்டும். மேலும் மின்னணு வடிவத்திலும் பேணிவரலாம்.
இ - காமர்ஸ் ஆபரேட்டர் (ECO) மூலம் பொருட்களை விநியோகிக்கும் விற்பனையாளர்கள் வியாபாரத்திற்கு பொதுவான இடங்களைக் கொண்டிருப்பது வழக்கம், குறிப்பாக அவர்களின் சரக்குகள் ECO ஆல் இயக்கப்படும் பகிரப்பட்ட இடங்களில் வைக்கப்படும். இதை பல வழங்குநர்கள் பதிவு செய்யப்படும் வணிகத்தின் கூடுதல் இடமாக பதிவு செய்யவர். இது GST யில் அனுமதிக்கப்படுமா?
 • இது GSTயில் அனுமதிப்பது உண்டு. பதிவு செய்யப்பட்ட நபர் ECO ஆல் இயக்கப்படும் பகிரப்பட்ட இடங்களில் சரக்குகள் வைத்திருந்தால் அதை கூடுதல் விநியோக இடமாக பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட நபர் அதற்கான பதிவேடுகளை பிரிவு 35 CGST சட்டத்தின் கீழ் பராமரிக்கவேண்டும்.
படிவம் GST - 3B ஐ தாக்கல் செய்யும் போது பதிவு செய்யபட்ட நபரின் வங்கி கணக்கில் மதிப்பு குறைக்கபட்டது. ஆனால், CIN எண் உருவாகவில்லையெனில் என்ன நடக்கும்?
 • படிவம் GST – 3B ஐ தாக்கல் செய்யும் போது பதிவு செய்யபட்ட நபரின் வங்கி கணக்கில் மதிப்பு குறைத்தப்பின் CIN எண் உருவாகவில்லையெனில் குறிப்பிட்ட நபர் படிவம் GST PMT – 07 ஐ Common Portal மூலம் தாக்கல் செய்யலாம்.
GST பயிற்சியாளருக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
 • GST பயிற்சியாளராக விண்ணப்பிப்பதற்கு படிவம் GST PCT – 1 ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை ஆராய்ந்த பின் அவர் தகுதியுள்ள நபராக இருக்குமாயின், GST பயிற்சியாளர் சான்றிதழ் படிவம் PCT-2 ல் வழங்கப்படும்.
கலப்பு வரியின் கீழ் பதிவு செய்யப்பட்ட நபர்,அதன் கீழுள்ள விதிமுறைகளை மீறினால், அதற்கு சம்மந்தமான அதிகாரி எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன?
 • பிரிவு 10ன் கீழ் பதிவு செய்யப்பட்ட  நபர், சட்டத்தின் கீழுள்ள விதிமுறைகளை மீறியதாக சம்மந்தப்பட்ட அதிகாரி எண்ணினால் அவர் படிவம் GST CMP – 05 ல் நோட்டீஸ் அனுப்பலாம்.அந்த நோட்டீஸ்க்கு 15 நாட்களுக்குள் பொறுப்புக்கான நபர் படிவம் GST CMP – 06 ல் பதில் அளிக்கவேண்டும். பெறப்பட்ட பதில்களை பொறுத்து ஆணையை GST CMP – 07 ல் பிறப்பிக்க வேண்டும்
குற்றங்களை ஒருங்கிணைத்தல் என்றால் என்ன?
 • கிரிமினல் குற்றங்களின் பிரிவு 320 வது படி முறு பயனுக்காவோ (அல்லது) தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ வழக்கு தொடர மறுப்பது குற்றங்களை ஒருங்கிணைத்தல் ஆகும்.
ஜி.எஸ்.டி.என். / மாநிலங்கள் / CBEC ஆகியோருக்கிடையே உள்ள ஒருங்கிணைப்பு முறைமை என்ன?
 • ஜி.எஸ்.டி. நிர்வாக முறையின் கீழ் வரி செலுத்துபவருக்கு தேவைப்படும் மிக முக்கியமான சேவைகளான, பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பது, விற்பனை விலைச்சீட்டுகளை (Invoices) தரவேற்றம் செய்வது, ரிடர்ன் தாக்கல் செய்வது, வரிக் கட்டணங்களை செலுத்துதல் ஆகியனவற்றை ஜி.எஸ்.டியின் தளத்தில் செய்து கொள்ளலாம். எல்லா விதமான சட்டரீதியிலான செயல்பாடுகள் (பதிவுகளை அங்கீகாரம் செய்வது, தாக்கல் செய்யப்பட்ட ரிடர்ன் கணக்கை மதிப்பீடு செய்வது, தேவையான விசாரணைகளை மேற்கொள்வது மற்றும் கணக்கீடு போன்றவை) மத்திய, மாநில அரசுகளைச் சார்ந்த வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.
 • இதன் மூலம் ஆரம்பகட்டப்பணிகள் (ஜி.எஸ்.டி) வலைதளவாயில் மூலமான சேவைகள்) சேவைகளை ஜி.எஸ்.டி.என். வழங்கும் பின்னுள்ள பணிகளுக்கான செய்முறைக் கட்டமைப்பை மாநிலங்களும், மத்திய அரசும், தாங்களாகவே உருவாக்கிக்கொள்ளும். அதே சமயத்தில் 27 மாநிலங்கள் (இவற்றை மாதிரி 2 மாநிலங்கள் என்று குறிப்பிடுவார்கள். தங்களுக்கான பின்கட்டப்பணிகளுக்கான செய்முறைக் கட்டமைப்பை ஜி.எஸ்.டி.என். உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
 • BEC மற்று முள்ள 9 மாநிலங்கள் (மாதிரி – 1) ஆகியன. தங்களுக்குத் தேவையான முறைமையைத் தாங்களே உருவாக்கி கொள்வதற்காக அறிவித்தன. மாதிரி 1 மாநிலங்கள் / CEEC யின் வசம் உள்ள (பதிவுகள், ரிடர்ன்கள் செலுத்தப்பட்ட கட்டணங்கள்) வரி செலுத்துவோரால் சமர்ப்பிக்கப்பட்ட முழுவிவரங்கள் தேவையின் அடிப்படையில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும். இது தகவலுக்காகவும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் இருக்கலாம்.
