Author Posts

February 21, 2020 at 1:30 pm

எனது வாடிக்கையாளர் ஒருவர் ஹோமியோபதி மருந்துகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். அவர் தனது தயாரிப்புகளை ஒரு பிரபல கொரியர் கம்பெனி ஏஜண்ட் மூலமாக அனுப்புகிறார். கொரியர் ஏஜண்ட் கொரியர் பில்லில் 18 சதவீதம் ஜி எஸ்டி வசூல் செய்து அவைகளை ரிட்டனில் சமர்ப்பிக்க தவறியுள்ளார். எனது வாடிக்கையாளர் அவரிடம் கட்டிய ஜி எஸ் டி தொகைகளை அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளார். இந்த மாத ரிட்டனில் இந்த ஆண்டு கொரியர் சார்ஜ் க்கான உள்ளீட்டு வரி அனைத்தையும் ரிவர்ஸ் செய்து கொண்டு அந்த செலவுக்கான ஜி எஸ் டி யை ஆர் சி எம் முறையில் கட்டுமாறு கூறியுள்ளேன். அவ்வாறு செய்யும்  பட்சத்தில் 18 சதவீதத்தில் ஆர் சி எம் கட்ட வேண்டுமா அல்லது 5 சதவீதம் கட்டினால் போதுமா?

February 22, 2020 at 4:39 pm

வணக்கம் திரு.செல்வகுமார்,

கொரியர் கம்பெனி ஏஜண்ட் GTAவாக இருந்தால் 12% அல்லது 5% தான் GST வரும்

அவர் consignment note எதுவும் தந்தாரா என்பதை உறுதி செய்யுங்கள்

consignment note கொடுத்திருந்து GTA வாக இருந்தால் தாங்கள் கூறிய Stepsற்கு பிறகு 5% GST RCM முறையில் செலுத்த வேண்டும்.

GTA இல்லை என்றால் reverse செய்து விட்டு 24% interest மட்டும் செலுத்தினால் போதும்

நன்றி

ஸ்ரீவித்யா
Team TNGSTP