Search
Filter by Content Type
Generic Filters

IS ALL ITeS SERVICES ARE INTERMEDIARY SERVICES?/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து சேவைகளும் இடைத்தரகர் சேவைகளா?

Is all ITeS services are Intermediary services

கால் சென்டர், BPO சேவைகள் போன்ற மிகவும் பிரபலமான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறையின் சில முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருவதாக இந்த கட்டுரை அமையும்:

யார் இடைத்தரகர்?

IGST சட்டத்தின் பிரிவு எண் 2(13)இல் இடைத்தரகருக்கான வரையறை கொடுக்கப்பட்டுள்ளது, அதன் விளக்கம் மற்றும் அந்த சேவைகள் பற்றிய ஆழமான ஆய்வு நமது வலைத்தளத்தின் “இடைத்தரகர் சேவை ஏற்றுமதி இல்லை” என்னும் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது, அந்த கட்டுரையை படித்தால் இந்த பதிவை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள்(ITeS) என்றால் என்ன?

ITeS சேவைகள் GST சட்டத்தில் வரையறை செய்யப்படவில்லை, ஆனால் வருமான வரி சட்டத்தின் 10TA விதியில் கொடுக்கப்பட்டுள்ளது

அதன்படி ITeS சேவைகள் என்றால் தகவல் தொழில்நுட்பத்தை முக்கியமாக சார்ந்து வழங்கப்படும் கீழ்க்கண்ட outsourcing சேவைகள் என்று பின் அலுவலக நடவடிக்கைகள், அழைப்பு மையங்கள் அல்லது தொடர்பு மைய சேவைகள், தகவல் செயலாக்கம் மற்றும் தகவல் சுரங்கம் போன்ற 15 சேவைகள் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகள் மட்டும் இதில் அடங்காதென்று வழங்கப்பட்டுள்ளது.

எல்லா ITES சேவைகளும் இடைத்தரகர் சேவைகளா?

ITeS  சேவைகள் வழங்குபவர் இந்தியாவில் இருந்து கொண்டு வெளிநாட்டில் உள்ள தனது வாடிக்கையாளருக்கு சேவை வழங்கும் சூழல்கள் இருக்கும், அத் தகைய சூழல்களையும் அதை கையாள வேண்டிய வகை குறித்தும் CBIC 18.07.2019 அன்று சுற்றறிக்கை எண் 107/2019 – Central Taxஇல் விளக்கத்தை வழங்கியுள்ளது, அதனை காண்போம்:

சூழல்கள்

சேவைகளின் இயல்பு

இடைத்தரகர் சேவையா?

ஏற்றுமதியின் பயன்களை பெற முடியுமா?

மேலும் சில விவரங்கள்

சூழல் – 1 பின் அலுவலக சேவைகள் வழங்குதல் சொந்தமாக வழங்குவதால், இடைத்தரகர் சேவை இல்லை இத்தகைய சேவைகள் இடைத்தரகர் சேவைகளாக கருதப்படும் (IGST சட்டத்தின் பிரிவு எண் 2(6) இல் வழங்கியுள்ள conditions பூர்த்தி செய்யும் பட்சத்தில்) வாடிக்கையாளரின் வாடிக்கையாளருக்கு நேரடியாக சேவைகளை வழங்கினாலும் தானாகவே அந்த சேவைகளை வழங்குவதால் இடைத்தரகர் ஆக மாட்டார்
சூழல் – 2 பின் அலுவலக சேவைகள் புரியும் ஒருவர் தனது வெளிநாட்டு வாடிக்கையாளர் அவருடைய வாடிக்கையாளருக்கு சேவைகள் புரிய துணை செய்தல் எ.கா – போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவை  இத்தகைய சேவைகள் இடைத்தரகர் சேவைகள் ஆகும் இடைத்தரகர் சேவை என்பதால் ஏற்றுமதியாக கொள்ள முடியாது சரக்குகள் அல்லது சேவைகள் விநியோகம் செய்யப்படுவதற்கு துணை சேவைகள் செய்வதால் இது இடைத்தரகர் சேவை ஆகும்.
சூழல் – 3 பின் அலுவலக வேலைகளும் செய்து கொடுத்து வெளிநாட்டில் உள்ள வாடிக்கையாளர் சரக்குகள் மற்றும் சேவைகள் விநியோகம் செய்வதற்கு துணை சேவைகள் புரிதல் குறிப்பிட்ட சேவையின் சூழ்நிலை பொறுத்து தீர்மானிக்கபடும், இரண்டுள் எது பிரதானமானது அல்லது முக்கியமானது என்பதை பொறுத்து அமையும் பிரதான சேவை இடைத்தரகர் சேவையா என்பதை பொறுத்து அமையும் ஒரு விநியோகத்திற்கு மற்றொன்று வேறுபட்டு இருக்கும்