அழைப்பாணை அனுப்புவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிககை நடவடிக்கைகள் என்ன?
 • யாருக்காவது அழைப்பாணை அனுப்பும் முன்னர், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாவன:1.அழைப்பாணையை அனுப்ப நியாயமான காரணங்கள் இருக்க வேண்டியது அவசியமானது. குறிப்பிட்ட நபரைப் பற்றி விசாரணை நடக்கிறது, அவரது இருப்பு மிக அவசியமானது என்பது உறுதியான பின்னர்தான் அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்.
 • 2.அழைப்பாணை அனுப்பப்பட்டவர் வந்தவுடன், அவரது நேரம் மதிக்கப்பட வேண்டாம். சமய வரையில் விரைவாக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். அவரைக் காக்க வைப்பது என்பது விசாரணையின் உபாயமாக இருந்தால் காக்க வைப்பதில் தவறில்லை.
 • 3.பொதுவாக அழைப்பாணை ஏற்று வருபவரது வாக்குமூலத்தை, அலுவலக நேரத்திலேயே பதிவு செய்ய வேண்டும். அதே சமயம், வழக்கின் தன்மையால், வாக்குமூலத்தைப் பெறும் நேரமும், இடமும் மாறுவதில் தவறில்ல.
அழைப்பாணையை ஏற்க மறுத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?
 • அழைப்பாணை அனுப்பிய அதிகாரியின் முன் நிகழும் செயல்முறைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் முழுவதும் உண்டு. இவ்வாறு அழைப்பாணை பெறப்பட்ட பின்னர், முறையான காரணங்கள் இன்றி, அங்கே செல்லாமல் இருந்துவிட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 177ன் கீழ் அவர் மேல் வழக்குத் தொடர முடியும். அழைப்பாணையைப் பெறாமல் தவிர்த்துவிட்டால், IPC 172இன்படி வழக்குத் தொடரப்படும். அழைப்பாணை ஏற்று வந்து கேட்கப்பட்ட ஆவணங்கள், பொருட்கள், மின்னணுப் பிரிவுகளை கொடுக்காவிட்டால் IPC 175இன்படி வழக்குத் தொடரப்படும். அவர் தவறான சாட்சியம், வேண்டுமென்று மறைத்துப் போன்றவற்றை செய்தால் IPC 193இன்படி வழக்குத் தொடரப்படும். இவை தவிர CGSTSGST அதிகாரியின் அழைப்பாணைப்படி வராவிட்டால் CGST/SGST சட்டம்பிரிவு 122(3)ன் கீழ் ரூ. 25,000 அபராதம் செலுத்த நேரிடும்.
CGST சட்டத்திபடி துறை அதிகாரி எப்போது குறிப்பிட்ட நபரை, அழைப்பாணை அனுப்பலாம் (ம) அவ்வாறு அழைப்பாணை பெற்றவரின் பொறுப்புகள் யாவை?
 • CGST/SGST சட்டப்பிரிவு 70-ன்படி இந்தத் துறையில் அதிகாரம் பெற்ற அதிகாரி, குறிப்பிட்ட நபரை தான் விசாரிக்கும் விஷயம், பிரச்சினை, குற்றம் பற்றி சாட்சி சொல்லவோ, குறிப்பிட்ட ஆவணத்தைக் கொண்டு வரும்படியோ அல்லது வேறு எதற்காகவும், அவருக்கு அழைப்பாணை அனுப்பலாம். அந்த நபரிடம் இருக்கும், ஆவணங்கள், குறிப்பிட்ட அடையாளம் மற்றும் விவரம் கொண்ட பொருள் ஆகியவற்றை எடுத்து வருமாறு அழைப்பாணை அனுப்பலாம்.
 • அழைப்பாணை பெற்றவர். அதை ஏற்றுக்கொள்ள் சட்டப்பூர்வமான கடமையுள்ளவராக ஆகிறார். அவரோ அல்லது அவரது ஒப்புதல் பெற்ற பிரதிநிதியோ அழைப்பாணை அனுப்பிய அதிகாரியை சந்தித்தேயாக வேண்டும். அவர் எடுத்து வரச் சொன்ன ஆவணம் அல்லது பொருள் போன்றவற்றை நிச்சயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
CGST சட்டப்படி கைது செய்ய வேண்டிய குற்றம், கைது செய்யத் தேவையில்லாத குற்றம் எவை?
 • CGST/SGST சட்டப்பிரிவு 132-ன் படி வரிவிதிப்புக்கு உள்ளான சரக்குகள், பொருள்கள் அல்லது சேவைகள் ஆகியவற்றில் வரி ஏய்ப்பு அல்லது உள்ளிட்டு வரிக்கடன் தவறாகப் பெற்றது அல்லது திரும்பப் பெறும் தொகை ஆகியன ரூ.5 கோடிக்கும் அதிகமானால் அது கைது செய்யப்பட வேண்டிய, ஜாமீன் பெற முடியாத குற்றம். இதைத்தவிர பிற குற்றங்கள், கைது செய்யத் தேவையில்லாதவை. ஒரு வேளை கைது செய்யப்பட்டாலும், ஜாமீன் வழங்கப்படக் கூடிய குற்றம்.
CBEC-யில் கைது செய்யப் பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
 • கைது செய்யப்பட வேண்டுமா என்ற முடிவு பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எட்டப்படுகிறது. குற்றத்தின் தன்மை, வரி ஏய்ப்பு எந்த அளவுக்கு நடந்திருக்கிறது, வரிக்கடன், தவறான முறையில் எவ்வளவு பெற்றிருகிறார், ஆதாரங்களின் நம்பகத்தன்மை, மற்றும் தரம், ஆதாரங்களை மாற்ற, அழிக்க முடியுமா என்பது பற்றிய புரிதல் இதற்கான சாட்சியை சம்பந்தப்பட்ட நபர், தாக்கம் ஏற்படுத்த முடியுமா? அவர் நடைபெறம் விசாரணைக்கு ஒத்துழைப்பாரா? போன்ற பல அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் பின்னர், கைது நடவடிக்கை முடிவு செய்யப்படும். இவை தவிர,
