Search
Filter by Content Type
Generic Filters

New Judgement on the issue of payment of Interest on late GST amount – Gross or in Net tax?/GST வட்டி தொகை மொத்த மதிப்பிலா அல்ல நிகர மதிப்பிலா? – ஒரு புதிய தீர்ப்பு

Interest on GST - Gross or net_Madras High court judgement

தாமதாக செலுத்தப்படும் GST தொகைக்கான Interest(வட்டி) மொத்த வரித் தொகையில் கணக்கிட வேண்டுமா அல்ல ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்படுத்தாத உள்ளீட்டு வரி வரவை கழித்த பின் உள்ள நிகர தொகையில் கணக்கிட வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் பரவலாக நாடெங்கும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நமது TNGSTP வலைத்தளத்தில் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரையில் Megha Engineering வழக்கில் Telengana High Court வழங்கியுள்ள தீர்ப்பு விளக்கப்பட்டது.அந்த தீர்ப்பை கொண்டு வரித்துறை வட்டி தொகையாகவே 46,000 கோடி வசூலிக்க முடிவு செய்தது.இந்நிலையில் அந்த தீர்ப்பிற்கு எதிராக சமீபத்தில் Madras High Court Reflex Industries என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி வரி செலுத்துபவர்களின் சுமையை குறைத்தது மட்டுமின்றி, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை விளக்கியுள்ளது.அதன் தெளிவான விளக்கத்தை இந்த கட்டுரையின் வழி அறிவோம்:

“Delayed “ என்பதன் சரியான பொருள் (para 12 of the Madras High Court Order):

வரித் தொகையை இழந்த மாநிலங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட CGST சட்டத்தின் பிரிவு 50 ஏற்கனவே வரி செலுத்துபவரின் கணக்கில் போதுமான வரித்தொகை வைத்துள்ள மாநிலங்களுக்கு பொருந்தாது என மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வழங்கியுள்ளது.மேலும், உண்மையில் எந்த தொகை தாமதமாக செலுத்தப்பட்டுள்ளது என்று அறிதல் அவசியம், விற்பனைக்கான GST தாமதமாக செலுத்தப்பட்டு இருந்தாலும் Electronic credit ledgerஇல் மீதம் உள்ள ITC தொகை வரையான வரித்தொகை குறித்த நேரத்தில் அரசிடம் செலுத்திய தொகையாகும்.அதனால் Interest மொத்த வரியில் கணக்கிடப்பட கூடாது எனவும் வழங்கியது.

புதிய விதிமுறைகளின் பயன்பாடு:

2019ன் நிதி சட்டம் CGST சட்டத்தின் பிரிவு எண் 50இல் மாற்றம் கொண்டு வந்து தாமதமாக செலுத்தும் வரிக்கான Interest நிகர பண மதிப்பில் செலுத்த வேண்டிய தொகைக்கு மட்டுமே வசூலிக்கபட வேண்டும் என்று வழங்கியது.ஆனால் இது பல மாநிலங்களில் அமல் படுத்தப்படவில்லை மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை வழங்கிய அறிவிப்புகளால் குழப்பங்கள் உருவானது.01.08.2019 முதல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விதிமுறை சில குழப்பங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் மாற்றப்பட வேண்டியுள்ளது என்று Madras High court வலியுறுத்தியது.அந்த திருத்தும் தெளிவு படுத்தும் விதமாகவும் மேலும் முன் குறிப்பிட்ட தேதியில் இருந்தே அமலுக்கு வரும் என்றும் வழங்கியது.

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட சூழல்:

Megha Engineering வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது CGST சட்டத்தின் பிரிவு எண் 50இல் கொண்டு வரப்பட்ட மாற்றம் GST மன்ற குழுவின் பரிந்துரையாக மட்டுமே இருந்தது, சட்டமாக இயற்றப்படவில்லை.மன்ற குழுவின் பரிந்துரை வெறும் பரிந்துரையாகவே உள்ளதாக வழங்கப்பட்டது ஆனால் தற்போது 2019 நிதி சட்டத்தின் மூலமாக இது சட்டமாக மாற்றப்பட்டு வரி செலுத்துபவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

TNGSTP கருத்து:

Madras High Courtன் தீர்ப்பு மற்றும் நீதிமன்றம் கருதியுள்ள முக்கிய கூறுகளை கருத்தில் கொண்டு வரி செலுத்துபவர்களுக்கு சாதகமான மாற்றம் CBIC அறிவிப்பாக வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

******************

Across the length and breadth of India, one topic that was consuming everyone’s attention of late is as to whether Interest on delayed payment of Taxes is leviable on gross liability or cash liability. Revenue Department was very clear in targeting collection of  Rs.46,000 crore in this context, inspired by Telengana High court Judgement in Megha Engineering case, the gist of which is reduced as ablog by TNGSTP earlier. In contrast to this judgment there came Madras High Court Judgement in 6th Jan 2020 in case of Reflex Industries, not only gave a big relief for taxpayers worries; also handled the key aspects in style. Lets have look at few dimensions to understand this better.

Operational meaning of “Delayed” : (para 12 of the order)

Section 50 which is specifically intended to apply to a state of deprival cannot apply in a situation where the State is possessed of sufficient funds to the credit of the assessee. It’s indeed important to note what is really delayed and become loss to the government. We might have made the outward tax payment late but to the extent of ITC balance lying in my credit ledger the tax is not considered as delayed. Thus, interest doesn’t arise on gross liability.

Application of new proviso:

Finance Act 2019 brought out the amendment to sec 50 and inserted a proviso that interest on delayed payment of tax is payable only cash liability. Although it was not notified by respective states causing a confusion coupled with notices issued by the department. Madras Hight court re-iterated that The proviso, as per which interest shall be levied only on that part of the tax which is paid in cash, has been inserted with effect from 01.08.2019, but clearly seeks to correct an anomaly in the provision as it existed prior to such insertion. It should thus, in my view, be read as clarificatory and operative retrospectively

Telegana HC Judgement:

Around that time, New proviso introduced through Finance Act 2019 was only press release recommendation of GST Council but not enacted as part of the law. ‘unfortunately, the recommendations of the GST Council are still on paper. Therefore, we cannot interpret Section 50 in the light of the proposed amendment’. Today, however, the amendment stands incorporated into the Statute and comes to the aid of the assessee.

TNGSTP’s views:

Considering the judgement given by the Madras High Court and considering the analysis put forth on the key issues by the court, it is expected that the requisite notification will be passed by the CBIC favourably for the assessees.

CS Srividya


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”