Search
Filter by Content Type
Generic Filters

GST ON SERVICES OF RESIDENT WELFARE ASSOCIATIONS/குடியிருப்போர் நலச்சங்கங்களின் சேவைகளுக்கான GST – நாம் அறிய வேண்டியவை

GST on resident welfare associations_TNGSTP

குடியிருப்போர் நலச் சங்கங்கள் பல வகையான சேவைகளை தங்களது இருப்பிட வாசிகளுக்கு வழங்குகிறது, அத்தகைய சேவைகளுக்காக உறுப்பினர் கட்டணம், சந்தா போன்றவற்றை வசூலிக்கிறது.இந்த சந்தா, உறுப்பினர் கட்டணம் போன்றவற்றிற்காக பெறப்படும் GST குறித்து CBIC தனது சுற்றறிக்கை எண் 109/2019 dt.22.07.2019இல் தெளிவுகளை வழங்கியுள்ளது.அதனை விளக்கமாக இந்த கட்டுரையில் காண்போம்:


நலச்சங்கங்கள் பெறும் உறுப்பினர் கட்டணம்/சந்தா/பராமரிப்பு கட்டணங்கள் மீதான வரி விலக்கு:

குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்களது சொந்த உறுப்பினர்களுக்கு புரியும் சேவைகளுக்கு ஒரு உறுப்பினரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு பெறப்படும் தொகை Rs.7,500/-க்கு மிகாமல் இருந்தால் GST செலுத்துவதில் இருந்து வரி விலக்கு அளிக்கபடும்.

வ.
எண்
தொடர்புடைய அறிவிப்புகள்
வரிவிலக்கு வரம்பு
நடைமுறைக்கு வந்த தேதி
1. அறிவிப்பு எண் 12/2017- மத்திய வரி (விகிதம்), dt.28.06.2017 ஒரு உறுப்பினருக்கு ஒரு மாதம் ரூ.5,000/- வரை 01.07.2017 முதல் 24.01.2018 வரை
2. அறிவிப்பு எண் 02/2018 – மத்திய வரி (விகிதம்), dt.25.01.2018 ஒரு உறுப்பினருக்கு ஒரு மாதம் ரூ.7,500/- வரை 25.01.2018இல் இருந்து

உறுப்பினர் நலச்சங்கங்களுக்கு GST பதிவு:

மொத்த வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் குறைவாக உள்ள உறுப்பினர் நலச்சங்கங்கள் GST பதிவு பெற தேவை இல்லை.உறுப்பினரிடம் இருந்து பெரும் ,மாதாந்திர கட்டணம் ரூ.7,500ற்கு மிகுந்து இருந்தாலும் GSTயில் பதிவு செய்து GST செலுத்த தேவை இல்லை.

நலச்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களிடம் இருந்து பெற்ற தொகைக்கு கீழ்க்கண்ட இரண்டு காரணிகளும் நிறைவேறும் பட்சத்தில் GST செலுத்த வேண்டும்:

  • ஒரு குறிப்பிட்ட உறுப்பினரிடம் இருந்து ஒரு மாதத்திற்காக பெறப்பட்ட தொகை ரூ.7,500ற்கு மிகுந்து இருத்தல் மற்றும்
  • உறுப்பினர் நலச்சங்கம் தனது சரக்குகள் மற்றும் சேவைகளின் விநியோகத்தின் மூலம் பெறப்பட்ட மொத்த ஆண்டு வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் மேல் இருத்தல்

உறுப்பினர் நலச்சங்கங்களுக்கு உள்ளீட்டு வரி வரவு:

நலச்சங்கங்கள் தாங்கள் வாங்கிய மூலதன பொருட்கள்(ஜெனரேட்டர், தண்ணீர் பம்ப் போன்றவை), உள்ளீட்டு சரக்குகள் (குழாய்கள், பிற சுகாதார பொருட்கள் போன்றவை) மற்றும் பழுது மற்றும் பராமரிப்பு சேவைகளுக்காக பெறப்பட்ட சேவைகளுக்கு செலுத்திய GSTக்கு உள்ளீட்டு வரி வரவு எடுத்து கொள்ளலாம்.

சில நடைமுறை குழப்பங்களுக்கான தீர்வுகள்:

 கேள்வி எண் 1:

ஒரு உறுப்பினர் ஒரு அபார்ட்மெண்டிற்கு மேல் வைத்திருந்தால் அவர் செலுத்தும் தொகைக்கு எவ்வாறு வரி விலக்கு கணக்கிடப்படும்?

 விளக்கம்:

ஒரு உறுப்பினர் ஒரு அபார்ட்மெண்டிற்கு மேல் வைத்திருந்தாலும் அவரிடம் ஒவ்வொரு அபார்ட்மெண்டிற்கும் தனித்தனியாக தான் கட்டணம் வசூலிக்கப்படும், எனவே வரி விலக்கும் ஒவ்வொரு அபார்ட்மெண்டிற்கும் செலுத்திய தொகையை பொருத்தே கணக்கிட வேண்டும்.