 1. குற்றத்தைப் பற்றி முறையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யவும்
 2. சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாவதைத் தடுக்கவும்
 3. முறைப்படுத்தப்பட்ட வகையில் சரக்குகளைக் கடத்துவது தொடர்பான வழக்குகள், பொருட்களைசரக்குகளை மறைப்பதன் மூலம் சுங்க வரிகளைக் கட்டாமல் இருப்பது,
 4. போலியான பெயர்களில், நபர்கள் மூலமாக, பினாமிகள் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகங்களில் ஈடுபடும் தத்திரதாரிகளின் அல்லது மிக முக்கிய நபர்கள்
 5. சாட்சிகளை கலைக்கும், தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளைத் தடுப்பதற்கு.
 6. சாட்சியங்களை பயமுறுத்துவது, பிற வழிகளில் கட்டுப்படச் செய்வது மற்றும் ஒரு கோடிக்கு அதிகமான சுங்கவரி அல்லது சேவை வரியைக் கட்டாமல் இருப்பது. போன்ற காரணங்களும், தழ்நிலைகளும், கைது நடவடிக்கை பற்றி தீர்மானிக்கும்.
CGST/SGST சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவருக்கு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
 • இந்த அம்சங்கள் சட்டப் பிரிவு 69இன் கீழ் இருக்கின்றன அவையாவன:
 1. கைது செய்யப்பட வேண்டிய குற்றத்திற்காக, கைது செய்யப்படுகிறார் என்றால், அதற்கான காரணங்கள் அவருக்கு எழுத்துபூர்வமாக அளிக்கப்பட வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவரை மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
 2. கைது செய்யப்பட்டாக வேண்டும் என்கிற அளவுக்கு குற்றம் செய்யாத அதே சமயம், கைது செய்வது அந்த சமயத்தில் தேவையானது என்ற நிலையில் கைது செய்யப்படும் நபரை CGST/SGST -யின் துணை ஆணையரே ஜாமினில் விடுதலை செய்ய முடியும். 1973 குற்றவியல் நடைமுறை செயல்பாட்டு விதிமுறைச் சட்டத்தின்படி (436) காவல்துறை அதிகாரிக்கும் இருக்கும் அதே அதிகாரம் CGST/SGST இணைதுணை ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 3. அனைத்து கைது நடவடிக்கைகளும் 1973ஆம் ஆண்டைய குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்படி இருக்க வேண்டும்.
CGST/SGST சட்டத்தின்படி உரிய அதிகாரி குறிப்பிட்ட நபரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்க முடியுமா?
 • CGST/SGST யின் ஆணையர் ஒரு CGST/SGST அதிகாரிக்கு, குறிப்பிட்ட நபரைக் கைது செய்ய அதிகாரம் அளிக்க முடியும். அந்த நபர் CGST/SGST சட்டப் பிரிவு 132(1) (a), (b), (c), (d) அல்லது 132 (2) ஆகியவற்றின் படி தவறு செய்திருந்தால் அவரைக் கைது செய்ய ஆணையிட முடியும். இவ்வாறு கைது செய்யப்பட அந்த நபர் ரூ. 2 கோடிகளுக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்க வேண்டும் அல்லது ஏற்கெனவே CGST சட்டங்களின்படி குற்றவாளி என்று நிரூபணம் ஆகியிருக்க வேண்டும்.
GST சட்டங்களின்படி சோதனை மற்றும் பறிமுதலுக்கு நடவடிக்கைகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
 • CGSTISGST சட்டத்தில், சோதனை அல்லது பறிமுதல் தொடர்பான அதிகாரத்தில் உள்ள கட்டுப்பாடுகளாவன
 • ;1. பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள் அல்லது ஆவணங்கள் ஆகியனவற்றை சோதனை செய்ய வேண்டிய கால அளவுக்கு பின் நிறுத்தி வைத்திருக்கக் கூடாது.
 • 2. பறிமுதல் செய்யப்படும் ஆவணங்களை, அவரது உரிமையாளர் நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
 • 3. பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள் குறித்தான நோட்டீஸ் அவற்றின் உரிமையாளருக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பாவிட்டால், பறிமுதல் செய்த சரக்குகள், ஆவணங்கள் போன்ற அனைத்தும் திருப்பி அளிக்கப்பட வேண்டும். இந்த கால நேரம், நியாயமான காரணங்கள் இருந்தால், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம்
 • 4. பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள் முறையாகப் பட்டியலிடப்பட வேண்டும்.
 • 5. GST சட்டங்களின்படி பறிமுதல் செய்யப்பட்ட சில வகைப்பட்ட சரக்குகளை (அழுகிப் போகக் கூடியன, மனிதருக்கு, சுற்றுச் சூழலுக்கு கேடு உண்டாகக்கூடியன) உடனடியாக அழித்துவிடலாம்.

