Search
Filter by Content Type
Generic Filters

Further Clarification regarding Annual Returns and Reconciliation Statement by CBIC

Further Clarification regarding Annual Returns and Reconciliation Statement by CBIC

03.07.2019 அன்று CBIC பத்திரிக்கை வெளியீடு மூலமாக ஆண்டறிக்கை (FORM GSTR-9 / FORM GSTR-9A) மற்றும் கணக்குகள் சரி பார்க்கும் அறிக்கை (Reconciliation Statement – FORM GSTR-9C) தாக்கல் செய்வது தொடர்பாக சில தெளிவுகளை வழங்கியுள்ளது, நமது உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக அவை எளிமையாக கீழே விளக்கப்பட்டுள்ளது:

 

  • செலுத்த தவறிய வரியை செலுத்துதல்:

  • இது வரை Form GSTR – 3B அல்லது GSTR – 1இல் காண்பித்து வரி செலுத்தாத விநியோகங்களுக்கு  FORM GST DRC-03 மூலம் தற்போது வரி செலுத்தலாம்.
  • GSTR – 9 கூடுதலாக அவ்வாறு செலுத்தாத வரியின் மொத்த விநியோக விவரங்களோடு அவற்றை காண்பிக்க வாய்ப்பளிக்கிறது.

 

  • ஆண்டறிக்கை தாக்கல் செய்ய கருத வேண்டிய முக்கிய விவரம்:

  • வரி செலுத்துபவரின் கணக்குகள், GSTR – 1 மற்றும் GSTR – 3B ஒன்றாக இல்லையெனில், இவை இரண்டுள் ஒன்று நிகழ்ந்திருக்க கூடும் – i) அரசுக்கு வரி செலுத்தப்படவில்லை அல்லது ii) கூடுதல் வரி கட்டப்பட்டுள்ளது
  • வரி குறைவாக செலுத்தப்பட்டிருந்தால், ஆண்டறிக்கையில் காண்பித்து  வரி கட்ட வேண்டும்.
  • வரி கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தால், ஆண்டறிக்கையில் விவரங்களை தெரிவித்து, வரி திரும்ப பெறுதற்கு ஏற்றதாய் இருந்தால் FORM GST RFD-01A செய்து செலுத்திய வரியை திரும்ப பெறலாம்.
  • ஆண்டறிக்கையின் மூலம் எவ்வித ITC உரிமை கோர முடியாது.வரி செலுத்துவோர் கூடுதலாக எடுத்த ஏதேனும் ITCஐ திரும்ப செலுத்த வேண்டும் என்றால், தனியே FORM GST DRC-03 மூலம் செலுத்தலாம்.

 

  • GSTR – 9 அட்டவணை 8Dயில் உள்ள விவரம்:

  • ஆண்டறிக்கையின் அட்டவணை 8Aவில் 01.05.2019 அன்று இருந்த 2Aவின் விவரங்கள் தானாகவே பிரதிபலிக்கும்.
  • ஆனால், நாம் அன்றைய தேதியில் பதிவிறக்கி பார்க்கும் GSTR – 2Aவில் விநியோகம் செய்தவர் குறிப்பிட்ட கடைசிநாளிற்கு பிறகு தாக்கல் செய்த விவரமும் இருக்கும்.
  • அட்டவணை 8Dயில் உள்ள விவரம், வரி செலுத்துவோரின் 2Aவில் இருந்து அவர் ஜூலை 2017இல்இருந்து மார்ச் 2019ற்குள் உரிமை கோராத விவரம் ஆகும்.அதை உரிமை கோரக்கூடிய காலமும் முடிவுற்று விட்டதால் வரி செலுத்துபவர்கள் அந்த வித்தியாச தொகையை பற்றி எண்ண தேவையில்லை.

TNGSTP real estate handbook offer image

  • GSTR – 9 அட்டவணை 8Jயில் உள்ள விவரம்:

  • ஏற்கனவே 04.06.2019 அன்று வெளியிட்டிருந்த பத்திரிக்கை வெளியீட்டில், ஜூலை 2017இல் இருந்து மார்ச் 2019 வரை இறக்குமதி செய்யும் போது செலுத்திய IGST விவரங்களை அட்டவணை 6Eஇல் காண்பிக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது.
  • அவ்வாறு தாக்கல் செய்த 6E விவரம் அட்டவணை 8I இல் தானாகவே பிரதிபலிக்கும் மேலும் அட்டவணை 8J வில் வரி செலுத்துபவர் பெற விரும்பாத ITC விவரம் காண்பிக்கப்படும்.
  • அந்த ITC உரிமை கோரக்கூடிய காலமும் முடிவுற்று விட்டதால் வரி செலுத்துபவர்கள் அந்த வித்தியாச தொகையை பற்றி எண்ண தேவையில்லை.

