Search
Filter by Content Type
Generic Filters

GST on online game prize money/ஆன்லைன் விளையாட்டு பரிசு பணத்திற்கான வரி தாக்கம்

GST on online Game Prize MoneyGST on online Game Prize Money

இந்த கால கட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மிகவும் பிரபலமாகவுள்ளது.  எல்லா வயதுடையவர்களும் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு பணம் தருகிறார்கள்.  இதன் அடிப்படையில், பல ஊடக செய்திகளில் இருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் , GST துறை இந்தியாவில் உள்ள இம்மாதிரியான ஆன்லைன் விளையாட்டு நிறுவங்கள் எவ்வாறு GST கணக்கிடுகிறார்கள், மற்றும் அவை துறை சார்ந்த வருவாய் இழப்புக்கு வழி வகுக்கிறதா என்று கண்டறிய முயற்சிக்கிறது.

இவ்வகை நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டை விளையாடும் நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கிறது.  அந்த பணம் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது . மேலும் இந்த பணத்தில் இருந்து விளையாட்டு  நிறுவனங்கள் தங்களுக்கு  20% கமிஷன் எடுத்துக்கொண்டு அதற்கு 18% GST வரி செலுத்துகிறது.  ஆனால் அதிகாரிகள் ஒட்டுமொத்த பரிசு பணத்திற்கும் வரி விதிக்கவேண்டும் என்று ஆலோசிப்பதாக செய்திகள் கூறுகிறது. இது சம்பந்தமாக Indian Federation of Sports Gaming (IFSG)-E -gaming நிறுவனங்களின் தொழில் அமைப்பு, நிதி அமைச்சகம் மற்றும் GST Councilஇடமும் இதற்கான தெளிவான பதிலை கேட்டிருக்கிறது.  அரசு ஒரு தெளிவான பதிலை கொடுக்காத நிலையில் இது சட்ட வழக்காக மாற எல்லா வாயுப்புகளும் இருப்பதாக நம்ப படுகிறது.

இந்த நிறுவனங்களுக்குளேயே இது சம்பந்தமான இரு வேறு கருத்துக்கள் இருக்கிறது.  சில நிறுவங்கள் ஒட்டுமொத்த பரிசு தொகைக்கும் வரி செலுத்துகிறார்கள். உலகளாவிய ரீதியில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது எனவும் பல நாடுகள் ஒட்டுமொத்த விளையாட்டு பரிசுத்தொகைக்கே வரி கட்டுகிறது என்றும் அறியப்படுகிறது.

Rule 31A of the Central Goods and Services Tax Rules, 2017: சூதாட்டம், குதிரை பந்தயம், மற்றும் பந்தயங்களுக்கான பரிசு தொகை முழுவதும் வரிக்கு உட்பட்டவையாகும்.  ஆனால் விளையாட்டு நிறுவங்களோ தங்கள் விளையாட்டுகள் சூதாட்ட வகையில் வராது மற்றும் அவை ஒரு நபரின் திறமை சார்ந்தே உள்ளது என்றும் அதனால் அவர்களது கமிசினில் 18% வரி செலுத்துவது சரியே என்று வாதிடுகிறார்கள்.  இம்மாதிரியான விளையாட்டு நிறுவங்கள் Punjab High Court அளித்த தீர்ப்பை சுட்டி காட்டுகிறார்கள். அதில் தனி நபர் திறன் சார்ந்த விளையாட்டுக்கும் பந்தயம் மற்றும் சூதாட்ட விளையாட்டிற்கு வித்தியாசம் உண்டு என்று தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்.

வரும் காலங்களில்  இந்த விஷயத்தில் ஒரு சிறந்த தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

xxxxxxxxxxxxxxxxxxx

As we all know online games are very popular these days and gaining lot of momentum across all ages.  They offer different types of games which are basically virtual in nature but offer prize money. In that background we understand from news sources that indirect taxes department are looking into how these gaming companies in India calculate GST and whether the methodology they use results in revenue leakage.

The gaming companies collect contributions from users of these games, which go towards a prize pool. From this, the companies deduct 20% as their commission, and most currently pay 18% GST only on this amount. But now, tax authorities looking into whether GST should apply to the total prize pool, the report said. In response, the Indian Federation of Sports Gaming (IFSG), an industry body of eGaming companies reached out to the Ministry of Finance and GST council for clarity on the issue. The report said tax litigation is inevitable if the government provides no clarification.

These Gaming companies themselves appear divided over the issue. There are companies which pay GST on the overall money connected.  Also we understand this is the same practice followed globally in every mature GST-following country. GST for online gaming companies are charged on their Gross Gaming Revenue.

Rule 31A of the Central Goods and Services Tax Rules, 2017 states: “The value of supply of actionable claim in the form of chance to win in betting, gambling or horse racing in a race club shall be 100% of the face value of the bet or the amount paid into the totalisator.” However, some of the gaming companies claim this does not apply to them as the service they offer cannot be categorised as gambling or betting. They pay 18% GST as they fall under the ambit of ‘games’ or skill, while betting, gambling and lotteries attract 28% GST. Online gaming companies rely on a Punjab High Court judgement that declaring them ‘skill-based’ to differentiate themselves from betting companies and lotteries, per the report.

Hope there will be a better clarity in this respect in days to come.

CA Ramesh R

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”