Search
Filter by Content Type
Generic Filters

GST rates of goods and services recommended by 37th GST council meeting

Sep 24, 2019
0
37th GST meeting_rate changes_TNGSTP

20.09.2019 அன்று நிதி அமைச்சர் திருமதி .நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் நடைபெற்ற 37ஆவது GST மன்ற குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட சில முக்கிய சரக்குகள் மற்றும் சேவைகளின் வரி விகித மாற்றங்களை குறித்து இந்த கட்டுரையில் காணலாம்:

சரக்குகளுக்கான வரி விகித மாற்றங்கள் 

வரி விகிதம் குறைக்கப்பட்ட சரக்குகளின் விவரம்:

S.No
சரக்குகளின் பெயர்
நடப்பு GST விகிதம்
குறைக்கப்பட்டள்ள புதிய GST விகிதம்
1. Parts of Slide Fasteners (ஸ்லைடு ஃபாஸ்டென்சர்   களின்பாகங்கள்) 18% 12%
2. கடற்சார் எரிபொருட்கள் 0.5% (FO) 18% 5%
3. கிரைண்டர்கள் (Wet Grinder )கல்லை அரைப்பானாக கொண்டது 12% 5%
4. i. காயவைக்கப்பட்ட புளி

ii. இலைகள் / பூக்கள் / பட்டைகளால் ஆன தட்டுகள் மற்றும் கோப்பைகள்

5% NIL RATED
5. அறுத்து மெருகூட்டப்பட்டஅரை விலைமதிப்பற்ற கற்கள் 3% 0.25%
6. ஹைட்ரோகார்பன் ஆய்வு உரிமக் கொள்கையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெட்ரோலியம் தொடர்பான குறிப்பிட்ட பொருட்கள் Present Applicable rates 5%
7. 10 பேருக்கு மேல் 13 பேர் வரை சுமந்து செல்ல கூடிய 4000MMக்கு மிகாத பயணிகளை சுமந்து செல்லும் 1500CC இயந்திர திறன் கொண்ட டீசல் வண்டிகள் மற்றும் 1200CC இயந்திர திறன் கொண்ட பெட்ரோல் வண்டிகள்  15% COMPENSATION CESS 1% COMPENSATION CESS FOR PETROL VEHICLES AND 3% COMPENSATION CESS FOR DIESEL VEHICLES

 

GST வரி விலக்களிக்கப்பட்டுள்ள சரக்குகள்:

  1. i) உள்நாட்டில் தயாரிக்கப்படாத குறிப்பிட்ட பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் (2024 வரை)
  2. ii) குறிப்பிட்ட திட்டங்களுக்காக Food and Agriculture Organisation (FAO) விற்கு விநியோகம் செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள்

GST வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள சரக்குகள்:

S.No
சரக்குகளின் பெயர்
நடப்பு GST விகிதம்
குறைக்கப்பட்டள்ள புதிய GST விகிதம்
1. ரயில்வே வண்டிகள், பெட்டிகள், புழக்கத்தில் இருக்கும் சரக்குகள் (சேர்த்துவைத்துள்ள ITCக்கு refund வழங்காமல்) 5%  12% (இந்த பொருட்களை விநியோகம் செய்பவர்களின் ITC ACCUMULATION பிரச்னையை தீர்க்கவே வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது)
2. காபி தேயிலை நச்சூட்டப்பட்ட (caffeinated beverages) பானங்கள் 18% 28% + 12% COMPENSATION CESS

இதர மாற்றங்கள் மற்றும் விளக்கங்கள்:

  • காற்றூட்டப்பட்ட பானங்கள் (aerated drinks) தயாரிப்பவர்கள் இணக்க வரியின் கீழ் வரி செலுத்த முடியாது
  • புகையிலை பொருட்களுக்கு compensation cess refund வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.(inverted duty structure ஆக இருந்தால்)
  • HSN CODE 8424ன் கீழ் வரும் இயந்திர தெளிப்பான்களுக்கு 12% GST விதிக்கப்படும்
  • சோலார் வாட்டர் ஹீட்டர் போன்ற சூரிய சக்தி சார்ந்த சாதனங்களுக்கான சூரிய சக்தி வெளியேற்றக் குழாய்கள் போன்ற பாகங்களுக்கு 5% GST விதிக்கப்படும்
  • பாதாம் பால் HSN CODE 22029990இல் வகைப்படுத்தப்பட்டு 18% GST விதிக்கப்படும்.
  • கடற்படைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கு IGSTயில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும்

