Search
Filter by Content Type
Generic Filters

Important note for Retail traders of own brand rice and pulses/சொந்த BRAND அரிசி, பருப்புகள் விற்பவரா?, நீங்கள் அறிய வேண்டியவை

Important note for Retail traders of own brand rice and pulses

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள்,மாவு, மக்காச்சோளம் போன்றவற்றிற்கு அறிவிப்பு எண்: 02/2017 Central Tax(Rate) dt.28.06.2017ன் படி GSTயில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான புரிதல்.பதிவு செய்யப்பட்ட பிராண்ட் பெயர் அல்லது வர்த்தக பெயர் அல்லாமல் நாம் விநியோகிக்கும் சரக்குகளுக்கும் இந்த விலக்கு உண்டா?பதிவிடாத பிராண்ட் பெயர் அல்லது வர்த்தக பெயரில்லாமல் நமது சொந்த பெயரில் இந்த பொருட்களை வரி விலக்கோடு விநியோகம் செய்யலாமா?

இதன் தெளிவான விளக்கம் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பிராண்ட் பெயர் அல்லது வர்த்தக பெயரின் முக்கியத்துவம்:

Fssai பரிந்துரைத்த பொதுவான பெயரிடல் முறைப்படி தொகுக்கப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்களில் அந்த உணவின் பெயரும் அதன் வர்த்தக பெயரையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.அதனால், பேக் செய்யப்பட்டு விற்கப்படும் எந்த பொருளும் பெயரில்லாமல் விநியோகம் செய்யப்பட முடியாது என்பது தெளிவாகிறது.

பதிவு செய்யப்பட்ட முத்திரைகள், பிராண்ட் பெயர்கள், வர்த்தக பெயர்களுக்கு நிகராக பதிவு செய்யப்படாத வர்த்தக பெயரில் பல பொருட்கள் பிரபலமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஏன் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அவை பதிவு செய்யப்பட்ட வர்த்தக பெயராக கருதப்பட்டு அவற்றிற்குரிய GST வசூலிக்கப்படலாமா?

இது சம்மந்தமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் அந்தந்த அதிகார வரம்பிற்குரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

சட்டரீதியான தாக்கங்கள்:

இது தொடர்பாக CBIC அறிவிப்பு ஒன்றை 22.09.2017 அன்று அறிவிப்பு எண் 28/2017-Central Tax (Rate)இல் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில்:

  • அறிவிப்பு எண்.02/2017- Central Tax (Rate)ன் வழி வரி விலக்கு கோரப்படும் பொருட்களான பனீர், இயற்கை தேன், கோதுமை, மெசலீன், பார்லி, ஓட்ஸ், மக்காசோளம் போன்றவற்றிக்கு வரி விலக்கு வழங்கும் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
  • அறிவிப்பு எண்.02/2017ல் கொடுக்கப்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் பெயர் அல்லது வர்த்தக பெயரில் விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது அந்த வர்த்தக பெயர் மீதான உரிமை தானாகவே முன்வந்து விட்டுக்கொடுக்கப்படாமல் இருந்தாலோ அதன் மீதான வரி விலக்கு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த மாற்றத்தின் மூலம், தானாகவே முன்வந்து உரிமை விட்டுக்கொடுக்கப்படாத பொருட்கள் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் பெயர் அல்லது வர்த்தக பெயரை கொண்டிராத போதும் GSTக்கு உட்படுத்தப்படும் நிலை உருவானது.

என்ன செய்யலாம்?:

கீழ்கண்டவாறு செய்து வணிக பெயர் மீதான உரிமையை தானாக முன்வந்து விட்டு கொடுக்கலாம்: (அறிவிப்பு எண் 28/2017இன் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது)
1) இவ்வாறு சுய வர்த்தக பெயரில் வியாபாரம் செய்யும் நபர் சம்மந்தப்பட்ட அதிகார வரம்பில் உள்ள அதிகாரியிடம் முத்திரை தாளில் தான் அந்த வர்த்தக பெயர்/பிராண்ட் பெயர் மீதான உரிமையை தானாக முன்வந்து விட்டுதருவதாக வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும்.
2) இவ்வாறு சுய வர்த்தக பெயரில் வியாபாரம் செய்யும் நபர் தான் விற்கும் ஒவ்வொரு பொருளின் CONTAINER/BAGS/PACKETஇன் மேல் அழியாத மை கொண்டு உள்ளூர் வட்டார மொழி மற்றும் ஆங்கிலத்தில் அந்த வர்த்தக பெயர் மீதான உரிமையை விட்டு தந்ததாக குறிப்பிட வேண்டும்.