 

  • GSTR – 9இன் அட்டவணை 16A மற்றும் 18 நிரப்புவதில்  உள்ள கடினங்கள்:

  • வரி செலுத்துபவர்கள் அவர்கள் GSTR – 1 மற்றும் 3Bயில் காண்பிக்காத அட்டவணை 16A மற்றும் 18இல் தாக்கல் செய்வதில் ஏதேனும் கடினம் இருந்தால், அவர்களுக்கு தெரிந்த வரை அல்லது பதிவுகளில் உள்ளவரை விவரங்களை வழங்கலாம்.
  • அங்கு கேட்கப்பட்ட விவரம் வெறும் விவர சேகரிப்புக்காக மட்டுமே, அதில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் எந்தவொரு பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தாது.

 

 

  • அட்டவணை 5D (Exempted), அட்டவணை 5E (Nil Rated) மற்றும் அட்டவணை 5F (Non-GST Supply)வில் தாக்கல் செய்ய வேண்டிய விவரங்கள்:
  • வரி விலக்களிக்கப்பட்ட மற்றும் வரிக்கு உட்படாத விநியோகங்களில் சில குழப்பங்கள் இருப்பதால், மேலும் அவற்றிற்கு எந்த வித வரியும் இல்லாததால், குறிப்பிட்ட அட்டவணையின் விவரங்களில் ஏற்படும் ஒன்றிரண்டு மாற்றங்கள் எந்த வித விளைவையும் ஏற்படுத்தாது.
  • அட்டவணை 5Fஇல் வரிக்கு உட்படுத்தப்படாத விநியோகங்கள் காண்பிக்க வேண்டிய இடத்தில், வரிக்கு உட்படுத்தப்படாத விநியோகத்தில் மனித நுகர்வுக்கு மதுபானம் வழங்குதல், மோட்டார் ஸ்பிரிட் (பொதுவாக பெட்ரோல் என அழைக்கப்படுகிறது), அதிவேக டீசல், விமான எரிபொருள், பெட்ரோலிய கச்சா மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சிஜிஎஸ்டி சட்டத்தின் மூன்றாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

 

  • 2017 – 18ன் எதிரிடை கட்டணம் 2018 – 19இல் செலுத்தியது:

  • எதிரிடை கட்டண முறையில் வரி செலுத்தப்பட்ட ஆண்டு தான் ITC உரிமை கோர முடியும், எனவே 2018-19இல் செலுத்திய RCM தொகை 2018-19 ஆண்டறிக்கையில் தான் காண்பிக்கப்பட்ட வேண்டும்.
  • இந்த TURNOVER மாற்றத்தால் ஏதேனும் வேறுபாடு இருந்தால் அவை தகுந்த விளக்கத்தோடு 9Cஇல் காண்பிக்கப்பட வேண்டும்.

 

  • GSTR – 9Cயில் CA/CMAவின் பங்கு:

  • GSTR – 9C பொருத்த வரை, GST சட்டத்தில் சொல்லப்பட்டது போல், CA/CMAவின் கடமை ஆண்டறிக்கை (FORM GSTR-9) மற்றும் வரி செலுத்துபவரின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் இரண்டிலும் உள்ள மதிப்புகளை பொருத்துவதே ஆகும்.

  • GSTR – 9C தாக்கல் செய்வதற்குரிய வருவாய் அளவு:

  • வரி செலுத்துபவரின் PAN எண்ணின் கீழ் வரும் அனைத்து பதிவுகளின் மொத்த  வருவாய் 2 கோடிக்கு மிகுந்தால், 9C தாக்கல் செய்ய வேண்டும்.
  • எ.கா: இரு வேறு மாநிலங்களில் பதிவு செய்துள்ள ஒரே PAN உடையவரின் வருவாய் தமிழ்நாட்டில் 1.2 கோடி மற்றும் கேரளாவில் 1 கோடி என்றால்,  அவர்களின் மொத்த வருவாய் 2 கோடியை தாண்டுவதால் இருமாநில கணக்குகளுக்கும் தனி தனியே 9C தாக்கல் செய்ய வேண்டும்
  • மொத்த வருவாய் என்பதற்கு ஜூலை 2017இல் இருந்து மார்ச் 2018 வரை உள்ள வருவாயை கணக்கிட வேண்டும்.

