Search
Filter by Content Type
Generic Filters

Important outcomes of 35th GST Council Meeting/35ஆவது GST மன்ற குழு சந்திப்பின் முக்கிய முடிவுகள்

Jun 22, 2019
0
35th GST council meeting highlights35th GST council meeting highlights

நமது புது நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 35ஆவது GST மன்ற குழுவின் முக்கிய முடிவுகளை கீழே காண்போம்:

சட்ட செயல்முறைகள் தொடர்பான மாற்றங்கள்:

 1. CBIC 11/06/2019 அன்று வெளியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின் படி புதிய GST விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறை அக்டோபர் 2019 முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.( இது தொடர்பான குறும் விவரம் நமது வலைத்தளத்தின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது மேலும் இதுதொடர்பான விரிவான காணொளி விரைவில் வெளியிடப்பட உள்ளது)
 2. FORM GSTR-9, FORM GSTR-9A மற்றும் FORM GSTR-9Cயில் கணக்குகள் மற்றும் விவர அறிக்கைகளை சரி பார்க்கும் அறிக்கையை தாக்கல் செய்ய கடைசி நாள் 31.08.2019 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
 3. ஜூலை 2017 முதல் ஜூன் 2019ற்க்கான FORM GST ITC-04 (சில்லறை வேலை தொடர்புடையது) தாக்கல் செய்ய கடைசி நாள் 31.08.2019 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
 4. முந்தைய GST மன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்த தேவையான சட்ட மாற்றங்களை கொண்டு வர வேண்டும்( நாம் ஏற்கனவே நமது “GST வட்டி தொகை மொத்த மதிப்பிலா அல்ல நிகர மதிப்பிலா?” என்ற கட்டுரையில் குறிப்பிட்டது போல் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்)
 5. E -way பில் blocking செய்வது தொடர்பான CGST விதிகளின் Rule 138E முன்பு குறிப்பிட்டிருந்த 21.06.2019ற்கு பதிலாக 21.08.2019 முதல் செயல்பாட்டிற்கு வரும்.
 6. அறிவிப்பு எண் 02/2019ன் படி இணக்க வரியை தேர்வு செய்யும் கால அவகாசம்(சேவை புரிபவர்களுக்கான இணக்க வரி திட்டம்) 30.04.2019இல் இருந்து 31.07.2019 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள்:

 1. மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்புகள் மற்றும் காற்று விசையாழிகள் – வரி பொருத்துதல் மற்றும் தீர்மானிக்கும் குழுவின் தேர்வு மற்றும் பரிந்துரையின் பெயரில் முடிவு செய்யப்படும்.
 2. லாட்டரி – லாட்டரி வரிவிகிதம் தொடர்பான பல்வேறு ஆழ்ந்த குறிப்புகளை கருத்தில் கொண்டு சட்ட மேதைகளின் பரிந்துரையை பெற முடிவு செய்யப்பட்டது.

மற்றவை:

 1. தேசிய முறையற்ற லாபம் ஈட்டுவதை தடுக்கும் பிரிவின் அதிகாரிகளின் பதவி காலம் 2 வருடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 2. மின்னணு விலை பட்டியல் முறை படிப்படியாக B2B பரிவர்தனைகளுக்கு அறிமுகம் செய்யப்படும், முதல் கட்ட தொடக்கம் ஜனவரி 2020இல் இருந்து விருப்பதேர்வு முறையில் தொடங்கும்.
 3. சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து பொதுவான GST மேல்முறையீட்டு அமர்வு அமைக்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்த அனைத்து மாற்றங்களையும் நடைமுறைப்படுத்தும் அறிவிப்புகளின் விவரங்கள் அறிய இணைந்திருங்கள்!!

********************

The Key decisions taken in the 35th GST council meeting headed by our new Finance Minister Ms.Nirmala Sitaraman are listed for the ready reference of our users

LAW AND PROCEDURE RELATED CHANGES:

1) Based on the press release issued by CBIC on 11/06/2019 New GST return filing system will be issued in a phased manner from October 2019 (Brief poster of the same is hosted in the home page of our website and a detailed video to be released shortly)

2) Due date for furnishing FORM GSTR-9, FORM GSTR-9A and reconciliation statement in FORM GSTR-9C to be extended till 31.08.2019.

3) Due date for furnishing the FORM GST ITC-04(relating to job work), for the period July, 2017 to June, 2019 to be extended till 31.08.2019

4) Certain amendments to be carried out in the GST laws to implement the decisions of the GST Council taken in earlier meetings (as mentioned in our earlier blogs – Whether Interest on GST to be charged on Gross basis or Net basis may be given effect by a Notification in coming days)

5) Rule 138E of the CGST rules, pertaining to blocking of e-way bills on non-filing of returns for two consecutive tax periods, to be brought into effect from 21.08.2019, instead of the earlier notified date of 21.06.2019

6) Last date for filing of intimation, in FORM GST CMP-02, for availing the option of payment of tax under Notification No. 2/2019 (Composition scheme for service providers), to be extended from 30.04.2019 to 31.07.2019

RATE RELATED CHANGES:

1) Electric Vehicles and Solar Power Generating Systems and Wind Turbines – Fitment committee examination and recommendation is sought.

2) Lottery – After deliberations on the various issues on rate of lottery, the Council recommended for a legal opinion of Learned Attorney General.

OTHERS:

1) The tenure of National Anti-Profiteering Authority has been extended by 2 years.

2) Electronic invoicing system to be introduced in a phase-wise manner for B2B transactions, The Phase 1 is proposed to be voluntary and it will be rolled out from Jan 2020.

3) Common State Bench for the Goods and Services Tax Appellate Tribunal (GSTAT) for the States of Sikkim, Nagaland, Manipur and Arunachal Pradesh

 

Stay Connected for updates on Notifications which will give effect to the proposed changes!!

CA Durai

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”