 

 • 6. சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கான முறைமை, 1973-ம் ஆண்டைய குற்றவியல் சட்ட நடைமுறை விதிகளின் படி பின்பற்றப்படும். ஆனால் இந்தச் சட்ட நடைமுறைப்படுத்தலில் மாற்றம் இருக்கும். குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் 165 பிரிவின் துணைப்பிரிவு (5)இன்படி சோதனையின் போது கைப்பற்றியப் பொருட்களைப் பற்றிய பட்டியலை அருகிலிருக்கும் மாஜிஸ்டிரேட்டிடம் அனுப்பப் பட வேண்டும். ஆனால் CGST/SGST துறையைப் பொறுத்தவரை கைப்பற்றபட்ட, பறிமுதல் துறை சார்ந்த முதன்மை ஆணையர் அல்லது ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஜிஎஸ்டி சட்டங்களின்படி சரக்குகளையோ, போக்குவரத்து வாகனங்களையோ, பிடித்து வைக்க முடியுமா?

ஆம். CGST/SGST சட்டப்பிரிவு 129-ன் படி ஒரு அதிகாரிக்கு சரக்குகளையும், அவற்றை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களையும், நிறுத்தித் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அதிகாரம் இருக்கிறது. மேற்படி சரக்குகள், வண்டிகள் ஆகியன, CGST/SGSTயின் சட்டங்களை மீறி சரக்குகள் இருப்புகள் ஆகியனவற்றை, கணக்கு எதுவும் காட்டாமல் சேமிப்பது, பதுக்குவது போன்றவற்றைக் கண்டறிந்தால், அத்தகைய சரக்குகளையும், அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படும் வாகனங்களையும் நிறுத்தித் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்.

CGST/SGST அதிகாரி வேறு எந்த தழ்நிலைகளிலாவது குறிப்பிட்ட தொழிலகம்/அலுவலகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா?

