Author Posts

September 25, 2019 at 1:04 pm

வணக்கம்,

வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்த நபர் தான் விற்பனை உரிமத்தை கடந்த ஏப்ரல் 2019 ரத்து செய்துவிட்டார். விற்பனை வரி துறையில் இருந்து FINAL RETURN IN FORM GSTR 10 தாக்கல் செய்ய நோட்டீஸ் (ஈமெயில் மூலம்) வந்துள்ளது. GST PORTAL யில் RETURNS மெனுயில் சென்று பார்த்தால் FINAL RETURN என்ற மெனு இல்லை. இது சம்பந்தமாக விற்பனை வரி REPLY மெயில் செய்துள்ளேன். ஆனால் பதில் இல்லை.தாங்கள் அறிவுரை தந்து உதவ வேண்டுகிறேன்.

நன்றி.

September 25, 2019 at 8:16 pm

தாங்கள் ஜிஸ்டில் லாகின் செய்தால் செர்விஸ் >ரிடன் மெனுவின் கீழ்> பைனல் ரிடன் படிவம் உள்ளது. மேலும் உதவிக்கு அண்ணா நகர், நுங்கம்பாக்கம் மற்றும் நந்தனம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய அரசு ஜிஸ்டி உதவி மையங்களை அணுகவும்.

September 26, 2019 at 11:30 am

தாங்கள் பதிவுக்கு நன்றி.

தாங்கள்  கூறிய படி ஜிஸ்டில் லாகின் செய்து செர்விஸ் >ரிடன் மெனுவின் கீழ்> பைனல் ரிடன் படிவம் இல்லை. அதற்கு என்ன செய்யவேண்டும். மேலும் நான் சென்னை இல்லை, கும்பகோணம்.

நன்றி.

September 26, 2019 at 11:57 pm

வணக்கம் திரு.ரமேஷ் சுப்ரமணியன்,

தாங்கள் விற்பனை உரிமம் என குறிப்பிடுவது GST பதிவை யா?அவ்வாறு GST பதிவை ரத்து செய்து அதற்கான ஆணை வந்தால் தான் Final return தாக்கல் செய்ய முடியும்.

தாங்கள் ரத்து(cancellation of registration) செய்திருந்தும் Final return தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் GST HELPDESK(1800 103 6751) அழைத்து உங்கள் பிரச்னையை கூறி வழி அறியலாம், ஏதேனும் தொழில் நுட்ப காரணமாக கூட இருக்கலாம்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

September 28, 2019 at 6:52 pm

வணக்கம்

நான் கும்பகோணதில் உள்ள sale tax ஆபீஸ் சென்று விசாரணை செய்த போது மேல்  கண்ட CUSTOMER  COMPOSITION  SCHEME இருப்பதால் Final return தாக்கல் செய்ய வேண்டாம் என தெரிவித்தனர்.

நன்றி.

 

September 30, 2019 at 3:03 pm

தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி திரு.ரமேஷ்.

இணக்க வரித்தேர்வு செய்தவர்கள் வெறும் பதிவு ரத்து மனு மட்டும் தாக்கல் செய்தால் போதுமா?

நன்றி

ஸ்ரீவித்யா
Team TNGSTP

October 1, 2019 at 10:23 am

வணக்கம்,

இணக்க வரித்தேர்வு செய்தவர்கள் வெறும் பதிவு ரத்து மனு மட்டும் தாக்கல் செய்தால் போதும், என விற்பனை வரி துறையில் தெரிவித்தனர்.

நன்றி.

 

 

October 1, 2019 at 2:02 pm

தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி திரு.ரமேஷ்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

October 2, 2019 at 7:49 pm

பின்னர் எதற்கு சார் பாரம் 10 பைல் செய்ய நோட்டீஸ் மெயிலில் வருகிறது.

 

October 16, 2019 at 1:44 pm

கீழ் குறிப்பிட்ட நபர்கள் இந்த form யை பைல் செய்ய தேவையில்லை

This form is not required to be filed by taxpayers or persons who are registered as :-

(i) Input Service Distributors;

(ii) Persons paying tax under section 10;

(iii) Non-resident taxable person;

(iv) Persons required to deduct tax at source under section 51; and

(v) Persons required to collect tax at source under section 52.