சேவைகளுக்கான வரி விகித மாற்றங்கள்

துறை வாரியான வரி விலக்கு/வரி விகித மாற்றங்கள்/ITC ELIGIBILITY CRITERIA

HOSPITALITY மற்றும் சுற்றுலா துறை:
  • ஹோட்டல் விடுதிகளின் சேவைகளுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டு கீழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது:
ஒரு யூனிட்டுக்கான பரிவர்த்தனை மதிப்பு (Rs.)
GST விகிதம்
Rs.1000 அல்லது அதற்கும் குறைவு Nil 
Rs.1001 முதல் Rs.7500 12%
Rs.7501 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பு 18%

 

  • Rs.7501க்கு மேல் தினசரி யூனிட் கட்டணத்தைக் கொண்ட வளாகங்களைத் தவிர ,மற்ற வெளிப்புற கேட்டரிங் சேவைகளுக்கான GST தற்போதைய 18%(with ITC)இல் இருந்து 5%(without ITC) ஆக குறைக்கப்படுகிறது.

Job work சேவைகள்:

S.No
சில்லறை வேலையின் வகை
நடப்பு GST விகிதம்
குறைக்கப்பட்டள்ள புதிய GST விகிதம்
1. வைரங்கள் தொடர்புடைய சில்லறை வேலை சேவைகள் 5%  1.5%
2. பொறியியல் துறையில் காணப்படும் இயந்திரம் தொடர்புடைய சில்லறை வேலை (பேருந்தின் பாகங்களை தொடர்புடைய வேலைகள் தவிர) 18% 12%

கிடங்குகள்:

தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள், மசாலாப் பொருட்கள், கரும்பு, வெல்லம், பச்சை காய்கறி, இழைகளாளான பருத்தி, ஆளி, சணல் போன்றவை, இண்டிகோ, உற்பத்தி செய்யப்படாத புகையிலை, வெற்றிலை, டெண்டு இலைகள், அரிசி, காபி மற்றும் தேநீர் போன்றவற்றை சேமிப்பதற்கும் கிடங்கில் பத்திரப்படுத்துவதற்கும் GST வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து  சேவைகள்:

 

வான்வழி அல்லது கடல்வழி ஏற்றுமதி FREIGHT மீது வழங்கப்பட்ட GST வரிவிலக்கு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு 30.09.2020 வரை வழங்கப்பட உள்ளது.

இதர சேவை தொடர்பான மாற்றங்கள்:

  • சரக்குகள் அல்லது சேவைகளை வழங்குபவர் மற்றும் பெறுபவர் இருவரும் வரிக்குட்பட்ட இடத்தில் இல்லையெனில், அந்த பரிவர்த்தனையை மேற்கொண்ட இடைத்தரகரின் சேவைகளுக்கும் வரி விலக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
  • செயல்பாட்டு தெளிவின்மையை அகற்ற உரிம கட்டணம் பெற்று கொண்டு மாநில அரசுகளால் மதுபான உரிமம் வழங்கப்படுதலை விநியோகம் இல்லை என்று குறிப்பிட்டு  அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
  • securities lending services எனப்படும் பத்திரங்களை கடனாக வழங்கும் சேவைகளுக்கு RCM முறையில் 18% GST விதிக்கப்படும்  எனவும் RCM அறிமுகம் செய்யப்படுவதற்கு முந்தைய காலத்துக்கு பொதுவாக பின்பற்றும் forward charge முறையில் வரி விதிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது 
  • மேற்கூறிய சேவைக்கு IGST செலுத்த வேண்டும், வரி செலுத்துபவர் தவறாக CGST,SGST ஆக செலுத்தி இருந்தால் மறுபடி IGST செலுத்த தேவை இல்லை 
  • Body corporate அல்லாத GSTயில் பதிவு செய்த நபர்கள் Body corporateகளுக்கு வாகனங்களை வாடகைக்கு விடும் சேவை செய்யும் போது 5% GST RCM முறையில் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விகிதம் அனைத்தும் அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் மூலம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தகவல்களுக்கு இணைந்திருங்கள்!!!

CS ஸ்ரீவித்யா

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”