ஆமாம். CGST/SGST சட்டப்பிரிவு 65 ன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி குறிப்பிட்ட இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். இந்த சட்டத்தின் ஷரத்துப்படி CGST/SGST அல்லது C&AG அல்லது தகுதி பெற்ற செலவு கணக்காளர், அல்லது பட்டயக் கணக்காளர் ஆகியோர் அடங்கிய தணிக்கைக் குழுவை CGST/SGST சட்டத்தின் பிரிவு 66-ன்படி குறிப்பிட்ட தொழில்/வர்த்தக வளாகத்தைத் தங்களது உரிமையில் எடுத்துக்கொள்ள முடியும். இவர்கள் அந்த நிறுவனத்தில் வரவு செலவு கணக்குகள், ஆய்வுகள், சரிபார்த்தல் போன்றவற்றைச் செய்து, துறைக்கு வருவாய் வருவதை உறுதி செய்வது, மற்றும் பாதுகாப்பது போன்றவற்றைச் செய்கின்றனர். ஆனால் இதைச் செய்வதற்கு CGST/SGST யின் ஆணையர் அந்தஸ்தில் உள்ளவர் உத்தரவை வழங்க வேண்டும். இதன் மூலமாகத்தான், வரிவிதிப்பிற்கு உள்ளான நபரின் தொழில் மற்றும் வர்த்தகம் செய்யும் இடத்தில், அந்த இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். அது மட்டுமின்றி அவரது கணக்கு ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள், கணிணிகள் போன்றவற்றைத் தங்களது உரிமையில் எடுத்துக்கொள்ள முடியும்.

ஒரு முறையான சோதனையின்போது, அதை அமல்படுத்தும் அதிகாரி என்ன அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் (ம)சோதனை நடத்தும் வழிமுறைகள் என்ன?

சோதனையை நடத்தும் அதிகாரி பறிமுதல் செய்ய வேண்டிய சரக்கை, ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் அல்லது இது தொடர்பான பிற பொருட்கள் ஆகியவற்றைத் தேடிப் பறிமுதல் செய்யலாம். தேடலின்போது, குறிப்பிட்ட இடத்தில் நுழைவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டால், அதை உடைக்க அதிகாரம் உண்டு. அதுபோல, சோதனைக்குள்ளாகும் இடத்தில் பூட்டப்பட்ட அலமாரி பீரோக்கள், பெட்டிகள் போன்றவற்றைத் திறக்கச் சொல்லி, மறுக்கப்படும் பட்சத்தில், அவற்றை உடைத்துத் திறக்கவும், அந்த இடத்தை மூடி, தடைக்காப்பு செய்யவும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. CGST/SGST சட்டப்பிரிவு 67(10)ன்படி சோதனைகள், 1975ஆம் ஆண்டைய சட்டப்பிரிவு 100ன் படி, குற்றவியல் நடைமுறை வழிகாட்டு நெறிகளின்படி நடத்தப்பட வேண்டும்.

சோதனை மற்றும் பரிமுதல் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன், அதற்கான நம்பத்தகுந்த காரணங்கள் இருக்கின்றனவா என்பதை அதற்குரிய அதிகாரி எழுத்துமூலம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமா?
 • இது போன்ற நம்பிக்கை குறித்தான காரணங்களை, அதிகாரி எழுதி பதிவு செய்த பின்னர்தான், ஆய்வு சோதனை மற்றும் பறிமுதலுக்கு ஆணை வழங்கப்படும் என்பதில்லை என்றாலும், அந்த அதிகாரி எதை வைத்து அவ்வாறு நம்புகிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
 • ஒவ்வொரு வழக்கிலும் இதுபோல நம்புவதற்கான காரணங்களை பதிவு செய்யத் தேவையில்லை. ஆனாலும்கூட பொருட்கள்தகவல்கள் போன்றவை குறித்து பதிவு செய்த பின் சோதனைக்கான ஆணை வழங்குவது நல்லது.
இத்துறையில் முறையான அதிகாரம் பெற்ற அதிகாரி, இந்த சட்டப் பிரிவின் கீழ் சந்தேகத்துக்குள்ளாகும் நபரின், எல்லா வித சொத்துக்கள்/உரிமையுள்ள இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்க முடியுமா?
 • வரிவிதிக்கத் தக்க நபரின் தொழில்/வர்த்தம் செய்யும் எல்லா இடங்களும் சரக்குப் போக்குவரத்துத் தொழிலை செய்து வரும்,நபரின் தொழில்/வர்த்தகம், வரி விதிக்கத்தக்க நபராக இருந்தாலும், பதிவு செய்யாவிட்டாலும், அவரது தொழில்/வர்த்தகப் பணியிடங்கள், பொருள் சேமிப்புக் கிடங்குகள், சரக்கு சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை சொந்தமாக வைத்திருப்பவர் அல்லது அந்த இடத்தை நிர்வகிப்பவரின் ஆகியோரின் தொழில்/வர்த்தகம் நடைபெறும் அனைத்து இடங்கள் போன்ற அனைத்து இடங்களையும் ஆய்வு செய்யலம்.
ஆய்வு செய்யலாம் என்பதை யார்,எந்த தழ்நிலையில் உத்தரவிட முடியும்?
 • சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 67ன் படி அதன் அதிகாரி ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கு எழுத்து மூலம் அதிகாரமும், உத்தரவும் அளிப்பதற்கு, இத்துறையின் இணை ஆணையர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிக்குத்தான் உரிமை உள்ளது.

