Search
Filter by Content Type
Generic Filters

IS INTEREST ON DELAYED PAYMENTS IS TAXABLE UNDER GST???/தாமதமாக பணம் செலுத்தியதற்கு கட்டிய வட்டி – ஜிஎஸ்டி உண்டா?

GST Applicability for Interest on delay paymentsGST Applicability for Interest on delay payments

எந்த சட்டப்படி Interest வசூலிக்க வேண்டும்?

தாமதமாக செலுத்தப்பட்ட தொகைகள் சட்டம், 1993(The Delayed Payment Act, 1993) இயற்றப்பட்ட ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை செலுத்தாவிட்டால் பணத்தை செலுத்த அதிகபட்ச கால அளவாக 120 நாட்கள் வழங்கி உள்ளது.அவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் SBIன் முதன்மை கடன் விகிதத்தில் 150%த்தை வட்டியாக விநியோகம் செய்பவர் வசூலிக்கலாம் என்றும் வழங்கியுள்ளது.அதே போல், MSMED சட்டம், 2006ன் பிரிவு 15ன் படி MSMEயில் பதிவு பெற்ற ஒவ்வொரு விநியோகஸ்தரும் செய்த விநியோகத்திற்கு 45 நாட்கள் பணம் செலுத்துவதற்கு நேரம் வழங்கப்படும் , அவ்வாறு செலுத்தாவிட்டால் பிரிவு 16ன் படி RBI வங்கி விகிதத்தின் 3 மடங்கு தொகையை கூட்டு மாத வட்டியாக வசூலிக்கலாம் என்றும் வழங்கியுள்ளது.இப்போது இத்தகைய வட்டிதொகைக்கு GST வருமா என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்

தாமதமாக செலுத்திய தொகைக்கு கட்டிய வட்டி தொகை – GST க்கு உட்படுமா?

CGST சட்டத்தின் பிரிவு 15ன் படி, செலுத்த வேண்டிய வரித் தொகை வெறும் விற்பனை தொகையில் மட்டும் கணக்கிடப்பட கூடாது, அரசு வழங்கிய மானியம் தவிர விநியோகம் செய்பவர் மற்ற சட்டத்தின் கீழ் வசூலித்த வரி, பிற கட்டணங்கள், செலவினங்கள், வட்டித் தொகை, தாமதக் கட்டணம் மற்றும் அபராதக் கட்டணமும் உள்ளடக்கி கணக்கிட வேண்டும்.இவ்வாறு, பிரிவு 15(1)(d)யில் வட்டி மற்றும் தாமதத் தொகையும் அடங்குவதால் அவையும் விநியோகத்தின் மதிப்பாக கருதப்பட்டு GST க்கு உட்படும்.

இத்தகைய வட்டித் தொகைக்கு Time of supply (விநியோகத்தின் நேரம்) என்ன?

இத்தகைய பரிவர்த்தனைக்கான Time of supply பிரிவு 12(6)ன் படி தீர்மானிக்கப்படும்.அந்த பிரிவின் படி வட்டிதொகை, தாமதத்தொகை, அபராதம் போன்ற விநியோகத்திற்கு செய்த கூடுதல்களுக்கு அத்தகைய தொகையை விநியோகஸ்தர் பெற்ற நாள் தான் விநியோகத்தின் நாள் ஆகும், அவ்வாறு பெற்ற பின் அதற்கு GST செலுத்த வேண்டும்.

இத்தகைய வட்டித்தொகைக்கு எத்தனை சதவிகித GST வரும்?

வட்டித் தொகையை பெற்ற பின், முதன்மையாக விநியோகம் செய்த விநியோகங்கள் எத்தனை சதவீத GSTக்கு உட்படுத்த பட்டதோ அதே GST சதவிகிதம் இந்த தொகைக்கும் வரும்.மேலும் அவை, Exempted அல்லது NIL rated விநியோகமாக இருந்தால், அந்த வட்டிதொகையும் அவ்வாறே கருதப்படும்.

இத்தகைய விநியோகத்தின் மதிப்பிற்கும் வரித் தொகைக்கும் அடிப்படை ஆவணம் என்ன?

விநியோகம் செய்பவர் இந்த வட்டி தொகை/தாமதத் தொகை பெற்றதற்காக ஒரு ஆவணம் தயார் செய்ய வேண்டும். இத்தகைய நேரங்களில், முதன்மையாக தாக்கல் செய்த Invoice மதிப்பு பெற்று கொண்ட மொத்த தொகையை விட குறைவாக இருக்கும் என்பதால் விநியோகம் செய்தவர் அந்த தொகையை பெற்று கொண்ட நாளன்று ஒரு Debit note உருவாக்க வேண்டும்.மேலும், Invoice இல் இருந்து மாறுபடும் வரி மதிப்பினை GSTR -1இல் காண்பித்து GSTR -3B யில் வரித் தொகையை செலுத்த வேண்டும்.

***************

Statutory Implications to collect Interest:

The Delayed Payment Act, 1993 prescribes the maximum credit period of 120 days, if the buyer has failed to make payment within the stipulated period as per the contract made with the Supplier and the interest will be charged at 150% of the primary lending rate of SBI, if payment date exceeds the maximum credit period for the welfare of the supplier. As per the section 15 of MSMED Act , 2006 any supply made by the supplier registered under the MSME should be given a credit period of 45 days irrespective of the agreement with the buyer and if the credit limit exceeds, then with reference to Section 16 of the said Act, the compounded monthly interest on delayed payment is at the rate of 3 times from specified RBI bank rate. GST implications of Interest received on such delayed payments is discussed in this Article

Whether Interest on delayed payments – chargeable under GST?

With reference to the valuation provisions of GST, Section 15 of the CGST act explains that the tax liability has to be calculated on the transactional value which is not sole consideration made but also includes any other taxes, duties, cesses, fees and charges levied under any law for the time being in force other than the GST Act, incidental expenses, interest or late fee or penalty for delayed payment of any consideration for any supply and subsidies directly linked to the price excluding subsidies provided by the Central Government and State Governments. Thus Section 15 (1) (d) includes the interest, late fee or any other penalties charged by the Supplier to the customer on the delayed payment which will be considered as the transactional value and such additional amount is subjected to GST.

What is the time of supply for such delayed payments?

The Time of Supply for such transactions is determined under the Section 12 (6) of the CGST Act. This section explains that the time of supply to the extent any additions made to supply by way of interest, late fee or penalty for delayed payment of any consideration in relation to supply of goods or services is the date when the supplier receives such addition in value for the supply made by him and here the date of supply indicates the date on which the supplier receives the payment with respect to such supply. Thus the interest amount will be added as the transactional value, subject to which GST is applicable.

What is the rate at which the delayed payments should be taxed?

Once the time of supply is determined, The GST will be charged at the rate with reference to original invoice tax rate. If the interest is received for the exempted or NIL rated sales, then the tax rate for such sales will be considered as exempted or nil rated.

What is the Documentary evidence for the value and tax amounts of delayed payments?

The Supplier has to raise a documentary evidence for the interest on delayed payment which he has received on the supply. Since the actual tax invoice value will be less than the actual amount received, the supplier has to raise the debit note on the date on which he had received the payment with respect to that supply made and for such difference, regular tax liability has to be discharged in their GSTR 1 and GSTR 3B.

 

Shree Raksha B.Com; CA Final Aspirant

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”