 

  • 2018-19இல் வழங்கிய 2017-18ன் Credit Notes / Debit Notes:

  • Credit Notes / Debit Notes 2018-19இல் வழங்கப்பட்டு இருந்து 2017-18இல் கணக்குகளில் அந்த தொகை வழங்கப்பட்டு இருந்தால், GSTR – 9ன் அட்டவணை 10 அல்லது 11 இல் காண்பிக்கலாம்.
  • இத்தகைய மாறுபாடுகள் FORM GSTR-9Cன் அட்டவணை 5இல் வழங்கப்பட வேண்டும்.

 

  • அட்டவணை 6B அல்லது 6H இல் விவரங்கள் வழங்குதல்:

  • அட்டவணை 6H தெளிவாக 6Hஇல் 6B யில் குறிப்பிடாத விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது.எனவே, இரண்டில் ஏதேனும் ஒரு அட்டவணையில் காண்பித்தால் போதும்.

 

  • செலவினங்களுக்கான ITCஐ பொருத்தி பார்த்தல்:

  • 9Cஇன் அட்டவணை 14 இல், ITC எடுத்து கொண்ட செலவுகளை மட்டும் பொருத்தி பார்க்க வேண்டும்
  • அட்டவணை 14இல் கொடுக்கப்பட்ட செலவுகள் ITC எடுத்துக் கொள்ளகூடிய மாதிரி செலவுகள் ஆகும், வரி செலுத்துபவர் அவராகவே பிற செலவு விவரங்களை தெரிவிக்கலாம்.

********************

On 03.07.2019, Government vide CBIC’s press release provided the following clarifications regarding  Annual Return (FORM GSTR-9 / FORM GSTR-9A) and Reconciliation Statement (FORM GSTR-9C) for information of all stakeholders, TNGSTP has briefly summarised the clarifications for the easy understanding of our members:

 

  • Payment of unpaid tax:-

  • Tax on supplies for which tax is not paid so far by declaring in Form GSTR – 3B or GSTR – 1 can be paid through  FORM GST DRC-03 at any time.
  • Form GSTR – 9 provides an additional opportunity for such taxpayers to declare the summary of supply against which payment of tax is made. 

 

  • Primary data source for declaration in annual return: – IMPORTANT POINT

  • If the books, GSTR – 1 and GSTR – 3B is not matching, two situations are possible – i)    tax was not paid to the Government or ii) tax was paid in excess.
  • In the first case, it should be declared in Annual return and  tax should be paid
  • In the second case, all information may be declared in the annual return and refund (if   eligible) may be applied through FORM GST RFD-01A
  • No input tax credit can be reversed or availed through the annual return, if taxpayers find that they should reverse any excess ITC taken, they can reverse through FORM GST DRC-03 separately. 

 

  • Difference amount found in Table 8D of GSTR – 9: –

  • Table 8A of the annual returns is auto populated from FORM GSTR-2A as on 1st May, 2019.
  • But, GSTR – 2A which we view from our login reflects the ITC which was filed even after the due date
  • The value reflected in Table 8D is basically credit that was available to a taxpayer in his FORM GSTR-2A but was not availed by him between July 2017 to March 2019, since the deadline has already passed and the taxpayer cannot avail such credit now taxpayers need not be concerned about the values reflected in this table. 

 

  • Table 8J of GSTR – 9: –

  • In the press release on annual return issued earlier on 4th June 2019, it has already been clarified that all credit of IGST paid at the time of imports between July 2017 to March 2019 may be declared in Table 6E
  • The figures shown in Table 6E will be auto populated in Table 8I and 8J will show the ITC the taxpayer chose not to avail.
  • The deadline has already passed and the taxpayer cannot avail such credit now
  • So the taxpayers need not be concerned about the values reflected in Table 8J.This is information that the Government needs for settlement purposes. 