 

 • எந்த இடத்தில் யாரைக் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சரியான காரணங்கள் உள்ளன என்று அவர் நம்பினால், இந்த உத்தரவைப் பிறப்பிக்கலாம். அதற்கான காரணங்களாவன:

 

1.பொருள் வழங்கல் பரிமாற்றத்தில் விவரங்களை வேண்டுமென்றே மறைத்தல்

 1. சரக்குக் கையிருப்பைப் பற்றிய விவரங்களை மறைத்தல்
 2. மிக அதிகமான உள்ளிட்டு வரிக் கடனைக் கோரிப் பெற்றிருப்பது

4.வரி செலுத்தாமல் தப்பிக்க, அல்லது தவிர்க்க, சிஜிஎஸ்டி/எஸ்ஜிஎஸ்டி சட்டத்திலுள்ள ஷரத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பது.

5.சரக்குப் போக்குவரத்தை தொழிலாக மேற்கொண்டிருப்பவர், அல்லது சேமிப்பு கிடங்குகளின் உரிமையாளர், வரி செலுத்தாத சரக்குகளை வைத்திருத்தல் அல்லது வரி கொடுப்பதைத் தவிர்க்கும்படியான கணக்கைக் காட்டுவது, அல்லது சரக்குகளை மறைப்பது ஆகியன.

இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர் யார்?
 • சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கலில் முதலீடு செய்தவர் அல்லது முகவர் அல்லது வேறு ஏதாவது வழியிலோ, இந்தியாவில் வசிக்காமல் அல்லது நிலையான வர்த்தக விலாசமில்லாமல் எப்பொழுதாதவது வர்த்தகத்தை செய்பவர்களுக்கு CGST / SGSTன் சட்டப்பிரிவு 2(77)ன் படி இந்தியாவில் வசிக்காமல் / வர்த்தகம் இடமில்லாமல் வரி செலுத்துபவர் என்று பொருள்.
எதிர் லாபமீட்டு நடவடிக்கை என்றால் என்ன?
 • CGST/SGST சட்டம் 171வது பிரிவின்படி, சரக்கு (ம) சேவைகள் வழங்கலில் மீது எதாவது குறைப்பு வரி விகிதம்(அ) ITC சலுகை விலையை தேவையான அளவு குறைப்பதன் மூலம் பெறுநருக்கு வழங்கப்படும்.
 • ITC ஐ வேறு பதிவு செய்த நபரால் பெறப்பட்டுள்ளதா (அ) வரி விகிதத்தின் குறைப்பு உண்மையிலே, சரக்கு (ம) சேவைகளின் விலையில் தேவையான அளவு குறைக்கப்பட்டுள்ளதா (அ) இரண்டும் அவரால் அனுப்பப்படாத என்று பரிசோதிக்க அரசாங்கத்தால் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.
தொழில் புரியும் ஒருவரின் தொழில் வளாகம் நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இருந்தால் என்ன ஆகும்?
 • வரி பாக்கிவட்டிஅபராதம் செலுத்த வேண்டிய, தொழில் புரிபவரின் தொழில் வளாகம் நீதிமன்றம்நிர்வாக அலுவலர் / அதிகாரபூர்வ டிரஸ்டீ நீதிமன்ற ஆணையால் நியமிக்கப்பட்ட மேலாளரின் கட்டுப்பாட்டில் இருந்தால், இயல்பாக வரி செலுத்தும் ஒருவருக்கு நிர்ணயிக்கப்படுவது போல் அவரிடமிருந்து வரிவட்டி/அபராதம் வசூலிக்கப்படும். (பிரிவு 92).
ஒருவரின் தொழிலைக் காப்பாளர் (guardan) அல்லது டிரஸ்டீ அல்லது அவர் மைனராக இருக்கும் பட்சத்தில் வேறொரு முகவர் (agent) எடுத்து நடத்தினால் செலுத்த வேண்டிய வரி எப்படி செலுத்தப்படும்?
 • வரி பாக்கி இருக்கும் தொழிலை எடுத்து நடத்தும் காப்பாளர் (அ) டிரஸ்டீ (அ) மைனரின் முகவர் அல்லது இயங்க முடியாத நிலையில் இருக்கும் ஒருவரின் சார்பில் தொழில் புரிபவர் வரிஅபராதத் தொகையைச் செலுத்தக் கடமைப்பட்டவராவார்; செலுத்தாவிட்டால் அத்தொகையானது அவரிடமிருந்து மீட்கப்பட்டாக வேண்டும். (பிரிவு 91)
செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கியைச் செலுத்துவதில் பார்ட்னர்ஷிப் (partnership) நிறுவனத்தின் வரி செலுத்தும் பார்ட்னர்களது இழப்பு என்னவாக இருக்கும்?
 • எந்த ஒரு கூட்டணி நிறுவனத்தின் கூட்டாளிகளாக (partners) இருந்தாலும் வரிபாக்கி, வட்டி (அ) அபராதத் தொகையைச் அனைவரும் சேர்ந்தே செலுத்தியாக வேண்டும்.
 • ஏதாவது ஒரு கூட்டாளியும் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது அது குறித்து ஆணையாளருக்கு ஒரு அறிவிக்கை மூலம் தெரிவிக்க வேண்டியது நிறுவனம் (அ) கூட்டாளிகளின் கடமை ஆகும்.
 • பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு கூட்டாளி aந்தத் தேதி வரை கட்டப்பட வேண்டிய வரிபாக்கி, வட்டி (அ) அபராதத் தொகையைச் (ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டாலோ அல்லது பிறகு நிர்ணயிக்கப்பட்டாலோ) செலுத்தக் கடமைப்பட்டவராவார்.
 • பணி ஓய்வு பெற்று ஒரு மாதத்துக்குள் இதுகுறித்த விவரம் எதுவும் அவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றால், ஆணையாளருக்கு இவ்விவரங்கள் தெரிவிக்கப்படும்வரை அத்தொகையை அவர் செலுத்தக் கடமைப்பட்டவர் என்று அர்த்தம். (பிரிவு 90).
திவாலாகும்போது, நிறுவனத்தின் (வரி விதிக்கப்பட வேண்டிய நபர்) இயக்குநர்களுக்கு உள்ள பொறுப்பு என்ன?