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய கூறுகள்:

இந்த சுற்றறிக்கையை ஒரு SEZ அல்லது FTWZஇன் தரப்பில் பார்த்தால், சூழல் 2 அவற்றிற்கு வருமா போன்ற குழப்பங்கள் வரும், SEZ அந்த சேவையை புரியும் போது இடைத்தரகர் சேவை என கொள்ள வேண்டுமா அல்ல ஏற்றுமதி என கொள்ள வேண்டுமா போன்ற கேள்விகள் வரும்.

பொதுவாக, இந்த ITeS சேவைகள் பெரிதும் SEZஇல் இருந்தே வழங்கப்படுகிறது மேலும் அவ்வாறு வழங்கப்படும் போது அவை zero rated supply என வழங்கப்பட்டு ஏற்றுமதியாகவே கருதப்படும்.

இத்தனை விஷயங்களை கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த சுற்றறிக்கை பெரிதும் DTAவில் இருந்து வழங்கப்பட்ட ITeS சேவைகளுக்கானது என்றே தோன்றும்.

**********************

This blog is a brief yet lucid explanation of the answers for few important questions related to the services of the ever popular Information Technology enabled Services(ITES) such as call center, business process outsourcing services, etc. and “Intermediaries” to overseas entities

Who is Intermediary?

Intermediary has been defined in Section 2(13) of the IGST Act, 2017, definition of intermediary and an in-depth analysis of their services is provided in one of our old blogs – “இடைத்தரகர் சேவை ஏற்றுமதி இல்லை” do give a reading to have a better understanding of this blog.

What is Information Technology enabled Services (ITeS services)?

ITeS is not defined under GST laws, but it is defined under Rule 10TA of the Income tax rules  which pertains to Safe Harbour Rules for international transactions.

It defines ITeS services as- “Information technology enabled services” means the following business process outsourcing services provided mainly with the assistance or use of information technology, namely:— (i) back office operations; (ii) call centres or contact centre services; (iii) data processing and data mining etc.,

A list of 15 such services are defined as ITeS services and research and development services whether or not in the nature of contract is specifically excluded.

IS ALL ITES SERVICES ARE INTERMEDIARY SERVICES?

There may be various possible scenarios when a supplier of ITeS services located in India supplies services for and on behalf of a client located abroad, A Circular has been issued by CBIC on 18.07.2019 vide Circular No.107/2019 – Central Tax to provide clarity for doubts related to supply of Information Technology enabled Services (ITeS services)

Such scenarios are explained as under:

SCENARIOS

NATURE OF SERVICES

WHETHER AN INTERMEDIARY?

CAN THEY AVAIL THE BENEFIT OF EXPORT OF SERVICES?

REMARKS

Scenario – 1 Supply of back end s/ervices Not an Intermediary, as it is provided on his own account Yes, Services are considered as Export of services (subject to the satisfaction of conditions provided in Section 2(6) of the IGST Act) Even if the services are provided to customers of the clients on clients‟ behalf, but supplied the services actually on his own account, the supplier will not be categorized as intermediary
Scenario – 2 supplier of backend services located in India arranges or facilitates the supply of goods or services or both by the client located abroad to the customers of client.

Eg – pre-delivery, delivery and post delivery of supply such as logistics support

Such services are Intermediary services Cannot be considered as export of services as it is merely an Intermediary service provided from India Since the services is merely arranging or facilitating the supply of goods or services or both between two or more persons, it is treated as an Intermediary service.
Scenario – 3 Supplies back end services along with arranging or facilitating the supply of various support services during pre-delivery, delivery and post-delivery of supply for and on behalf of the client located abroad Have to be determined based on the facts and circumstances of each case and would be determined keeping in view which set of services is the principal / main supply. Depends upon whether the principal supply qualifies to be an intermediary service Differs from case to case basis

POINTS TO PONDER:

If the said circular is discussed from a SEZ/FTWZ point of view, confusions will arise as to whether in scenario – II, if the same is provided from SEZ will it be treated as an Intermediary and will not be considered as an export?

Generally, these ITeS services are provided to a larger extent from SEZs and their services are generally classified as a zero rated supply and qualify to be an export of services.

In that case, this circular seems to hold good in cases where ITeS services are provided from a Domestic tariff area.

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”