TNGSTPன் கருத்து:

இவ்வாறு பதிவு பெறாத வர்த்தக பெயர் கொண்ட பொருட்கள் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களில் அதிகமாக காணப்படும் ஒன்றே
இந்நாளில் அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், முன் கூட்டியே இந்த வாக்குமூலத்தை தயார் செய்து குறிப்பிட்ட அதிகாரியிடம் வழங்குதல் எந்த சட்ட சிக்கல்களும் உருவாகாமல் தடுக்கும்.
இது தொடர்பான தொழில்முறை சேவைக்கு, நீங்கள் எங்களை admin@tngstp.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

********************

It is a common understanding that trading of rice, wheat, pulses, flours of pulses, maize etc. is exempt vide Notification No.02/2017 Central Tax(Rate) dt.28.06.2017.If it is sold other than by way of putting it up in a unit container with a registered brand name/trade name, Will it suffice?Can we use our own brand name/trade name and sell the goods and treat the same as exempt?

Detailed explanation is given in this blog:

Significance of Brand Name:

As per the general labelling requirements of fssai Act, The name of the pre packaged food should include trade name or description of food contained in the package.So, Any goods sold should necessarily contain a trade name or brand name in the container/packets in which it is packed.

There are many brand names/ trade names prevail in and around Tamilnadu which are as famous as the products that has a registered brand name across India.

Can it be treated as a registered brand name/trade name and be subject to GST as per the rates applicable to them?

In this subject, many raids are conducted by the concerned Jurisdictional officers across many places in Tamilnadu and even in other parts of the country

Legal implications:

A Notification has been issued by CBIC in relation to this subject on 22.09.2017 vide Notification No. 28/2017-Central Tax (Rate)

In the said Notification:

  • For few goods exempted vide Notification No.2/2017 – Central Tax (Rate), dated the 28th June, 2017 like Chena or paneer, Natural honey, Wheat and meslin, Barley, Oats, Maize, Rice etc., changes were made for availing the exemption.
  • Exemption to the goods listed in the Notification is NOT available if it bears a registered brand name or a brand name on which an actionable claim or enforceable right in a court of law is available [other than those where any actionable claim or enforceable right in respect of such brand name has been foregone voluntarily, subject to the conditions as in the ANNEXURE I]

By this Amendment, Goods listed in the Notification will be subject to GST even though it does not bear a registered brand name if the actionable claim or enforceable right in respect of the brand name that is mentioned in the container/packets/bags of the goods is not foregone voluntarily

Possible Actions:

Following course of action shall be taken for foregoing an actionable claim or enforceable right on a brand name (As given in the Annexure to the Notification No.28/2017):

  1. The person undertaking the packing of such goods in unit containers which bears a brand name should file an affidavit with the Jurisdictional commissioner of Central tax that he is voluntarily foregoing his actionable claim or enforceable right on such brand name
  2. The person undertaking the packing of such goods in unit containers which bear a brand name should clearly print in indelible ink, both in English and the local language, that in respect of the brand name printed on the unit containers, he has foregone his actionable claim or enforceable right voluntarily, on each such unit containers.

TNGSTP’s Comments:

  • Both in Tamilnadu and other places of the country, these kind of products which doesn’t have a registered trademark/brand name is quite common in the retail stores.
  • Since there are many increasing instances of actions taken by the respective jurisdictional officers in this regard, It is better to draft an affidavit before any legal action is warranted and submit the same in CT office.
  • For any professional assistance for this process, you can reach us at admin@tngstp.com

MEMBER POLL is introduced in our website, Attend the poll from the home page of the website and provide your valuable feedback/suggestions, to serve you better.

CA Durai


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”