 

  • Difficulty in filling Table 16A and 18 of GSTR – 9: –

  • If the tax payers are facing difficulty in filling the details in Table 16A and 18, which was not originally reported in their GSTR – 1 or 3B, they can declare all such data / details (which are not part of their regular statement/returns) to the best of their knowledge and records. 
  • This data is only for information purposes and reasonable/explainable variations in the information reported in these tables will not be viewed adversely.

 

  • Information in Table 5D (Exempted), Table 5E (Nil Rated) and Table 5F (Non-GST Supply): –

  • Since, there is some overlap between supplies that are classifiable as exempted and nil rated and since there is no tax payable on such supplies, if there is a reasonable/explainable overlap of information reported in Table 5D,5E and 5F, such overlap will not be viewed adversely. 
  • For the purposes of reporting Non-GST supplies in Table 5F,  It is clarified that non-GST supplies includes supply of alcoholic liquor for human consumption, motor spirit (commonly known as petrol), high speed diesel, aviation turbine fuel, petroleum crude and natural gas and transactions specified in Schedule III of the CGST Act.

 

  • Reverse charge of 2017-18 paid in 2018-19: –

  • In RCM, ITC can be claimed on the year in which it is paid, so if any RCM of 2017 – 18 is paid in 2018 – 19 ITC w.r.t it would have been claimed only in 2018 – 19 and the same can be shown in 2018 – 19 Annual return
  •  If there are any variations in the calculation of turnover on account of this adjustment, the same may be reported with reasons in the reconciliation statement (FORM GSTR-9C).

 

  • Role of CA/CMA in reporting GSTR – 9C: –

  • As clearly stated in the GST Act, with respect to the reconciliation statement, role of a CA/CMA is limited to reconciling the values declared in annual return (FORM GSTR-9) with the audited annual accounts of the taxpayer. 

 

  • Turnover for eligibility of filing GSTR – 9C: –  IMPORTANT POINT

  • If the Aggregate turnover of all the registrations having the same Permanent Account Number exceeds Rs.2 crores, then reconciliation statement needs to be filed in Form GSTR – 9C
  • For Eg: if there are two registrations in two different States on the same PAN, say Tamilnadu (with a turnover of Rs. 1.2 Crore) and Kerala (with turnover of Rs. 1 Crore) they are both required to file reconciliation statements individually for their registrations since their aggregate turnover is greater than Rs. 2 Crore. 
  • The aggregate turnover for this purpose shall be reckoned for the period July, 2017 to March, 2018.

 

  • Treatment of Credit Notes / Debit Notes issued during FY 2018-19 for FY 2017-18: –

  • If the credit or debit note for any supply was issued and declared in returns of Financial year 2018-19 and the provision for the same has been made in the books of accounts for Financial year 2017-18, it can be declared in Table 10 or 11 of GSTR – 9.
  • Such adjustments can be made in Table 5O of the reconciliation statement in FORM GSTR-9C. 

 

  • Details to be filled either in Table 6B or 6H: –

  • Table 6H of GSTR – 9 clearly states that information declared in Table 6H is exclusive of Table 6B. Therefore, information of such input tax credit is to be declared in one of the rows only.

 

  • Reconciliation of input tax credit availed on expenses: –

  • In Table 14 of GSTR – 9C,  only those expenses are to be reconciled where input tax credit has been availed.
  • The list of expenses given in Table 14 is a representative list of heads for which input tax credit may have been availed. The taxpayer has the option to add any head of expenses.
Links of other blogs, videos and forum queries in relation to GSTR – 9, 9A and 9C is given below for your ready reference:

மாறுபட்ட தேதியில் தாக்கல் செய்த GSTR 1 & 3B மற்றும் அதில் உள்ள Mismatchகளை GSTR 9ல் எவ்வாறு அணுகுவது?

NEW UPDATE BY CBIC ON AMENDING GSTR – 1/GSTR – 1இல் மாற்றம் செய்வது தொடர்பாக CBIC வெளியிட்ட புதிய அறிவிப்பு

Overview of recent press release by CBIC on GSTR – 9/GSTR – 9 பற்றிய CBICயின் சமீபத்திய பிரஸ் வெளியீடு – ஒரு பார்வை

GSTR – 9 Videos playlist

Forum – GSTR – 9

CS Srividya Subramaniam

 

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”