எந்த தனியார் நிறுவனமும் மூடப்படும்போது ஏதாவது வரியோ அல்லது வேறு நிலுவைகளே நிறுவனம் திவாலாவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ முடிவு செய்யப்பட்டு, அவை வசூலிக்கப்படாமல் இருந்தால், வரி செலுத்தப்படாத காலத்தில் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஒவ்வொரு நபருக்கும் கூட்டாகவோ அல்லது தனியாகவோ நிலுவையை செலுத்தும் பொறுப்பு உள்ளது. ஆனால், நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் இருந்ததற்கு, கம்பெனி நடவடிக்கைகளில் எந்த விதமான கவனக் குறைவோ, கடமை தவறிய செயலோ அல்லது தங்கள் தரப்பில் இல்லை என்பதை ஆணையருக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நிரூபித்தால், இந்த நிலுவையைச் செலுத்த வேண்டியதில்லை.

நிறுவனம் (வரி விதிக்கப்பட வேண்டிய நபர்) திவாலாகிவிட்டால், வரி நிலுவை என்னவாகும்?
 • ஏதாவது 69 (5 நிறுவனம் மூடப்படும்போது, சொத்துக்களை பராமரிப்பதற்காக நியமிக்கப்படும் அதிகாரியான ரிசீவர் (லிக்விடேட்டர்) தனது நியமனம் குறித்து ஆணையருக்கு 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றதும் ஆணையர் செலுத்தப்பட வேண்டிய வரிநிலுவைத் தொகை எவ்வளவு என்பதை லிக்விடேட்டருக்கு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கக்கூடும். (சட்டப் பிரிவு 88இன் உட்பிரிவு 1,2)
வரி விதிப்புக்கு உள்ளாகும் ஒரு நபர், வரி பாக்கியுடன் அவரது தொழிலை இன்னொருவருக்கு மாற்றிக்கொடுத்தால், வரி பாக்கியின் நிலவரம் என்ன?
 • இந்த நிலுவைத் தொகை இத்தகைய மாற்றத்திற்கு முன்பாகத் தீர்மானிக்கப்பட்டு செலுத்தப்படாமல் இருக்கறதா அல்லது மாற்றத்திற்குப் பிறகு தீர்மானிக்கப்பட்டதாக இருந்தாலும், யாருக்கு அந்தத் தொழில் மாற்றப்பட்டுள்ளதோ அந்த நபருக்கு, கூட்டாகவும் தனியாகவும் வரியைச் செலுத்தும் பொறுப்பு உள்ளது, வரி, வட்டி அல்லது அபராத நிலுவையை வரி செலுத்த வேண்டிய நபர் தனது தொழிலை மற்றவருக்கு மாற்றிக்கொடுக்கும் வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டும்.[சட்டப் பிரிவு 85(1)]
உறுதி செய்யப்பட்ட வரித் தொகை மேல் முறையீட்டில் / ரிவிஷன் நடவடிக்கைகளில் அதிகமானால் அதை வதலிப்பதற்கான நடைமுறை என்ன?
 • டிமாண்டுக்கான நோட்டீஸ் நிலுவையில் உள்ள தொகைக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகை ஏற்கெனவே மேல்முறையீடு ரிவிஷன் பைசல் செய்யப்படுவதற்கு முன்பாகவே உறுதிசெய்யப்பட்டு விடுவதால், பணம் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் அந்த மேல்முறையீடுரிவிஷன் பைசல் செய்யப்படுவதற்கு முன்பாக தொடரலாம். (சட்டப் பிரிவு 84 (அ))
செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கியைத் தவணைகளில் செலுத்தலாமா?