எ.கா. ஒரு நபர் தன் பெயரில் இரண்டு அபார்ட்மெண்ட் வைத்திருந்து இரண்டிற்கும் சேர்த்து Rs.15,000/- பராமரிப்பு தொகை செலுத்தினால், இரு அபார்ட்மெண்டிற்கும் தனியாக கணக்கிடும் போது Rs.7,500/- வசூலிக்க படுவதால் இரு அபார்ட்மெண்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகைக்கும் வரி விலக்கு வழங்கப்படும். 

 கேள்வி எண் 2:

உறுப்பினர் நலச்சங்கம் வசூலிக்கும் தொகை ரூ.7,500ற்கு அதிகமாக இருந்தால், GST ரூ.7,500ற்கு மேல் வசூலிக்கப்பட்ட தொகைக்கு செலுத்த வேண்டுமா அல்லது மொத்த பராமரிப்பு தொகைக்கும் வரி செலுத்த வேண்டுமா?

 விளக்கம்:

குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு வரி விலக்கானது அவர்கள் ஒரு உறுப்பினரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வசூலிக்கும் தொகை ரூ.7,500ற்கு குறைவாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும்.அந்த உச்ச வரம்பிற்கு மேல் வசூலிக்கப்படும் போது மொத்த தொகைக்கும் GST செலுத்த வேண்டும்.

எ.கா. ஒரு உறுப்பினரிடம் இருந்து மாதம் ரூ.9,000/- வசூலிக்கப்படுகின்றது என்றால் மொத்த 9,000திற்கும் 18% GST செலுத்த வேண்டும்.Rs.1,500(9,000 – 7,500)இல் 18% GST கணக்கிட கூடாது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                *******************************

 

Resident Welfare Associations(RWA) provide many services to the residents of their locale and charge them in different forms such as membership fees, subscription etc., Chargeability of GST on the various supplies(services) provided by them is clarified by the recent circular of CBIC which is discussed in detail in this Article:

CBIC vide its recent Circular No.109/2019 dt.22.07.2019 clarified the issues related to GST on monthly subscription/contribution charged by a Residential Welfare Association from its members

Exemption for Maintenance charges/Membership fees/Subscription fees collected by RWA:

Supply of service by RWA (unincorporated body or a non- profit entity registered under any law) to its own members by way of reimbursement of charges or share of contribution up to an amount of Rs.7,500/- per month per member for providing services and goods for the common use of its members in a housing society or a residential complex are exempt from GST. 

S.No
Relevant Notification
Exemption limit
Effective from
1. Notification No. 12/2017- Central Tax (Rate), dated 28.06.2017 Rs.5,000/- per month per member 01.07.2017 to 24.01.2018
2. Notification No. 02/2018 – Central Tax (Rate), dated 25.01.2018 Rs.7,500/- per month per member From 25.01.2018 till date

GST Registration for an RWA:

GST registration is not required for an RWA If aggregate turnover of an RWA does not exceed Rs.20 Lakh in a financial year, RWA need not take registration and pay GST even if the amount of maintenance charges exceeds Rs.7,500/- per month per member. 

RWA is required to pay GST on monthly subscription/contribution charged from its members only under two criteria:

  • If such subscription is more than Rs.7,500/- per month per member and 
  • The annual aggregate turnover of RWA by way of supplying of services and goods is also Rs. 20 lakhs or more.

Input tax credit for an RWA:

RWAs are entitled to take ITC of GST paid by them on capital goods (generators, water pumps, lawn furniture etc.), input goods (taps, pipes, other sanitary/hardware fillings etc.) and input services such as repair and maintenance services. 

Clarifications for few practical issues:

Issue No.1:

  If a member owns more than one apartment and pays maintenance fees for each such    apartment, how will the exemption be calculated?

Clarification:

Even if the two or more apartments is held by a single person, fees are charged separately for each apartment and so the limit is also  calculated for each apartment separately for each residential apartment owned by a member.

For example, if a person owns two residential apartments in a residential complex and pays Rs. 15,000/- per month as maintenance charges towards maintenance of each apartment to the RWA (Rs. 7,500/- per month in respect of each residential apartment), the exemption from GST is available to both the apartments. 

Issue No.2:

If the membership fees exceeds Rs.7,500/- per month , GST is to be paid on the amount exceeding Rs.7,500/- or on the entire amount of maintenance charges?

Clarification:

The exemption from GST on maintenance charges charged by an RWA from residents is available only if such charges do not exceed Rs. 7,500/- per month per member. In case the charges exceed Rs. 7,500/- per month per member, the entire amount is taxable.

For example, if the maintenance charges are Rs. 9,000/- per month per member, GST @18%  shall be payable on the entire amount of Rs. 9,000/- and not on [Rs. 9,000 – Rs. 7,500] = Rs. 1,500/-

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”