 • இத்தகைய கோரிக்கை பார்வைக்கு வரும்போது, பணம் செலுத்துவதற்கான கால அளவை நீட்டிப்பதும் குறிப்பிட்ட நபரால் சுய மதிப்பீடு செய்யப்பட்டு ரிடர்னில் காட்டப்பட்டுள்ள இழப்பிற்கெதிரான தொகையை சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 24 மாதத் தவணைகளில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்த அனுமதிப்பதும் (பிரிவு 50இன் கீழுள்ள வரையறைகள் / நிபந்தனைகளுக்கேற்ப கணக்கிடப்பட்ட வட்டியுடன் சேர்த்து) ஆணையாளர் (அ) முதன்மை ஆணையாளரின் விருப்பமாகும். ஆயினும், குறிப்பிட்ட தேதி வரை ஏதாவது ஒரு தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல் போனாலும் அத்தேதியில் இன்னும் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையும் முன்னறிவிப்பு ஏதுமின்றி பிடித்தம் செய்யப்பட்டு விடும். (பிரிவு 80).
சட்டப்பிரிவு 76இன்படி, வரி வதலிக்கப்பட்டுள்ளது ஆனால், அரசுக்கு செலுத்தப்படவில்லை என்ற நிலையில் நோட்டீஸ் அனுப்புவதற்கான கால வரையறை என்ன?

இதற்கு எந்தக் கால வரையறையும் இல்லை. இப்படிப்பட்ட விஷயம் நடைபெற்றது கண்டறியப்பட்ட உடன் எந்த கால வரையறையும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

சட்டப் பிரிவு 76இன் உட்பிரிவை மீறும்வகையில் வசூலிக்கப்பட்டத் தொகை டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை என்ன?
 • விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும், அவ்வாறு அனுப்பப்பட்டால், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஓராண்டுக்குள் இயற்கை நிதி கோட்பாட்டைப் பின்பற்றி உத்தரவு பிறப்பிக்கப்படும். (சட்டப் பிரிவு 74 உட்பிரிவு 2 முதல் 6 வரை)
ஒரு நபர் வேறொரு நபரிடமிருந்து வரி வசூலிக்கிறார். ஆனால், வசூலித்த தொகையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
 • இந்தச் சட்டத்தின்படி வரியாக வசூலிக்கப்பட்ட தொகை அரசுக்குக் கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும். இத்தகைய தொகை செலுத்தப்படாமல் இருந்தால் உரிய அதிகாரி, அந்தத் தொகையை அவரிடமிருந்து பெறவும் அதே தொகைக்கு சமமான அபராதத் தொகைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (எஸ்.சி.என்.) அனுப்புவார். (சட்டப் பிரிவு 74 உட்பிரிவு 1 மற்றும் 2)
சட்டப் பிரிவுகள் 73 மற்றும் 74-ல் நோட்டீஸ் வழங்கப்பட்டு, தீர்ப்புக்காக குறிப்பிட்டுள்ள நேரப்படி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றால் என்ன ஆகும்?
 • இந்த சட்டப் பிரிவுகளின்படி குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றால், சட்டப் பிரிவு 75இன் உட்பிரிவு 10ன்படி தீர்ப்பு நடவடிக்கைகள் முடிந்துவிட்டன என்று கருதப்படும்.
சட்டப் பிரிவு 74இன்படி நோட்டீஸ் தொடர்பான வழங்கப்பட்ட தீர்ப்பில் வரித்தொகை மற்றும் அபராதம் உறுதி செய்யப்பட்டால், நோட்டீஸ் பெற்றவருக்கு அபராதம் குறைக்கப்படுவதற்கான ஏதாவது வாய்ப்பு உள்ளதா?
 • உள்ளது. உத்தரவில் தீர்மானிக்கப்பட்ட வரித் தொகையை, வட்டி மற்றும் அத்தகைய வரித் தொகையின் 50% சமமான அபராதத் தொகையுடன் சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த நபர் செலுத்திவிட்டால், அந்த நோட்டீஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கை